Posts

மஜ்னு முதல் மாமாக்குட்டி வரை

Image
காதல் - எத்தனை இனிமை ததும்பும் ஒரு சொல்! எவ்வளவு இன்ப மயமான‌ ஒரு செயல்! காதலின் ஆதார குணம் பரஸ்பரத் தன்மை. ஆனால் காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி அனுபவத்தை அளிக்கிறதா? ஆணின் காதலும் பெண்ணின் காதலும் ஒன்று போலவேதான் நமது சமூகத்தால் அணுகப்படுகிறதா? காதலில் இருக்கிறதா சமத்துவம்? வரலாறு நெடுகிலும், புராணப் பக்கங்களிலும், இலக்கிய இடுக்குகளிலும் ஆண்களின் காதலானது கொண்டாடப்படாதது மட்டுமின்றி கண்டுகொள்ளப்படாதது மட்டுமல்லாது, கேலிக்கும் கிண்டலுக்கும் வசைக்கும் வெறுப்புக்கும் உள்ளாகியேதான் வந்திருக்கிறது. ஆணின் காதல் என்பது அவனது இதர‌ வெற்றிகளைக் காட்டி அடையும் ஒரு பரிசாகவே காலங்காலமாகவே இருந்து வருகிறது. இரண்டாமிடத்திலுள்ள ஒருவன் எப்படிப் பொன் பதக்கத்தை விரும்ப முடியாதோ, அதே போல் முதலிடத்தில் வந்த‌ ஒருவன் ஒருபோதும் வெள்ளிப் பதக்கத்தைக் கனவு கண்டு விட‌ முடியாது. அப்படி நடந்தால் அது ஒரு பிறழ்வு. இன்னும் சொன்னால் ஆண்களின் காதல் என்பது பெண்களுடனான போராட்டம் மட்டும் அல்ல‌, சக ஆண்களுடனான போரும்தான். அவனது காதலுக்கு ஆண்களுமே எதிரிகளே. ஆண் தான் காதலிக்க ஒரு பக்கம் ஆக மென்மையான கவிதைகளைப் புனைய வ...

ஓர் அழகியைக் கொண்டாடுவது எப்படி?

Image
பெண் என்கிற‌வள் ஆணுக்குச் சமமான உயிர்த்திரள்; வெறும் நுகர்வுப் பண்டம் அல்ல. அவள் திறமையை அங்கீகரித்து, வாய்ப்புகளை உறுதி செய்து, ஆளுமையை மதிக்கும் அதே சமயம் அவளது அழகினைக் கொண்டாடவும் தவறக்கூடாது. அழகு ஒருத்தியிடம் அதீதமாகக் கொட்டிக் கிடக்கையில் அது ஆராதனைக்கு உரியது. குறிப்பாக நடிகைகள், மாடலிங் செய்வோர் தம் அழகு ரசிக்கப்படவும், பரப்பப்படவுமே மிக‌ விரும்புகிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் திறமை என முன்வைப்பது பெரும்பாலும் அழகைத்தான். மலை உள்ளிட்ட இயற்கைக் கொடைகளோடும் இசை போன்ற‌ கலைச் சரக்குகளோடும் இணை வைத்துக் கொண்டாடத்தக்கது பெண்ணழகு. பலர் அதை ரகசியமாகவும் சிலர் பகிரங்கமாகவும் செய்கிறார்கள். ரசிக்கப்படுவதால் வெட்கப்படலாம்; ரசிப்பதற்கே கூட‌ வெட்கப்படுவதா! எப்படியோ பெண் ரசிப்புத் தொழில் சிற‌ப்பாகவே நடந்து வருகிறது. அழகென்றால் அன்னை தெரசா, பிடித்தவரே பேரழகு என்கிற உணர்ச்சிவசங்களைக் கடந்து பார்த்தால் அழகு என்பது ஒருவர‌து புறத் தோற்றம் மற்றும் உடல் மொழியினால் ஈர்க்கப்படுவதே. புறத்தோற்றம் என்பதில் ஒருவரது முகம், உடல் வடிவு எல்லாம் சேர்ந்து கொள்ளும். உடல் மொழியில் அசைவுகள, நகர்வுகள், குரலினிம...

'ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு' வாங்குவது எப்படி?

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு சி.சரவணகார்த்திகேயன் கிழக்கு பதிப்பகம் நாவல் | 912  பக்கங்கள் | ரூ.1000  வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 95000 45609   தொலைபேசியில் ஆர்டர் செய்ய: 94459 01234 / 94459 79797 / 044 - 4959 5818 ~ ஆன்லைனில் வாங்க‌ ~ https://www.amazon.in/dp/9390958431 (Rs.793) https://www.flipkart.com/aaditha-karikalan-kolai-vazhakku/p/itm710a5696e06eb (Rs.860) https://dialforbooks.in/product/9789390958436_/ (Rs.900) https://swasambookart.com/books/9789390958436 (Rs.920)  https://www.commonfolks.in/books/d/aditha-karikalan-kolai-vazhakku (Rs.950) https://www.panuval.com/adhitha-karikalan-kolai-vazhakku-10022080 (Rs.950) https://www.udumalai.com/quickview-aaditha-karikalan-kolai-vazhakku.htm (Rs.1000)  https://papercrest.in/books/aaditha-karikalan-kolai-vazhakku/ (Rs.1000)

தலைவி: சில குறிப்புகள்

Image
 (Last updated on August 29, 2024) ப்ரியங்கா மோகன் வெளியான திரைப்படங்கள் : 1) Ondh Kathe Hella (கன்னடம்) as அதிதி - மார்ச் 8, 2019 - ZEE5 2) Nani's Gang Leader (தெலுங்கு) as ப்ரியா - செப்டெம்பர் 13, 2019 - Prime Video / Hotstar (Tamil) 3) Sreekaram (தெலுங்கு) as சைத்ரா - மார்ச் 11, 2021 - JioCinema / YouTube (Kannada) / YouTube (Malayalam) 4) டாக்டர் (தமிழ்) as பத்மினி / மினி - அக்டோபர் 9, 2021 - Netflix / SunNxt 5) எதற்கும் துணிந்தவன் (தமிழ்) as ஆதினி - மார்ச் 10, 2022 - Netflix 6) டான் (தமிழ்) as அங்கயற்கண்ணி - மே 13, 2022 - Netflix 7)  டிக் டாக் (தமிழ்) as கீர்த்தனா - டிசம்பர் 29, 2023 8) கேப்டன் மில்லர் (தமிழ்) as வேல்மதி - ஜனவரி 12, 2024 9) Saripodhaa Sanivaaram (தெலுங்கு) as சாருலதா - ஆகஸ்ட் 29, 2024 உறுதி செய்யப்பட்ட திரைப்படங்கள் : 1) Brother (தமிழ்) - ஜெயம் ரவி படம்; எம். ராஜேஷ் இயக்கம் - Link 2) OG (தெலுங்கு) - பவன் கல்யாண் படம்; சுஜீத் இயக்கம் - Link 3) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? (தமிழ்) - தனுஷ் இயக்கம் நெடுநாளாகக் கிடப்பிலுள்ள‌ திரைப்படங்கள் : 1) M...

வானும் மண்ணும்

Image
சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போது "சங்கடம் தவிர்க்கிறேன்" என்றேன். ஆனால் அது கள்ள மௌனமாகத் தொனிக்கும் சங்கடமும் இருப்பதாக மறுயோசனையில் தோன்றிய‌தால் இக்குறிப்பினை எழுதப் புகுந்தேன். தவிர, என் நோக்கைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவு இருவரும் இருக்க மாட்டர் என்பதால் சங்கடத்துக்கும் இடமில்லை என்றே தோன்றுகிறது. முதலில் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் பற்றிய என் ஒட்டுமொத்த மதிப்பீடு சுருக்கமாக: எனக்கு இந்தப் பிறழ்வெழுத்து அல்லது Transgressive Writing பற்றி சர்வதேசிய அறிமுகம் ஏதும் கிடையாது. நான் அதை 'மீறல் எழுத்து' என்று வரையறை செய்வேன். வழமையான சமூக விழுமிய‌ங்களை உடைத்து வேறொன்றை முன்வைக்கும் எழுத்து. அதற்கு அதிர்ச்சி மதிப்பீடு உண்டு, ஆனால் அது நோக்கம் கிடையாது. பேசாப் பொருளைப் பேசத் துணிதல். பொதுவாக அது பாலியலாகவே இருக்கும். தமிழில் இதற்கு முன்னோடிகள் ஜி.நாகராஜன் மற்றும் தஞ்சை பிரகாஷ். சாரு அதிலேயே non-liner எழுத்தை முன்வைத்தார். அவர் தன் புனைவுகளில் பேசிய ...

ஜெயமோகன் எனும் ஞானபீடம்

Image
ஃபேஸ்புக் தீவிர விஷயங்களைப் பேச‌ உகந்த இடமில்லை. ஆனால் தீவிரங்களை எளிய போர்வையில் எழுதிப் பார்க்கலாம். அப்படிச் சில தினம் முன் நான் எழுதிய குறிப்பு இது: "தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்" என்ற பிரயோகம் சமகாலச் சூழலில் இரு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது: 1) ஜெயமோகனைக் குறிக்க 2) ஜெயமோகனைச் சீண்ட.” பகடியாகவோ புகழுரையாகவோ தெரிந்தாலும் கவனமான ப்ரக்ஞையுடன் எழுதியதே! என் கால் நூற்றாண்டு வாசிப்பின் சிற்றெல்லைக்குள் நின்றபடி பேசும் போது தமிழில் உருவான நவீன எழுத்தாளர்களுள் ஜெயமோகனே முதன்மையானவராக‌த் தெரிகிறார். என் போல் இங்கே பலர் உணர்ந்திருந்தாலும் இலக்கிய‌ முன்னோடிகளைக் குறைத்துப் பேசலாகாது என்ற தயக்கத்திலும் அவருக்கு வயதேறட்டும் என்றெண்ணியும் அமைதி காக்கலாம். நரையும் திரையுமே அங்கீகார அளவுகோல் என்பதுதானே நம் பண்பாடு! ஒட்டுமொத்த நவீனத் தமிழிலக்கியப் பரப்பிற்குமாக‌ இந்த இடத்தை ஜெயமோகனுக்கு அளிப்பதில் சிலருக்குத் தயக்கமிருந்தாலும் இன்று வாழ்கின்ற‌ தமிழ் எழுத்தாளர்களுள் அவரே முதன்மை ஸ்தானம் என்பதை எவரும் மானசீகமானவேனும் ஒப்புக் கொள்வர். (ஆனால் அதை வெளியே சொல்வதற்கு பழ‌ம்பகை, அரசியல் சார்...

நட்சத்திரமும் பட்டாம்பூச்சிகளும்

Image
"ப்ரியங்கா மோகன் அவ்வளவு ஒண்ணும் அழகா இல்லையே?"   "டாக்டர் பாரு."   (டாக்டர் படம் பார்த்த பின்)   "ப்ரியங்கா மோகன் அவ்வளவு ஒண்ணும் அழகா இல்லையே?"   "டாக்டர் பாரு."   *   'ஒரு நிமிடத்தில் ப்ரியங்கா மோகனை விரும்பத் தொடங்குவது எப்படி?' என்றுதான் இந்தக் கட்டுரைக்கு முதலில் தலைப்பிட்டேன். ஆனால் ரொம்ப சுயமுன்னேற்றத்தனமாக இருந்தது என்பதாலும், கவித்துவம் ஒரு சிட்டிகை குறைகிறது என்பதாலும் மாற்றினேன். ஆனால் இலக்கு அதேதான் - ஒரு டஜன் வீடியோக்கள் வழி அவரை எல்லோருக்கும் பிடித்துப் போகச் செய்வது! ப்ரியங்கா மோகனை முதன் முதலாக அக்டோபர் 10ம் தேதிதான் பார்த்தேன். டாக்டர் வெளியான‌ இரண்டாம் நாள் மாலை சுமார் 7:15 மணிக்கு பிவிஆர் வேகா சிட்டி அரங்கில். So Baby பாடலில் டாக்டர் வருண் முதன்முதலாக பத்மினியை பார்க்கும் போதுதான் ரைட்டர் சிஎஸ்கேவும் முதன் முதலாக ப்ரியங்காவைப் பார்க்கிறான். முகத்தில் ஒளியும் நிழலும் விளையாட்டு நிகழ்த்தும் காவியச் சாயை நிரம்பிய‌ நடனக் காட்சி! " தீக்குச்சி கிழித்த மின்னல்... / முகிலின் வெடிமருந்து பிளந்த இமைக்கணம்... " என்ற பிர...