செல்வேந்திரன் எனும் கவிநடையன்
******* " எழுத்தெனும் பெருநோயின் அறிகுறி கவிதை. " - செல்வேந்திரன் ('முடியலத்துவம்' தொகுப்பிலிருந்து - ப.53) ******* முதல் மகவையும், முதல் நூலையும் ஒரு சேரப் பிரசவித்திருக்கும் செல்வேந்திரனுக்கு முதலில் என் வாழ்த்துக்கள்! வாசிப்பின் எளிமை கருதி புத்தக்காட்சியில் வாங்கிய புத்தகங்களுள் நான் முதலில் வாசித்தது செல்வேந்திரனின் முடியலத்துவம் தான். இதே தலைப்பில் அவர் ஆனந்த விகடன் இதழில் சில ஆண்டுகள் முன்பு எழுதிய சிறுகவிதைகள், மற்றும் இன்ன பிற இதழ்கள், வலைப்பதிவு ஆகியவற்றில் எழுதிய கவிதைகளின் மொத்தத் தொகுப்பு தான் இந்நூல். முன்னுரையிலேயே disclaimer போட்டு விடுகிறார் - " இக்கவிதைகள் அச்சுரு கொள்வதால், தமிழிலக்கியத்தில் எனக்கொரு இடம் கிடைத்துவிடுமெனும் ஆவல் எனக்கில்லை ". கடைசிக்கவிதை இப்படி இருக்கிறது - "மொழி / கலைத்து ஆடும் / என் சிறுபிள்ளை / விளையாட்டை / நீ கவிதையென்கிறாய்". கொஞ்ச காலம் முன்பு மின்னரட்டையில் பேசிய போதும் இதே கருத்தைத் தான் சொன்னார். அதாவது அவரது கவிதைகளின் இடம் குறித்து நன்கு அறிந்தே அதைப் புத்தகமாக்க முயற்சியெடுக்காமல் இருந்த