Posts

பாலாவின் COME-BACK

Image
ஆரண்ய காண்டம் படத்திற்குத் தான் விமர்சனப்பதிவு எழுதுவதாய் ஆரம்பத்தில் திட்டம். ஆனால் அவன் இவன் படம் பற்றிய என் ஒற்றை ட்விட் டிற்கு வந்த பரவலான எதிர்வினைகள் திட்டத்தை திசை திருப்பி விட்டது. ஆனால் குறையொன்றுமில்லை. ஆரண்ய காண்டம் பற்றி நான் சொல்ல‌ நினைத்திருந்த கிட்டதட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் பதிவுலகமே ஒன்று கூடிக் கொண்டாடித் தீர்த்து விட்டது. போதாதற்கு சாரு வேறு ஜூலை மாத உயிர்மையில் பாராட்டவிருப்பதாய்த் தெரிகிறது. அதன் வியாபார வெற்றி பற்றித் தெளிவில்லை. ஆனால் அதை விட ஆக முக்கிய சங்கதியொன்று உண்டு - அது தமிழகத்தில் அறிவுஜீவிகளென அறியப்படுபவர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய மதிப்பீடு. இவ்விஷயத்தில் ஆரண்ய காண்டம் எகோகபித்த ஆதரவைப் பெற்று‌ நல்ல போஷாக்கான குழந்தையாக‌த் தான் வலம் வருகிறது. பாவம், அவன் இவன் தான் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சவலைப்பிள்ளை. இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். அவன் இவன் பட‌த்தை நான் எதிர்மறை எதிர்பார்ப்பினோடு தான் அணுகினேன். பத்து வருடங்கள் முன்பு அவர் எடுத்த இரண்டு நல்ல படங்களை மனதில் கொண்டு பாலா படம் பார்ப்பது ஒரு கடமை போல் என்ற அளவிலான மதிப்...

தற்கொலை முன்குறிப்பு

ஒரு தற்கொலையைப் போல் எளிதான சங்கதி ஏதுமில்லை ஒரு முத்தத்தைக் காட்டிலும் ஒரு முகச்சுழிப்பை விடவும் பைத்தியத்தின் மனம் போல் தர்க்கமற்ற‌ தர்க்கத்திலிருந்து கிளைக்கிறது அத‌ன் மீதூறும் நம் கருணையும் பிரேமையும் அடுத்தவரை எதிர்கொள்ளும் பேர‌வஸ்தையது மறைவதில் ரகசியமென ஒளிந்திருக்கிறது மரணித்தலின் சூட்சமச்சுவை மெல்லிய ஆன்மவலியோடு சாஸ்வத விடுதலை பெறும் அக்கண ஆனந்தத்தின் நிகர் புணர்ச்சியிலும் சாத்யமன்று சுய‌கொலையின் சுகந்தத்தை சில்க் ஸ்மிதாவிடம் அல்லது நாம் மிக‌ விரும்பும் பிறிதொரு நடிகையிடம் கேட்டறியலாம் உறுத்தலின்றிய‌தை நிகழ்த்த‌ கொஞ்சம் முட்டாள்தனமும் பிரபஞ்சம் துறந்த மறதியும் உடனடி தைரியமும் போதும் நாளை மறுநாள் நிச்சயமாய் உலகம‌ழியும் என்பது போல‌ அர்த்தம் களைந்த அவசரம் இருப்பின் இன்னமும் நன்று அதை விட மிக முக்கியமாய் நம் ப்ரிய‌த்திற்குரியவர்களை ஒருபோதும் அக்கணங்களில் மனதினுள் அனுமதிக்கலாகா *  என் வேண்டுகோள் எல்லாம் தற்கொலை செய்யும் முன்பு இக்குறிப்பினை ஒரு முறை துலங்கப் படித்து விடுங்கள்.

கவுச்சி வாடை

* மீண்டும் மீண்டும் வேண்டும் உப்புப் பொரிந்தபடி மிதக்கும் சதைத்திரட்சியின் ஈர‌ வாசம். * சொற்களில் இல்லை கலவி காட்சியில் இல்லை கலவி கலவியிலும் இல்லை கலவி. * கொழுத்த மீன் பிடிக்கத் தலை குனியும் கொக்கு கணக்காய்த் துடிக்கிறது வெட்கங்கெட்ட வேட்கை. * எள்ளி நகைத்திடலாம் அள்ளித் தூற்றிடலாம் கொள்ளியும் வீசிடலாம் - காறியுமிழ் காமம் தானே! * எல்லாம் முடிந்து களைத்த‌ ஒற்றைப் பெருமுச்சுடன் மல்லாக்கப் படுக்கையில் துளையிட்ட பலூன் போல் சிறுத்துப் போய்க்கிடக்கிறது உடம்புரசுமிந்த ஆதிய‌ரிப்பு. *

பெயர‌ற்ற வரிகள்

* சற்று முன்பு எழுதப்பட்ட இந்த‌ வரி என்னுடையதா? * பதில்களால் வெட்ட வெட்ட‌ கேள்விகளில் கிளைக்கிறது வாழ்க்கை. * அதிஅற்புத‌ங்கள் பல்கிப்பெருகிட அருகிக்குறுகின‌ சாதாரணங்கள். * எப்போதும் எங்கும் எவ்விஷயத்திலும் தேவைப்படுகிற‌து - துளி தூய விஷம். * நேற்றே வந்திருப்பேன் நாளை கிளம்பி விடின்; இப்போது இன்றாகிறது. *

கண்ணீரும் புன்னகையும்

* நிறைய சிரிக்கிறார்கள் - நானோ புன்னகையை யாசித்துக் கிடக்கிறேன். * எத்தனை சிரிப்பும் மறைந்து விடும்; சிறுகண்ணீரதை மறக்கவியலுமா? * மற்றவரின் உதட்டுக்கு நினைவூட்டும் பொருட்டு செயற்கையாகவேனும் புன்னகை செய்யுங்கள். * கண்ணீருக்கென்றுண்டு வலிகள் போக்குமொரு விநோதக்கவுச்சி வாசம். * புன்னகையிலிருக்கிறது ஒரு முத்தத்தின் ஈர‌ ருசி; சிறுகண்ணீரிலிருக்கிறது புணர்ச்சியின் உலர் பசி. *

(தமிழ்) தேசிய விருதுகள்

முதலில் செய்திகள் வர ஆரம்பித்த போது சந்தேகமே வந்து விட்டது. மாநில திரைப்பட விருதுகளா, தேசிய திரைப்பட விருதுகளா என்று. பின் ராஜீவ் மசந்த் முதல் சொக்கன் வரை மயக்கம் தெளிவித்தார்கள். தமிழுக்கு மட்டும் இம்முறை மொத்தம் 15 விருதுகள்: வெற்றிமாறன் (இயக்கம் & திரைக்கதை - ஆடுகளம் ), தனுஷ் (ந‌டிகர் - ஆடுகளம் ), கிஷோர் (படத்தொகுப்பு - ஆடுகளம் ) தினேஷ் குமார் (ந‌டன அமைப்பு - ஆடுகளம் ), வ.ஐ.ச.ஜெயபாலன் (சிறப்பு குறிப்பு - ஆடுகளம் ), (சிறந்த தமிழ் படம் - தென்மேற்குப் பருவக்காற்று ) சரண்யா (ந‌டிகை - தென்மேற்குப் பருவக்காற்று ), வைரமுத்து (பாடல் - தென்மேற்குப் பருவக்காற்று) ), ஸ்ரீநிவாஸ் மோகன் (ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - எந்திரன் ), சாபு சிரில் (கலை இயக்கம் - எந்திரன் ), சுகுமாரி (துணை நடிகை - நம்ம கிராமம் ), இந்திரான்ஸ் ஜெயன் (ஆடை அலங்காரம் - நம்ம கிராமம் ), தம்பி ராமையா (துணை நடிகர் - மைனா ) மற்றும் ஓவியர் ஜீவா (சினிமா எழுத்து சிறப்பு குறிப்பு - திரைச்சீலை ). சென்ற வருடத்தைய என் பட்டியலில் ஆடுகளம் படம் கணக்கில் கொள்ளப்படவே இல்லை (சென்னையில் படம் வெளியாகும் நாளே எனக்கு கணக்கு; தணிக்கை சான்றிதழ் தே...

படித்த‌து / பிடித்தது - 100

அசாவாமை குறிப்புகளை எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன் குறிப்புகளின் மதிப்பு குப்பைகளுக்குச் சமானமில்லை ஒரு மாத்து குறைவுதான் முத்தம்மா கொட்டும் குப்பையில் எப்போதேனும் தென்படும் ஆணுறை போல யாருமில்லாததை உறுதி செய்து கொண்டு ஆட்காட்டி விரலை மடக்கி பளிப்பு காட்டும் எதிர் வீட்டு +2 மாணவியைப் போல காகத்திற்குப் பதிலாய் கரண்ட் கம்பத்தில் கரிச்சான் இருப்பதைப் போல மேலாளர் விடுப்பில் இருக்கும்போதும் அவர் மேஜையை ஒழுங்கு செய்யும் சேவகன் போல அரிதாகவே தோன்றி அப்போதே மறையும் தன்மையுடைத்த பூந்திக்கொட்டைகளைப் பொறுக்குவது போல மண்ணரிக்கையில் மினுங்கும் பொற்துகளை புளி ஒற்றி எடுப்பது போல இறுதி ஓவரில் ஓடி ஓடி ரன் எடுப்பது போல முகநூலில் நாரியரைத் தேடித் தேடிச் சேர்ப்பது போல அரும்பாடு பட்டுத்தான் சேகரம் செய்கிறார்கள் எழுத்தாளனை எரியூட்ட அவன் ஆயுளில் சேகரித்த குறிப்பு மூட்டைகள் போதுமானவை நேரடியானவை நேர்மையற்றவை எவருக்கும் புரிபைவை எழுதியவனுக்கே கிரந்தம் எடுப்புச் சோறென ஏகப்பட்ட ரகங்கள் கடைசிப்பேருந்தை தவறவிட்ட கொசுக்கடி ராத்திரியில் காணாமற் போன மகனின் சடலத்தை ...

படித்தது / பிடித்தது - 99

முன்னாள் காதலிகள் சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன் எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும் முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன். எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும் அதுவும் ஐந்து என அவள் சொல்கையில் மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம். - லதாமகன் நன்றி : நவீன விருட்சம்

நல்ல‌ நோட்டு குறிப்புகள்

Image
கள்ள ரூபாய் நோட்டுக்களை இனங்கண்டு கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி சில முக்கிய‌க்குறிப்புகளை பொது மக்கள் நலங்கருதி வெளியிட்டுள்ளது. அவற்றை இங்கே பகிர்ந்திருக்கிறேன். முக்கியமாய் 1000, 500 ஆகிய ரூபாய் நோட்டுக்களிலேயே கள்ளப்பணப்புழக்கம் அதிகமிருக்கும் என்பதால் அவற்றை வாங்கும் போது கூடுதல் கவனத்துடன் இக்குறிப்புகளைப் பின்பற்றுவது நல்லது. இது தவிர எளிய முறையில் பல பயனுள்ள தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த வலைப்பக்கம் வழங்குகிறது: http://www.rbi.org.in/commonman/Tamil/scripts/home.aspx

ஸ்பாம் மெயில் - தொடர்ச்சி

ஸ்பாம் மெயில் குறித்த எனது முந்தைய பதிவுக்கு எழுத்தாளர் என்.சொக்கன் ட்விட்டரில் பகிர்ந்திருந்த கருத்துக்கள் இவை: ******* நண்பரே, ஸ்பாம் மெயிலை மறுப்பது ஒருவர் தனி உரிமை. அதற்காக இப்படியெல்லாமா திட்டுவீர்கள்? :) என்னைப் பொறுத்தவரை தவறு எஸ்.ரா.மீதுதான், அவர் அந்த முதல் மெயிலில் எல்லா ஐடிகளையும் bccயில் போட்டிருக்கவேண்டும் நீங்கள் சொல்வதுபோல் ரூல் செட்டப் செய்து அந்த த்ரெட்டை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புவதெல்லாம் சிலருக்குதான்தெரியும் மற்றவர்கள் நெளிந்திருப்பார்கள். இருவர் தைரியமாகச் சொன்னார்கள். இப்படித் திட்டுகிறீர்கள் :) எஸ்ரா விருது பெற்றது சந்தோஷம்.அதற்காக எல்லோரும் அவரை என் முன்னிலையில்தான் பாராட்டவேண்டுமா? :) இதே நிஜப் பாராட்டுக் கூட்டமாக இருந்தால் அங்கே சென்று உட்கார்ந்தது என் முடிவு, காது நிறையக் கேட்டிருப்பேன் இங்கே நடப்பது அதுவல்ல, அந்த த்ரெட்டில் என் முகவரி இருப்பது என் முடிவல்ல, எஸ்.ரா. முடிவு உணர்ச்சிவயப்படாமல் யோசியுங்கள், ஸ்பாம் எந்த வடிவில் வந்தாலும் தவறே. இது எஸ்.ரா.வை அவமானப்படுத்துவதாகாது ******* என் வரையில் சொக்கன் பழகுதற்கு மிகுந்த pleasant ஆ...