பரத்தை கூற்று : சில கருத்துக்கள்

பரத்தை கூற்று வெளியீடு பற்றி போகிற போக்கில் தொட்டுச் செல்லும் ஒரு பதிவு:

http://koodu.thamizhstudio.com/kadhaisolli_9.php

கதை சொல்லி - சாரு நிவேதிதா (Charu Nivedita)

Posted by லிவி

முன்னர் ஒருமுறை சென்னை கே.கே நகரில் உள்ள "டிஸ்கவரி புக் பாலஸில்"(Discovery book palace) புத்தக வெளியீட்டு விழாவுக்கு சாரு வந்திருந்தார். அங்கு பள்ளி நாட்களின் வகுப்பறைத் தோழனை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்."பரத்தை கூற்று" புத்தகத்தை வெளியிட்டு சாரு பேசத் தொடங்கினார். அது வரையில் என்னிடம் கதைத்துக் கொண்டு இருந்தவன், திடீரென முழு கவனமும் சாரு பக்கம் திரும்பியது. சாரு பேச்சைக் கேட்க தொடங்கியதும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்.சாருவின் ஒவ்வொரு அசைவையும் அவன் ரசிப்பவனாக இருந்தான். சாரு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சமர்பணம் என்பதில் தொடங்கி அவர் நடையில் விமர்சித்துக் கொண்டே போனார் (அவர் பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடிமக்களா?). என்னைப் புறந்தள்ளியவனாக அவரின் பேச்சிலே அத்தனை ஆனந்தத்தைக் கண்டான். அவன் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசகன் அல்ல.ஆனால் அவனுக்கு சாருவை பிடித்தருக்கிறது.அவரைத் தொடர்ந்து இணையத்தில் வாசிக்கிறான்.

*******

பரத்தை கூற்று வெளியீட்டில் சாரு பேசியதைக் குறித்து இப்பதிவின் பின்னூட்டத்தில் காணக்கிடைக்கிறது (சுருக்கமாக என் கருத்து : சாரு பேசியதில் எனக்குத் திருப்தியே):

http://kaveriganesh.blogspot.com/2010/12/7.html

சாரு நிவேதிதாவின் 7 புத்தக வெளியீடு--EXCLUSIVE புகைப்படங்கள்

Bullet said...
சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல் 'தேகம்' நாவலை பற்றி பேசினா‌‌‌ர். இப்பொழுது மிஷ்கின் 'தேகம்' நாவலை பற்றி பேசாமல் நந்தலாலா பற்றி பேசுவதாக சாரு குறை சொல்லுகிறார். ங்கொய்யாலா..எந்த ஊரு நியாயம் இ‌து?

Anonymous said...
bullet sonnadu corect than.Nanum andha kootathuku chendrinden. 40km dhooram chendru emartram aanen sukumaran

Anonymous said...
புல்லட்
அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகார்த்திகேயன் கவிதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட யாராவது இப்போது வாயை திறப்பார்களா? புல்லட்
உங்கள் நண்பர் நர்சிம் பதில் சொல்லட்டும்.

மணிஜீ...... said...
//சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல் 'தேகம்' நாவலை பற்றி பேசினா‌‌‌ர். இப்பொழுது மிஷ்கின் 'தேகம்' நாவலை பற்றி பேசாமல் நந்தலாலா பற்றி பேசுவதாக சாரு குறை சொல்லுகிறார். ங்கொய்யாலா..எந்த ஊரு நியாயம் இ‌து?//
மிஸ்டர் புல்லட்..
சும்மா வாய்க்கு வந்ததை பேச வேண்டாம்..சாரு பரத்தை கூற்றை பற்றி விரிவாகவே பேசினார்.. சில கவிதைகளை படித்து கருத்தும் கூறினார்.. நான் தான் விடீயோ எடுத்தேன்..ஆதாரம் இருக்கிறது..நீங்கள் எழுதியதை பார்த்துதான் ஒருவர் பஸ்சில் இதை சொல்லி வாபஸ் வாங்கி கொண்டார்..

மணிஜீ...... said...
//புல்லட்
அப்படி போடு அருவாளை. கரெக்ட்ப்பா. சரவணகார்த்திகேயன் கவிதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அந்த விழாவில் கலந்துகொண்ட யாராவது இப்போது வாயை திறப்பார்களா? புல்லட்
உங்கள் நண்பர் நர்சிம் பதில் சொல்லட்டும்//
அடையாளத்தோடு வாருங்கள் அனானி..வீடியோவை போட்டு காட்டுகிறேன்..மேலும் அந்த விழாவிற்கு நிறைய சிறு குழந்தைகள் வந்திருந்தார்கள்..சாரு தன் பெச்சிலும் அதை குறிப்பிட்டு அடக்கி வாசித்தார்.. அந்த நூல் பரத்தை கூற்று கவிதை தொகுப்பு அப்படியானது...

மணிஜீ...... said...
சும்மா விழாவிற்கு வராமல் கும்மியடிக்க வேண்டாம் நண்பர்களே...

காவேரி கணேஷ் said...
அருமை மணிஜி.
சரவண கார்த்திகேயன் விழாவிற்கு நான் வரவில்லையாதலால் பதிலளிக்கவில்லை.
நன்றி மணிஜி

Bullet said...
மணிஜீ
அந்த வீடியோவை கட் செய்யாமல் அப்படியே பிளாக்கில் பிரசுரிக்கவும். சாரு CSK வின் பரத்தை கூற்றிலிருந்து இரண்டு கவிதைகளை மட்டும் வாசித்தார். (சின்ன பசங்க காதை பொத்திக்கொள்ளுங்க என்றார். மிஷ்கின் சரோஜாதேவி எ‌ன்று சொன்னது போல)
அந்த கூட்டம் முழுவதும் தேகம் நாவலை பற்றி பேசினா‌‌‌ர். பிறகு சமகால கவிதை தொகுப்பிலிருந்து (பிரம்மராஜன் தொகுப்பு) இரண்டு கவிதைகளை படித்தார். நான் படம் எடுத்தால் படத்தில் சீழ்பிடித்த யோனியை மட்டும் ஐந்துநிமிடத்துக்கு காட்சியாக காட்டுவேன் எ‌ன்றார். அந்த வீடியோவை கட் செய்யாமல் அப்படியே பிளாக்கில் பிரசுரிக்கவும். இதற்கு உரிய பதிலை-விளக்கத்தை சரவணகார்த்திகேயன் தரட்டும்.

Bullet said...
அந்த கூட்டத்தில் தசாவதாரம் பற்றி பேசினா‌‌‌ர். எந்திரன் பற்றி பேசினா‌‌‌ர். மிஷ்கினை கடவுள் எ‌ன்றார். உங்களிடம் உள்ள வீடியோவை அப்படியே வெளியிடவும். பளீஸ்.

Bullet said...
சரவணகார்த்திகேயன் - அந்த வீடியோ உங்களிடம் நிச்சயம் இருக்கும். உண்மையை நீங்கள் அப்படியே சொல்லவும். அந்த கூட்டத்தை சாரு அவரது தேகம் நாவலுக்கு விளம்பரப் படுத்திகொண்டார். உண்மையா? இல்லையா?

மணிஜீ...... said...
பரத்தை கூற்று 60 பக்கங்கள் கொண்ட ஒரு கவிதை தொகுப்பு..முதலில் சி.எஸ்.கேவுடன் தான் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பே தாந்தேயின் சிறுத்தை என்பதை பதிவு செய்தார்..பின் பிரம்மராஜன் கவிதை யும் வாசித்தார்.. பரத்தை கூற்றிலிருந்து இரண்டு கவிதைகளையும், சில மேற்கோள்களையும் கூறினார்.. சாரு சொன்னது போல் பரத்தை கூற்றை விரிவாக பேச அந்த மேடை பொருத்தமில்லை.. அந்த கவிதைகள் அந்த வகையானது.. தந்து தேகம் நூலைப்ப்ற்ரியும் பெசினார்.. இதில் என்ன தவறு இருக்கிறது.. உங்கள் கூற்று..அவர் பரத்தை கூற்றைப்பற்றி பேசவேயில்லை என்பதுதான்..அதற்குதான் நான் பதில் சொன்னேன்..உங்கள் முதல் கமெண்டை படித்துப்பாருங்கள் புல்லட்..இரண்டு மணிநேர நிழவை சுவராசியமாக பரத்தை கூற்று புராணமே பாடிக் கொண்டிருந்தால்...
மிஷ்கின் பேசியது வேறு...அதையும் , இதையும் ஒப்பிட முடியாது எனப்து என் கருத்து..விடீயோவை இங்கு ஏற்ற முடியாது.. கால அளவு அதிகமாக இருக்கிறது..அதனால்.. நீங்கள் சரவணகார்த்திகேயனை கேளுங்கள்..அவருக்கு நான் ஒரு காப்பி அனுப்பியிருக்கிறென்...பிடிக்கவில்லைஎன்பதற்காக போகிற போக்கில் தூற்றுவது வருத்தமாக இருக்கிறது நண்பரே...
நன்றி..
மணிஜி

மணிஜீ...... said...
சரவணனின் உறவினர்கள், அவர் குழந்தைகள் என்று நிறைய பேர் வந்திருந்தனர்..எவ்வளவு இலை மறை காய் மறைவாக பேச வேண்டுமோ..அப்படித்தான் பேசினார்..அதில் ஒன்றும் தவறு இல்லை.. சில கவிதைகளை குட்டவும் செய்தார்..மாஸ் ஆடியன்சுக்கு இந்த கவிதை(நேயர் விருப்பம் என்கிர கவிதை) பிடிக்கும் என்று சிலாகித்தார்..
சாருவுக்கு குடை பிடிக்கிறென் என்று நினைக்க வேண்டாம்.. கால் எத்தும் கழுதை என்ற தலைப்பில் என்னை விட அவரை யாரும் பகடி செய்திருக்க முடியாது..(அவரிடம் சொல்லி விட்டே செய்தது)

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி