நீங்க ஷட்டப் பண்ணுங்க!
1. நீ நீயாக இரு (பிக்பாஸ் ஓவியாவிடமிருந்து சர்வைவல் டிப்ஸ்) பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை. ஓவியாவுக்கு அறிமுகம் கொடுத்தால் நம் வீட்டில் மாலடோவ் காக்டெய்ல் வீசுவார்கள். அதனால் சம்பிரதாய இன்ட்ரோக்கள் தவிர்த்து நேராய் விஷயத்துக்குப் போய் விடலாம். தமிழகத்தின் லேட்டஸ்ட் சென்சேஷன் ‘பிக்பாஸ்’ ஓவியா! அந்நிகழ்வில் பங்குபெறும் மற்ற பதினான்கு பேரை விடவும் அதிக மக்கள் செல்வாக்கு மிக்கவர். மக்கள் செல்வி என்று கூட பட்டம் கொடுத்திருந்தார்கள். #SaveOviya Movement, ஓவியா புரட்சிப் படை, ஓவியா தற்கொலைப் படை, ஓவியா ஆர்மி என்று வர்ச்சுவல் ரசிகர் மன்றங்கள் தூள் பறக்கின்றன. தினம் ஓவியாவை வைத்து நூற்றுக்கணக்கான மீம்கள் உருவாக்கப் படுகின்றன. ஃபேஸ்புக்கில் யாரோ விளையாட்டாய் எழுதி இருந்தார்கள் - “இன்று தமிழகத்தில் ரஜினிக்கு அதிக ரசிகர்களா, ஓவியாவுக்கு அதிக ரசிகர்களா?”. அராஜகம்! அகம் டிவி வழியாக பிக்பாஸ் இன்மேட்ஸுடன் கமல் ஹாசன் உரையாடும் போது ஓவியா பற்றிய ஒரு விஷயம் பகிரப்பட்டால் கமலே திடுக்கிட்டுப் பார்க்குமளவு அரங்கில் விசில்களும் க்ளாப்ஸ்களும் அள்ளுகின்றன. எவிக்ஷனுக்கு ந