தமிழ் சினிமா 2009 : தரவரிசை

சிறந்த படங்கள்:
 1. வெண்ணிலா கபடி குழு
 2. அயன்
 3. உன்னைப் போல் ஒருவன்
 4. ப‌ழசிராஜா
 5. ஈரம்
 6. பேராண்மை
 7. யாவரும் நலம்
 8. திருதிரு துறுதுறு
 9. ரேனிகுண்டா
 10. மாயாண்டி குடும்பத்தார்
நல்ல படங்கள்:
 1. கந்தசாமி
 2. நாடோடிகள்
 3. யோகி
 4. நான் கடவுள்
 5. வாமனன்
 6. லாடம்
 7. நியூட்டனின் மூன்றாம் விதி
 8. கண்டேன் காதலை
 9. QUICKGUN முருகன்
 10. அச்சமுண்டு! அச்சமுண்டு!
சுமாரான‌ படங்கள்:
 1. வேலுப்பிரபாகரனின் காதல் கதை
 2. நினைத்தாலே இனிக்கும்
 3. வேட்டைக்காரன்
 4. மலை மலை
 5. சிவா மனசுல சக்தி
 6. காதல்னா சும்மா இல்லை
 7. கார்த்திக் அனிதா
 8. மதுரை சம்பவம்
 9. மதுரை to தேனி
 10. நான் அவன் இல்லை - 2
மோசமான தமிழ் படங்கள்:
 1. ப‌சங்க
 2. சர்வம்
 3. பொக்கிஷம்
 4. ஆதவன்
 5. படிக்காதவன்
 6. மரியாதை
 7. ஆறுமுகம்
 8. ஆனந்த தாண்டவம்
 9. மோதி விளையாடு
 10. வில்லு
அடுத்து வருவது : சுமாரான‌ தமிழ் திரைப்படங்கள் - 2009 ...

Comments

ஏற்கனவே இந்தப் படத்திற்கான உங்கள் விமர்சனத்திற்குப் பின்னூட்டமிட்டிருந்தேன், வெறுமே திட்ட வேண்டுமென்று திட்டியிருக்கிறீர்களென்று. ஆனால் தற்போது மோசமான திரைப்படங்களின் பட்டியலில் இந்தப் படத்தையும் இணைத்திருப்பது தங்களின் ரசனையையும், விமர்சனப் பார்வையையும் கேள்விக்கும், கேலிக்கும் உரியதாக்குகிறது.

{{ஓட்டப்பந்தயத்தில் ஓடும் சிறுவனை உற்சாகப்படுத்த குடும்பமே கூட ஓடும் காட்சி. சன் மற்றும் கலைஞர் டிவிகளில் இரவு ப்ரைம் டைமில் வரும் ஆயிரம் எபிஸோட் அழுவாச்சி சீரியல்களுக்கு ஈடானது அது.}}

இந்தக் காட்சியை சிறுவர்களின் பார்வையில் பாருங்கள். சிறுவர்களின் நேர்மறை சிந்தனையை பலப்படுத்தும் நோக்கிலும், பெற்றோர்களின் அணுகு முறையினை வழிப்படுத்தும் நோக்கிலும் இதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

{{என்னய்யா சொல்ல வருகிறீர்? கிராமத்துப் பள்ளிக் கூடங்களில் தேசிய கீதம் பாடப்படும் தருணங்களை கவனித்ததே இல்லையா? இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படி செயற்கைத்தனமாக‌ படமெடுப்பதாக உத்தேசம்?}}

தேசிய கீதம் பாடப்படும் இடத்தில் அதற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் நேராக நிற்க வேண்டும் என்பது சிறார்களுக்கு மனதில் பதியப்பட்ட நல்ல விசயம். இந்தக் காட்சி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. 'அட, இந்தச் சிறுமியின் யோசனை நல்லாயிருக்கே' , என வியத்தலும் , காட்சியைப் பார்க்கும் சிறுவர்களின் தேசிய கீதம் குறித்த எண்ணம் பலப்படுதலுமே இந்தக் காட்சியின் நோக்கம்.

{{படம் நெடுக சிறுவர்கள் சினிமா நடிகர்களை, சினிமா காட்சிகளை பிரதியெடுக்கிறார்கள். அக்காட்சிகளை, சினிமா எந்த அளவுக்கு சிறார்கள் மனதில் செயல்களில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று காட்ட வைத்திருக்கிறீர்களா அல்லது அசத்தப் போவது யாரு, லொள்ளு சபா ரேஞ்சிலான நகைச்சுவைக் காட்சியாக வைத்திருக்கிறீர்களா என சரியாக விளங்கவில்லை. எப்படியிருப்பினும் அது ஓவர்டோஸ்.}}

'படம் நெடுக ..' என்பதை நான் ஆட்சேபிக்கிறேன். அறிமுகக் காட்சியில் வைக்கப்பட்டுள்ள சில 'ஹீரோ கெட்டப்'கள் , இந்தப் படத்தின் நாயகர்கள் ,'நாங்களே' என்பதை பசங்கள் மார் தட்டிச் சொல்லும் குறியீடாகவே நான் கருதுகிறேன்.

{{பக்குவப்பட்ட ஓர் ஆசிரியரின் மகனான‌ ப‌ன்னிரண்டு வயது சிறுவனுக்கு இவ்வளவு வில்லத்தனம் ஆகாது}}

ஏன் ஆகாது...யதார்த்தத்தில் இது நிஜமே.

{{அப்புறம் படத்தின் பெயருக்கேற்றாற் போல் இது பசங்களின் சித்தரிப்பு மட்டுமே. அதாவது சிறுவர்களின் உலகம். மனோன்மணி போன்ற‌ சிறுமிகள் தொடுப்புகளாக மட்டும் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள்.}}

இல்லை. சிறுவர் சிறுமிகள் பாத்திரங்கள் படத்தின் போக்கிற்கேற்ப அதனதன் இயல்பிலேயே சித்தரிக்கப்பட்டுள்ளன. சிறுவர்களின் குழாமிற்கு எதிராக சிறுமிகள் குழாம் ஒன்றை நீங்கள் எதிர்பார்க்கிறீர்களோ?

{{மசாலாப் படங்களில் தவறு நிகழ்ந்தால் கூட மீண்டும் யாராவது தயாரிப்பாளர் வாய்ப்பு தருவார். ஆனால் மாற்று சினிமாவை முயற்சிக்க‌ ஷங்கர், பிரகாஷ்ராஜ், சசிகுமார் போன்ற சில தயாரிப்பாளர்களே இருக்கிறார்கள். இதில் கிடைத்த வாய்ப்பைத் தவற விடுவது மகாபாவம். பாலாஜி சக்திவேலின் கல்லூரி படம் பார்த்த‌ போதும் இதே உணர்வே ஏற்பட்டது. அதனாலேயே கொஞ்சம் காட்டமாகவே விமர்சித்திருக்கிறேன்.}}

இயக்குனர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகவே உபயோகப்படுத்தியிருக்கிறார்.
இதே போல் கல்லூரி படமும் ஆகச் சிறந்த படமே. அதன் திரைக்கதை அமைப்பு மிக நுண்ணியமான நெய்யலாகும். போதுமான விளம்பரமின்மையே அப்படத்தின் தோல்விக்குக் காரணம் என்பது என் கருத்து.

திரு. கார்த்திகேயன் ,நான் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசிப்பவன். தங்கள் எழுத்து நடை நல்ல எழுத்தாளர்களை ஒத்திருக்கிறது (இல்லை, நீங்கள் சொல்வது போல் தனித்துவம் உடையதாக உள்ளது). ஆனால் எழுத்தாளனின் ரசனையை அளவுகோலாகக் கொண்டு இயங்கும் வாசகனின் நம்பிக்கையை , உங்களின் இதைப் போன்ற பிடிவாதமான, சுய முரண்பாடான ரசனை சார்ந்த எழுத்துக்கள் அசைத்துப் பார்க்கும் என்றே தோன்றுகிறது.
நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். நான் சொல்ல நினைப்பது ஒன்று தான்.. இது முழுக்க என் ரசனை மற்றும் அனுபவம் சார்ந்தது.. எல்லோருக்கும் ஒத்துப்போக வேண்டும் என்றோ எல்லோரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றோ அவசியமில்லை.. பிடிக்காத ஒன்றை சிறந்தது என்று சொல்லும் மனதைரியம் எனக்கில்லை என்பதே இங்கு முக்கியமானது..

"பிடிவாதமானது, முரண்பாடானது" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை நான் என் மனசுக்கு "நியாயமானது, நிஜமானது" என வாசித்துக் கொள்கிறேன்.. After all, மனிதன் முரண்பாடுகளின் மொத்த வடிவம் தானே.. எழுத்தாளனும் அதற்கு விதிவிலக்கல்ல..

எப்படியிருப்பினும் உங்களுக்கு என் நன்றிகள்!
Balaji K said…
Even if you do not like 'Pasanga' movie, am sure it doesn't qualify to be in the top of worst of 2009 tamil movies. May be you got irritated with so many people praising it as one of the best movies of the year and you want to show your objection strongly.
@Balaji K
Exactly.. You are right.. The same happened with ARR too..
MSK said…
'பசங்க' படத்தை மோசமான படம் என்று வகைபடுத்தி இருப்பது எனக்கும் சற்று உறுத்தலாகதான் இருந்தது. ஆனால் உங்கள் பதிவிற்கு மேடேஸ்வரன் இட்ட நியாயமான எதிர்வினைக்கு தங்களின் பதில் 'ஏன்டா என் வெப்சைட்டுக்கு வர்றீங்க ? இது என் ப்ளாக். நன் என்னவேனாலும் எழுதுவேன் ? உனக்கு பிடிச்சா படி. இல்லேனா விடு ' என்பது போல் இருக்கிறது. பொதுகருத்தோடு ஒத்து போகாத உங்கள் பார்வையும் கருத்தும் நான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.

இதுதான் நான் உங்கள் வலைதளத்தை பார்க்கும் கடைசி தடவை. இனிமேல் உங்கள் தளத்தை பார்க்கவோ படிக்கவோ வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். இதுவரையான உங்கள் பதிவிற்கு நன்றி.
@MSK

"பிடிச்சா படி. இல்லேனா விடு" என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதும் ஒரு வகையில் சரியானதாய்த் தோன்றுகிறது. நான் மட்டுமல்ல, மற்ற எழுத்தாளர்கள் கூட அப்படித் தான் சொல்வதாய்த் தான் எடுத்துக் கொள்கிறேன்.

என் தளத்தை இனி மேல் படிக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தால் அது உங்கள் விருப்பம்; அது குறித்து நான் கருத்து சொல்ல ஏதுமில்லை.

என்னைத் தொடர்ந்து வாசிப்பதாய் நான் நம்பிக் கொண்டிருக்கும் நூற்று சொச்சம் வாசகர்களும் உங்களைப் போலவே நிறுத்திக் கொள்ளலாம் என்று ஒட்டுமொத்தமாய் முடிவெடுத்தால் கூட அது குறித்துப் பேச பெரிதாய் ஏதுமில்லை.

காரணம் வாசகர்கள் எழுத்தாளனை உருவாக்குவதில்லை; மாறாக எழுத்தாளன் தான் வாசகர்களை உருவாக்குகிறான்.

வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தீனி போடுவதும், ஆட்டு மந்தைத்தனமான பொதுக்கருத்தோடு ஒத்துப் போவதும் எழுத்தாளனின் வேலையல்ல.

இதோடு சேர்த்து இதுவரை நீங்கள் இட்டிருக்கும் ஆறு பின்னூட்டங்களுக்கும் நன்றி!

மீண்டும் சந்திப்போம் ;)
Dinesh said…
CSK,

can u tell me 1 good reason y Cheran's "Pokkisam" is in your list?

Just 1 good reason for rating this flim as a worst movie in 2009?

And also, do u really think Ayan deserves to be in the BEST flim category of 2009?

please justify this as well!!!!

Popular posts from this blog

இறுதி இரவு [சிறுகதை]

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

தமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்