தற்கொலை முன்குறிப்பு

ஒரு தற்கொலையைப் போல்
எளிதான சங்கதி ஏதுமில்லை
ஒரு முத்தத்தைக் காட்டிலும்
ஒரு முகச்சுழிப்பை விடவும்

பைத்தியத்தின் மனம் போல்
தர்க்கமற்ற‌ தர்க்கத்திலிருந்து
கிளைக்கிறது அத‌ன் மீதூறும்
நம் கருணையும் பிரேமையும்

அடுத்தவரை எதிர்கொள்ளும்
பேர‌வஸ்தையது மறைவதில்
ரகசியமென ஒளிந்திருக்கிறது
மரணித்தலின் சூட்சமச்சுவை

மெல்லிய ஆன்மவலியோடு
சாஸ்வத விடுதலை பெறும்
அக்கண ஆனந்தத்தின் நிகர்
புணர்ச்சியிலும் சாத்யமன்று

சுய‌கொலையின் சுகந்தத்தை
சில்க் ஸ்மிதாவிடம் அல்லது
நாம் மிக‌ விரும்பும் பிறிதொரு
நடிகையிடம் கேட்டறியலாம்

உறுத்தலின்றிய‌தை நிகழ்த்த‌
கொஞ்சம் முட்டாள்தனமும்
பிரபஞ்சம் துறந்த மறதியும்
உடனடி தைரியமும் போதும்

நாளை மறுநாள் நிச்சயமாய்
உலகம‌ழியும் என்பது போல‌
அர்த்தம் களைந்த அவசரம்
இருப்பின் இன்னமும் நன்று

அதை விட மிக முக்கியமாய்
நம் ப்ரிய‌த்திற்குரியவர்களை
ஒருபோதும் அக்கணங்களில்
மனதினுள் அனுமதிக்கலாகாஎன் வேண்டுகோள் எல்லாம்
தற்கொலை செய்யும் முன்பு
இக்குறிப்பினை ஒரு முறை
துலங்கப் படித்து விடுங்கள்.

Comments

Anonymous said…
சென்னையில் சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அவனை வேண்டுமென்ற சுடவில்லை என்றும், பயமுறுத்துவதற்காக வேறு திசையில் சுட்டதாகவும் அது த‌வறிப் போய் அச்சிறுவன் மேல் குண்டு பட்டுவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.


நான் என் சிறுவயதில் மாங்காய் அடிக்க கல் எறிவேன். மாங்காயை குறி வைத்து எறிந்தால் மாங்காயே விழாது. ஆக, ஏதோ ஒரு திசையில் கல்லை எறிந்தால் அது போய் மாங்காய் மேல் பட்டு அது விழும். இதை வைத்து பார்க்கும் போது அந்த ராணுவ அதிகாரி சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு என்பது புரிகிறது.


ஆகவே நீங்கள் யாரையாவது உண்மையிலேயே சுட விரும்பவில்லை எனில் அந்த குறிப்பிட்ட நபரை குறி வைத்து மட்டுமே சுடுங்கள். தப்பித்தவறி வேறு எங்கேயோ மட்டும் சகட்டுமேனிக்கு சுட்டு தொலைத்து விடாதீர்கள்.

(உங்களின் சினிமா விமர்னத்தை தவிற வேறு எதையும் நான் உங்கள் தளத்தில் படித்ததில்லை(இதுவரை)...நீங்கள் என்னுடைய அனைத்து கமெண்ட்டுகளையும் ஏற்க வேண்டாம். உங்கள் கட்டுரைக்கு சம்பந்தமில்லாத என் கமெண்ட்டுகள் இடம்பெறுவ‌து அவசியமில்லாதது. ஆகவே அவற்றை பார்த்து விட்டு டெலிட் செய்து விடுங்கள்...)

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்