Posts

Showing posts from September, 2022

தலைவி: சில குறிப்புகள்

Image
 (Last updated on April 19, 2023) ப்ரியங்கா மோகன் வெளியான திரைப்படங்கள் : 1) Ondh Kathe Hella (கன்னடம்) as அதிதி - மார்ச் 8, 2019 - ZEE5 2) Nani's Gang Leader (தெலுங்கு) as ப்ரியா - செப்டெம்பர் 13, 2019 - Prime Video / Hotstar (Tamil) 3) Sreekaram (தெலுங்கு) as சைத்ரா - மார்ச் 11, 2021 - JioCinema / YouTube (Kannada) / YouTube (Malayalam) 4) டாக்டர் (தமிழ்) as பத்மினி / மினி - அக்டோபர் 9, 2021 - Netflix / SunNxt 5) எதற்கும் துணிந்தவன் (தமிழ்) as ஆதினி - மார்ச் 10, 2022 - Netflix 6) டான் (தமிழ்) as அங்கயற்கண்ணி - மே 13, 2022 - Netflix உறுதி செய்யப்பட்ட திரைப்படங்கள் : 1) JR 30 (தமிழ்) - ஜெயம் ரவி படம்; எம். ராஜேஷ் இயக்கம் - Link 2) கேப்டன் மில்லர் (தமிழ்) - தனுஷ் படம்; அருண் மாதேஷ்வரன் இயக்கம் - Link 3) OG (தெலுங்கு) - பவன் கல்யாண் படம்; சுஜீத் இயக்கம் - Link நெடுநாளாகக் கிடப்பிலுள்ள‌ திரைப்படங்கள் : 1) டிக்டாக் (தமிழ்) - டீஸர் 2) Mayan (English) -  Link உறுதி செய்யப்படாத திரைப்படங்கள் : 1) நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், அநிருத் இசையில் கவின் நடிக்கும் படம் - Link பெயர் அடி

வானும் மண்ணும்

Image
சாருவுக்கு விஷ்ணுபுரம் விருது பற்றி ஏதும் எழுதக்கூடாது என்றுதான் இருந்தேன். ஓர் இளம் எழுத்தாள நண்பர் அது குறித்து நான் ஏதும் சொல்லவில்லையே எனக் கேட்ட போது "சங்கடம் தவிர்க்கிறேன்" என்றேன். ஆனால் அது கள்ள மௌனமாகத் தொனிக்கும் சங்கடமும் இருப்பதாக மறுயோசனையில் தோன்றிய‌தால் இக்குறிப்பினை எழுதப் புகுந்தேன். தவிர, என் நோக்கைப் புரிந்து கொள்ளாமல் போகுமளவு இருவரும் இருக்க மாட்டர் என்பதால் சங்கடத்துக்கும் இடமில்லை என்றே தோன்றுகிறது. முதலில் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் பற்றிய என் ஒட்டுமொத்த மதிப்பீடு சுருக்கமாக: எனக்கு இந்தப் பிறழ்வெழுத்து அல்லது Transgressive Writing பற்றி சர்வதேசிய அறிமுகம் ஏதும் கிடையாது. நான் அதை 'மீறல் எழுத்து' என்று வரையறை செய்வேன். வழமையான சமூக விழுமிய‌ங்களை உடைத்து வேறொன்றை முன்வைக்கும் எழுத்து. அதற்கு அதிர்ச்சி மதிப்பீடு உண்டு, ஆனால் அது நோக்கம் கிடையாது. பேசாப் பொருளைப் பேசத் துணிதல். பொதுவாக அது பாலியலாகவே இருக்கும். தமிழில் இதற்கு முன்னோடிகள் ஜி.நாகராஜன் மற்றும் தஞ்சை பிரகாஷ். சாரு அதிலேயே non-liner எழுத்தை முன்வைத்தார். அவர் தன் புனைவுகளில் பேசிய