படித்தது / பிடித்தது - 96

பூவொன்று

மழைத்துளியென
மஞ்சள் மலர்களை
உதிர்த்துக் கொண்டிருந்தது
அம்மரம்

நிழலுக்கென ஒதுங்கிய பேருந்து
அதில் சில மலர்களை
முன்கண்ணாடியில் ஏந்திச்சென்றது
கண்ணாடி வழுக்கிய பூக்கள்
சாலையில் விழுந்து நசுங்கின

வைப்பர் புறக்கணித்த
பூக்கள் சில
ரோட்டோரம் சிதறின
பெண்டுலமாக ஆடும் வைப்பரில்
சிக்கிய சில பூக்கள்
நைந்து கிழிந்தது

பின்னும் வைப்பர்
கிட்டிய பூக்களை விடாது
அலைகழித்து
கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது

எதுவும் செய்யவியலாது
பூக்கள் சிதைவுறும் காட்சி
மனசுக்குள் குமைய
நிறுத்தம் வந்ததும் இறங்கி நடக்கிறேன்

- லாவண்யா சுந்தரராஜன்

நன்றி: உயிரோடை

2 comments:

உயிரோடை said...

நன்றி CSK

கனாக்காதலன் said...

அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.