ஆழம் - புதிய மாத இதழ்

ஆழம் - New Horizon Mediaவிலிருந்து வெளிவரும் புதிய மாத இதழ். காலச்சுவடு, உயிர்மை போல் கஞ்சிபோட்ட சீரியஸ்னஸோடும் அல்லாமல் குமுதம், ஆனந்தவிகடன் போல் கடைந்தெடுத்த மசாலாவாகவும் இல்லாமல் நடுவாந்திரமாக இருக்கின்றன் இதன் உள்ளடக்கங்கள். Sort of புதிய தலைமுறை வார இதழ் என்று சொல்லலாம்.


சோதனை முயற்சியாக ஃபிப்ரவரி 2012ல் முதல் இதழ் வெளியானது. அதில் நான் மொழிபெயர்த்திருந்த அப்துல்காலாமின் அணுசக்தியும் எதிர்காலமும் என்ற நெடுங்கட்டுரையிலிருந்து ஒரு பகுதி வெளியாகி இருந்தது. இப்போது மார்ச் 2012 இதழ் வெளியாகி இருக்கிறது. இதில் மாலத்தீவுகளில் சமீபத்தில் நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு குறிந்த எனது 4 பக்க கட்டுரை வெளியாகி இருக்கிறது. என்.சொக்கன், ச.ந.கண்ணன், ஆர்.முத்துக்குமார், எஸ்.எல்.வி.மூர்த்தி, எஸ்.பி.சொக்கலிங்கம் போன்ற ஆஸ்தான கிழக்கு எழுத்தாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். பதிப்பாளர் பத்ரி; பொறுப்பாசிரியர் மருதன்.

3 comments:

மணி said...

கொரங்கு கையில் மால எண்பது போல சோனம் கபூருடன் நடிக்கிரானாம் தனுசு!ஐயோ இதை நக்கலா எழுது மாமும்!நீதான் sarcasm இல் கில்லாடியாச்சே!

ராஜா said...

மூணு படத்தை பார்த்த மக்களுக்கு தொடர் வாந்தி பேதி!108 ஆம்புலன்ஸ் சேவை படு பிஸியாக உள்ளது!படம் பார்த்து இன்னும் தலைவலி போகாததால் டாஸ்மாக்கி முற்றுகை இடும் மக்கள்!எச்சரிக்கை!படம் பார்த்தால் உங்களுக்கும் பை போலார் டிஸ் ஆர்டர் வரலாம்!பட பெட்டியை அழிக்க துணை ராணுவம் விரைவில் வர உள்ளது

Anonymous said...

http://picturepush.com/public/7918308