Posts

Showing posts from October, 2021

நாவும் காலும்

CSK Diet - http://www.writercsk.com/2020/10/csk-diet.html டயட்: சில சிந்தனைகள் - http://www.writercsk.com/2021/04/csk.html எடை பார்த்தல் - http://www.writercsk.com/2021/09/blog-post.html ஓராண்டின் முடிவில் - http://www.writercsk.com/2021/09/blog-post_18.html   1) நான் தினசரி நடைப்பயிற்சி தொடங்கி 13 மாதங்களாகிறது. CSK டயட்டில் இறங்கி கிட்டத்தட்ட‌ 10 மாதங்களாகிறது. என்னுடன் நடைப்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாட்டிலும் இறங்கிய நண்பர்களும், வேடிக்கை பார்க்கும் அன்பர்களும் அவ்வப்போது கேட்கும் கேள்வி எவ்வளவு எடை குறைந்தது என்பது. இடையே ஒரு முறை இது குறித்து எழுதினேன் என்றாலும் இப்போது மறுபடி புதுப்பிக்கிறேன். 2) அதற்கு முன் சில விஷயங்களைச் சொல்கிறேன். எந்த ஒரு வேலையின் முடிவுகளையும் அளக்க இரண்டு விதமான அளவீடுகள் (Metrics) உண்டு. உள்ளீட்டு அளவீடுகள் (Input Metrics) மற்றும் வெளிப்பாட்டு அளவீடுகள் (Output Metrics). நாம் செய்யும் வேலைகளை அளப்பது உள்ளீட்டு அளவீடுகள்; அதன் முடிவுகளை அளப்பது வெளிப்பாட்டு அளவீடுகள். அதாவது நாம் எடுக்கும் முயற்சிகளை மட்டும் அளந்தால் போதாது, அதற்கான பலன்களையும் அளக்க வேண