59வது தேசிய திரைப்பட விருதுகள் (தமிழ்)

2011ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

Dirty Picture படத்தில் சில்க் ஸ்மிதா பாத்திரத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகை விருதுக்கு தகுதியானவர் என்றாலும் அப்படத்தின் பாடாவதித்தன்மை காரணமாக தனிப்பட்ட முறையில் அவ்விருது எனக்கு உவப்பில்லை. சிறந்த துணை நடிகர் அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை) என்பது வரை ஓக்கே; ஆனால் சிறந்த பொழுதுபோக்குப்படம் அழகர்சாமியின் குதிரை என்பது ஓவர் நக்கலாகத் தெரிகிறது (படத்தில் அப்புக்குட்டி ஏற்றிருந்தது துணை நடிகர் பாத்திரம் என்றால் நடிகர் பிரிவில் யாரைச் சேர்த்திருப்பர்கள், படத்தில் வரும் அப்பு என்ற பெயர் கொண்ட‌ அந்த குதிரையையா?).

ஆரண்ய காண்டம் படத்திற்காக‌ சிறந்த முதல்பட‌ இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, சிறந்த படத்தொகுப்பாளர் பிரவீன் (ஸ்ரீகாந்த் பெயர் ஏனோ வரவில்லை) என்பதற்கு சந்தோஷ‌ப்படும் அதே வேளையில் சிறந்த பிண்ணனி இசைக்கான விருது அதே படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவுக்கு அளிக்கப்படவில்லை என்பது கடும் வருத்தமளிக்கிறது. தெய்வத்திருமகள் படத்திற்கு விக்ரம் சிறந்த நடிகர் விருது பெறவில்லை என்பதும் ஆச்சரியம் அளிக்கிறது (விழித்துக் கொண்டார்களா?!). மற்றபடி என் பட்டியலில் சிறந்த Visual Effectsக்கு விருது பெற்ற RA-ONE அதே பிரிவில் தேசிய விருது பெற்றிருக்கிற‌து.

ஒரே ஆறுதல் சிறந்த தமிழ் திரைப்படம் வாகை சூட வா என்பது தான்.

Comments

Natraj.P said…
திருட்டு விசிடி, சன் பிச்சர்ஸ் பட தயாரிப்புகளால் தமிழ் சினிமா எதிர்காலம் கேள்விக்குறியாகப்போய்விடுமோ? என்ற நிலைமாறி விருதுகள் வாங்குமளவிற்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
என்னை பொருத்தவரையில் இரவுகாட்சி பார்க்கும்போது தூக்கம் வராமல் இருந்தாலே அது நல்ல திரைக்கதை என்பதில் சந்தேகம் இல்லை
Anonymous said…
@A N J

சாதாரணமான நாட்களில் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால் அப்போது உங்கள் வாழ்வை சிறப்பானது என்று சொல்வது சரியாகுமோ? எதற்கு எதையோ முடிச்சு போடுகின்றேனோ?

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்