பெயர‌ற்ற வரிகள்

*

சற்று முன்பு
எழுதப்பட்ட
இந்த‌ வரி
என்னுடையதா?

*

பதில்களால்
வெட்ட வெட்ட‌
கேள்விகளில்
கிளைக்கிறது
வாழ்க்கை.

*

அதிஅற்புத‌ங்கள்
பல்கிப்பெருகிட
அருகிக்குறுகின‌
சாதாரணங்கள்.

*

எப்போதும் எங்கும்
எவ்விஷயத்திலும்
தேவைப்படுகிற‌து -
துளி தூய விஷம்.

*

நேற்றே வந்திருப்பேன்
நாளை கிளம்பி விடின்;
இப்போது இன்றாகிறது.

*

Comments

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்