அன்பின் விடுமுறை தினங்கள்

மீனா கந்தசாமி பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எனது பரத்தை கூற்று நூலுக்கு முதல் எதிர்வினை ஆற்றியது அவர் தான். மிகச்சமீபத்தில் தன் அந்தரங்க வாழ்வில் சில கசப்பான‌ சம்பவங்களைச் சந்தித்து மீண்டிருக்கிறார். அது தொடர்பாய் அவுட்லுக் இதழில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜ்வலிக்கும் கவித்துவத்தின் வழி வ‌லி தெறிக்கிறது. அதனை அவர் அனுமதியுடன் தமிழில் நான் செய்த மொழியாக்கம் இன்றைய தமிழ் பேப்பர் இதழில் வெளியாகி இருக்கிறது:

மணவாக்குமூலம் : மீனா கந்தசாமி - http://www.tamilpaper.net/?p=5684

அவர் தன் கட்டுரையின் தலைப்பை (I Singe The Body Electric) 1855ல் வெளியான வால்ட் விட்மனின் Leaves of Grass என்ற தொகுப்பில் இடம்பெற்ற I Sing the Body Electric என்ற கவிதையிலிருந்து பெற்றிருந்தார். நான் மொழிபெயர்ப்பு வடிவத்தின் தலைப்பை மனுஷ்ய புத்திரனின் 2009ல் வெளியான அதீதத்தின் ருசி தொகுப்பில் இடம்பெற்ற அன்பின் விடுமுறை தினங்கள் என்ற கவிதையிலிருந்து எடுத்தாண்டிருக்கிறேன். மீனாவுக்கு இந்தத் தலைப்பு மிகப் பிடித்திருக்கிறது.

*******

தென்னாப்ரிக்காவின் டர்பன் நக‌ரில் நடந்த Poetry Africa நிகழ்வில் மீனாவின் கவிதை வாசிப்பு:



*******

Comments

Kaarthik said…
நம்பினால் நம்புங்கள். இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் படித்தபோதே இதை நீங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்வீர்கள் என பட்சி சொல்லிற்று.

தமிழில் மிகவும் அருமையாக வந்துள்ளது!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்