Posts

Showing posts from February, 2011

காதல் புராணம் (முழுத்தொகுப்பு)

அலகிலா விளையாட்டு - http://www.tamilpaper.net/?p=2581 ஆகாசத்தாமரை - http://www.tamilpaper.net/?p=2611 நெடுங்குருதி - http://www.tamilpaper.net/?p=2616 புயலிலே ஒரு தோணி - http://www.tamilpaper.net/?p=2637 மோகமுள் - http://www.tamilpaper.net/?p=2650 கானல் நதி - http://www.tamilpaper.net/?p=2658 நித்யகன்னி - http://www.tamilpaper.net/?p=2674 வெந்து தணிந்த காடுகள் - http://www.tamilpaper.net/?p=2701 வானம் வசப்படும் - http://www.tamilpaper.net/?p=2728 குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - http://www.tamilpaper.net/?p=2744 சுந்தர காண்டம் - http://www.tamilpaper.net/?p=2768 தீண்டுமின்பம் - http://www.tamilpaper.net/?p=2781 பின்தொடரும் நிழலின் குரல் - http://www.tamilpaper.net/?p=2791 புத்ர‌ - http://www.tamilpaper.net/?p=2805 மாதொருபாகன் - http://www.tamilpaper.net/?p=2830

புதிர் அவிழ்ந்தது!

" இக்கவிதைத் தொடர் ஆரம்பிக்கும் தினம் காதலர்களுடையதாக இருப்பது ஒரு தற்செயல். ஆனால் கவிஞர் யாரெனத் தெரிவிக்காதிருப்பது தற்செயல் அல்ல. " ஃபிப்ரவரி 14 - காதலர் தினம் - தொடங்கி கடந்த பதினைந்து நாட்களாக ஆசிரியர் பெயரே இல்லாமல் ' காதல் புராணம் ' என்ற கவிதைத்தொடர் தமிழ் பேப்பர் இதழில் வெளிவ‌ந்து கொண்டிருந்தது. தொடரின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்டிருந்த சிறுகுறிப்பு தான் மேலே இருப்பது. சில‌ தினங்களாகவே அவ்வப்போது தொடரை எழுதுவது யார்? என நம் மக்கள் ட்விட்டர் சந்தில் முட்டிக் கொண்டிருந்தார்கள்.15 நாள் புதிர் இப்போது அவிழ்ந்திருக்கிறது. அதை எழுதி வந்தது யார் என்று இன்று அறிவித்திருக்கிறார்கள். மேலதிக விபரங்களுக்கு: http://www.tamilpaper.net/?p=2830 *******

E=mc2 : சிறுகதை

இன்று ஃபிப்ரவரி 27 - எழுத்தாளர் சுஜாதா அவர்களின் மூன்றாமாண்டு நினைவு தினம். என்னுடைய‌ E=mc 2 என்கிற சிறுகதை இன்றைய தமிழ் பேப்பர் இதழில் ஈ இஸ் ஈக்வல் டு எம்சி ஸ்கொயர் என்கிற transliterated தலைப்பில் வெளியாகியுள்ளது - லிங்க் இங்கே: http://www.tamilpaper.net/?p=2815 துரோணருக்கு ஏகலைவனின் குருதட்சணை. எழுதுபவன் கட்டை விரல் எழுத்து தானே!

படித்தது / பிடித்தது - 98

தீப்பிடிக்கும் வழித்தடங்கள் செடி பார்க்கச்சொல்லி ‘சுவற்றில் பல்லிபாரெ’ன பார்வை திருப்பி மருத்துவமனை போவதாய் பொய்யுரைத்து... குழந்தையை ஏமாற்றி அழவிட்டுச்செல்லும் தாயின் வழித்தடங்கள் தீப்பிடித்துக் கொள்கின்றன. எத்தனையோ மைல்கற்களுக்கப்பால் செய்யும் அமைதியற்ற வேலைகளில் கேட்டுக் கொண்டேயிருக்கும் அந்த கேவல் சத்தம். - இளம்பிறை நன்றி : கீற்று.காம்

கௌதம் மேனன் கடிதம்

நேற்றைய ப்ரஸ் ரிலீஸில் நடுநிசிநாய்கள் திரைப்படம் குறித்து ஊடக‌த்துறையின‌ருக்கு கௌதம் மேனன் சொல்லியிருப்பவை - ஒரு சுத்த‌ கலைஞனின் வியாபார சமரசம் இது: ******* Dear Media Friends... Nadunisi naaygal is new age Tamil cinema. I have tried to break the rules of regular tamil cinema with this film. It's also in a genre that is new to me. It's experimental in the sense that it is a dark and disturbing film. It's a contrast to all my earlier films in every sense. In a way, it's an announcement that I am always looking to break away from a style that I am known for and create a new style for myself. Anything experimental and new will always be received with bouquets and brickbats and I am at a stage in my career where I fully understand that. I stand by this film with a lot of conviction. Its not a film that you can walk out of saying that you loved it unless you are fond of this genre of films. It's an experience, that's all it is. And the last frame before the di

கட்டவிழும் மனித மனம்

Image
நடுநிசி நாய்கள் - பசுவய்யா என்ற பெயரில் சுந்தர ராமசாமி எழுதிய ஒரு கவிதையின் (மற்றும் கவிதைத்தொகுதியின்) பெயர் இது. அந்தத் தலைப்பு இந்தப் படத்துக்கும், இது கொண்டு வர முயன்றிருக்கும் mood-க்கும் கச்சிதமாகப் பொருந்திப் போகிறது. Metaphor! மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்ட திரைக்கதையை மகாத் துல்லியமாக இயக்கியிருக்கிறார் கௌதம். ஒளிப்பதிவில் சில உச்சங்கள் நிகழ்ந்தேறி இருக்கின்றன. ஈரம் படத்திற்குப் பின் மனோஜ் பரம்ஹம்சாவுக்கு இது அடுத்த கட்டம் ( விண்ணைத் தாண்டி வருவாயா படம் வழக்கமான feel-good ஒளிப்பதிவு மட்டுமே). காட்சிகளின் துரித‌ நகர்ச்சியில் பின்னணி இசை இல்லையென்பதே எங்கும் உறைப்பதில்லை. ஆண்டனியும் கவனிக்க வைக்கிறார். படத்தின் திரைக்கதை பற்றி ஒரு பத்தியேனும் பேசியே ஆக வேண்டும். திரைக்கதையில் சில குழப்பங்கள் இருக்கக்கூடும். ஆனால் உண்மையில் அவை யாவும் நுண்மையாகத் கட்டமைக்கப்பட்டவையே. அதாவது மனப்பிறழ்வுக்குள்ளான ஒருவனின் வாக்குமூலமே மொத்தத் திரைப்படமாக விரிகிறது என்பத‌னால் அவனது விவரிப்புகளில் ஒரு விதமான‌ ஒழுங்கற்ற முரண்களும், முழுமையற்ற தனமையும் இருப்பது இயல்பே. அவ்வகையில் முக்கியத்துவம் ப

பரத்தை கூற்று : ஜ்யோவ்ராம் சுந்தர்

பரத்தை கூற்று புத்தகம் குறித்து பதிவர் ஜ்யோவ்ராம் சுந்தர் அனுப்பிய மின்னஞ்சல் இங்கே. நான் மதிக்கும் வெகுசில பதிவர்களுள் ஜ்யோவ்ராம் ஒருவர் என்பதால் தொகுதி குறித்த அவரது கருத்துக்களை எதிர்மறையெனினும் முக்கியமானதாகக் கருதுகிறேன். ******* அன்புள்ள சிஎஸ்கே, நலம்தானே. ஏதேதோ வேலைகள் காரணமாகவும் சோம்பல்தனம் காரணமாகவும் உடனே பரத்தை கூற்று பற்றி எழுதவில்லை. கீழே நான் சொல்ல நினைத்தவற்றை தொகுக்கிறேன் : 1. 72 பக்கமுள்ள ஒரு கவிதைப் புத்தகத்தில் 25 பக்கங்கள் முன்னுரை, வெற்றுப் பக்கங்கள் என்பது ஒரு வாசக நுகர்வோனாக எரிச்சலை ஏற்படுத்துகிறது. 2. கவிதைகள் பேசவேயில்லை - முன்னுரைதான் வித்தாரமாகப் பேசியிருக்கிறது. இதைத்தான் சொல்ல வேண்டுமென நீங்கள் நினைத்திருந்தால் ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம். 3. கவிதைகளின் அளவுகள் சிறுக்கும்போது அவை புத்திசாலித்தன வாக்கியங்களாக ஆகிவிடும் அபாயம் உண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதில் பல கவிதைகள் இந்த ரகத்திலேயே சேர்க்க முடிகிறது என்னால். 4. சில கவிதைகள் புத்திசாலித்தனம் என்றுகூடச் சொல்ல முடியாத அபத்தக் கூற்றுகளாக இருக்கின்றன. (காசி

காதல் செய்வீர், உலகத்தீரே!

காதலித்தவர்கள் காதலிப்பவர்கள் காதலிக்கவிருப்பவர்கள் காதலிக்கப்படுப‌வர்கள் காதலில் தோற்றவர்கள் காதலில் ஜெயித்தவர்கள் காதலை வெறுப்பவர்கள் காதலை எதிர்ப்பவர்கள் காதலில்‌ மரித்தவர்கள் காதலில் ஜனித்த‌வர்கள் காதலில் ஏமாறுபவர்கள் காதலில் ஏமாற்றுபவர்கள் காதலுக்காக இழந்தவர்கள் காதலினால் பெற்றவர்கள் காதலினால் கற்றவர்கள் காதலை நிராகரித்தவர்கள் காதலில் நிராகரிக்கப்பட்ட‌வர்கள் காதலித்து வெளியேறியவர்கள் காதலுக்காகக் காத்திருப்பவர்கள் காதலை வெளியே சொல்லாதவர்கள் காதலிப்பதை ஒப்புக் கொள்ளாதவர்கள் காதலித்து கல்யாணம் செய்தவர்கள் கல்யாணம் செய்து காதலிப்பவர்கள் கல்யாணத்துக்கு வெளியே காதலிப்பவர்கள் இதுகாறும் காதலிக்காதவர்கள் * காதலியுங்கள்.

படித்தது / பிடித்தது - 97

விஸ்வரூபம் ஏதோ ஒரு பருவ மாற்றத்தில் எனது அங்கங்கள் ஒவ்வொன்றும் மிருகமாகவும் பறவையாகவும் மாறி என்னைவிட்டு விலகிச் செல்லத்தொடங்கின அவையே திரும்பி வந்து சேர்வதும் பல சமயங்களில் தொலைந்த ஆட்டுக்குட்டியை தேடிச்சென்று அழைத்து வருவதென நிகழ்வதும் பிறகு யாத்திரைபோலப் புறப்பட்டுச் சென்றுவிடுவதும் வழக்கமாகி எல்லாக் கால வெளியிலும் அலையத்துவங்கின நீண்ட காலமாகிவிட்டது பல திக்குகளின் நீர் நிலங்களை நோக்கிச் சென்றிருக்கும் எது எத்திசையில் உலவுகிறது என யூகித்தறிய முடியவில்லை திரும்பி வந்துவிடும்போது வெவ்வேறு நிலத்தின் வாசனையோடும் குரல்களோடும் என் உடலெங்கும் மேய்ந்து என் அடையாளத்தைக் கலைத்து அடுக்குகின்றன யோனி ஒரு பட்டாம்பூச்சியாக மலைகளில் அலைவதைக் கண்டதாக காட்டில் விறகு பொறுக்கச் சென்ற பெண்கள் வந்து கூறக்கேட்டேன் - மாலதி மைத்ரி நன்றி : கீற்று.காம்

பரத்தை கூற்று : நெ.பார்த்திபன்

பரத்தை கூற்று புத்தக வெளியீடு குறித்து பதிவர் நெ.பார்த்திபனின் பதிவு: ******* http://www.parthichezhian.com/2011/01/charu-on-my-wedding.html ******* மறக்க முடியாத நாள் - Charu on my Wedding Posted by N.Parthiban at Friday, January 28, 2011 நான் எழுதிய இரண்டாவது கடிதத்திற்கு ஜனவரி 14, 2010 இல் பதில் எழுதிய சாரு "பொதுவாக எனக்கு வைபவங்களில் கலந்துக் கொள்வது கூச்சமாக இருக்கும். இது வரை பசுபதி, பாஸ்கர் ஆகிய நண்பர்களின் திருமணங்களுக்கு மட்டுமே சென்றிருக்கிறேன் ஆனால் உங்கள் திருமணத்திற்கு வருகிறேன்" (பக்கம் 46 - கடவுளும் சைத்தானும்) இதை அவர் எழுதி சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து அக்டோபரில் எங்கள் திருமணம் நிச்சயிக்கபட்டதும் சாருவிற்கு போன் செய்து அவரை சந்திக்க வேண்டும் என்று கேட்ட போது என்னை அக்டோபர் 16 ஆம் தேதி நடக்கும் நண்பர் சரவண கார்த்திகேயன் அவர்களின் "பரத்தை கூற்று" நூல் வெளியிட்டு விழாவில் சந்திக்குமாறு கூறினார். சரியாக மாலை ஐந்து மணிக்கு டிஸ்கவரி புக் பேலஸ் சென்று அந்த விழாவில் கலந்து கொண்டு சாருவின் பேச்சை கேட்ட அந்த நாள் மறக்க முடியாதது... முதல் வர

போர்த்தொழில் பழகு

Image
யுத்தம் செய் படம் முழுக்க வியாபித்திருப்பவை மூன்றே மூன்று விஷயங்கள் தாம்: மிஷ்கின், மிஷ்கின் மற்றும் மிஷ்கின். எனக்குப் படம் மிகப்பிடித்திருக்கிறது. நான் தமிழில் பார்த்தவற்றிலேயே ஆகச்சிறந்த த்ரில்லர் திரைப்படம் இது தான். படத்தின் சுவாரசியமான திரைக்கதையினூடாக மிக யதார்த்தமாக, மிகத் துல்லியமாக‌ ஒரு முழு சிபிசிஐடி வழக்கு விசாரணை பதிவாகி இருக்கிறது. To be precise, ஓர் இயக்குநராக மிஷ்கின் காட்சிக்குக் காட்சி ஜெயிக்கிறார்.‌ எந்தவொரு மர்டர் த்ரில்லரிலும் பொதுவாய் இரு பகுதிகள் இருக்கும். கொலைகாரன் பகுதி, துப்பறிபவர் ப‌குதி. இப்படத்தில் துப்பறியும் பகுதி அற்புதமாய் மிகையின்றிப் பதிவாகியிருக்க, கொலைப் பகுதியோ ஒரு ராஜேஷ்குமார் க்ரைம் நாவலைப் போன்று இருக்கிறது. தவிர, வேட்டையாடு விளையாடு, அஞ்சாதே, ஈசன் போன்ற படங்களின் சிலபல காட்சிகளும் ஆங்காங்கே நினைவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. இதற்கு முன்பு தான் வைத்திருந்த தொழில்நுட்பக்குழுவை (மகேஷ் முத்துசுவாமி & சுந்தர்.சி.பாபு) அப்படியே கலைத்து விட்டு முழுக்கவும் புதியவர்களுடன் கைகோர்த்து இப்படத்தைத் தந்திருக்கிறார் மிஷ்கின். ஆனால் அவரத

பரத்தை கூற்று : பதிவர் R.கோபி

பரத்தை கூற்று புத்தகம் குறித்து பதிவர் R.கோபி யின் விரிவான விமர்சனப்பதிவு: ******* http://ramamoorthygopi.blogspot.com/2011/02/blog-post_03.html ******* சி. சரவணகார்த்திகேயனின் பரத்தை கூற்று Posted by Gopi Ramamoorthy at 6:06 PM Thursday, February 3, 2011 நுழையுமுன் புத்தகத்தைப் பதிப்பித்த அகநாழிகை பதிப்பகத்திற்கு நன்றி. இதுபோன்ற புத்தகம் எழுதுவதென்பது கம்பிமேல் நடப்பது போன்ற வித்தை. சரியாகவே நடந்திருக்கிறார் சரவண கார்த்திகேயன். 2007 ஆம் ஆண்டு குங்குமம் வார இதழ் நடத்திய வாசகருக்கான போட்டியில் இவருடைய ‘ஒருத்தி நினைக்கையிலே’ என்ற படைப்பு கவிஞர் வைரமுத்துவால் முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்படிருக்கிறது. மோதிரக் கையால் குட்டு வாங்கி இருக்கிறார். முதல் கவிதைத் தொகுப்பில் இது போன்ற ஒரு விஷயத்தைப் பாடுபொருளாக எடுத்துக்கொள்ள நிறைய துணிச்சல் வேண்டும். நிறைய தன்னம்பிக்கை வேண்டும். முன்னுரை இந்தத் தொகுப்பின் முக்கியமான அம்சம் இதன் முன்னுரை. ஒரு தேர்ந்த வழக்கறிஞர் தயாரித்த அறிக்கை போல உள்ளது. முன்னரையில் இருந்து சில முக்கியமான வரிகள்: நம்மைச் சுற்றியுள்ள நாம் நன்கறிந

உடுமலை.காம் - ஓர் அறிமுகம்

உடுமலை.காம்-ல் ராஜா சந்திரசேகரின் சமீபத்தைய இரண்டு கவிதைத்தொகுப்புகளை ( அனுபவ சித்தனின் குறிப்புகள் , நினைவுகளின் நகரம் ) நேற்று மாலை 4 மணிக்கு ஆர்டர் செய்திருந்தேன், இன்று மதியம் 1 மணிவாக்கில் வந்து சேர்ந்து விட்டது. அதாவது நான் ஆர்டர் செய்து இன்னமும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை, அதற்குள் சரக்கு கைக்கு கிடைத்து விட்டது. உடுமலை.காம் இருப்பது தமிழகத்தின் உடுமலைப்பேட்டையில், நானிருப்பது கர்நாடகத்தின் பெங்களூருவில் என்பதையும் இங்கே கணக்கில் கொண்டு யோசித்தால் இது எனக்கு ஒரு பேராச்சிரியமாகத் தோன்றுகிறது. இந்த வேகத்திற்கான logistics சேவைகள் இருக்கின்றன என்றாலும் ஒரு தமிழ் நிறுவனம் - அதுவும் புத்தக வியாபாரம் தொடர்பானது - இத்தனை கச்சிதமாய்ப்ப‌ணி செய்வது மகிழ்ச்சிய‌ளிக்கிறது. தமிழிலக்கியம் தொடர்பான கிட்டதட்ட எல்லா நூல்களும் இவர்களிடம் கிடைக்கின்றன. தபால் செலவும் இலவசம். அழகாய்ப் பேக் செய்து பத்திரமாய் வந்து சேர்ந்து விடுகிறது. தவிர‌, சென்னையில் இருப்பவர்கள் புத்தகக்கடைகளில் தேடியலைய‌ வேண்டியதில்லை; வெளியூரில் இருப்பவர்கள் புத்தகக்கடைகளையே தேடியலைய‌ வேண்டியதில்லை. மிக மிகச்சுலபம். நண்பர்கள் அனைவ

அறம் - ஒரு விவாதம்

' அறம் ' என்கிற ஜெயமோகனின் சமீபத்தைய சிறுகதை குறித்து BUZZல் நேற்று நடந்த விவாதம் இது. அதில் நான் கலந்து கொண்ட பகுதிகளை மட்டும் இங்கே தருகிறேன். இது ஒரு மோசமான விவாதத்துக்கு உதாரணம் என்று பதிவர் வடகரை வேலன் நேற்று குறிப்பிட்டார். இப்போது யோசித்துப் பார்த்தால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. முழு விவாதத்தையும் படித்து இன்புற‌‌ விரும்புபவர்கள் இந்த சுட்டிக்குச் செல்லலாம்: http://www.google.com/buzz/115511813610845200164/29EChKnwzey/அறம-ப-ட-தல-என-பத-ப ******* ஜ்யோவ்ராம் சுந்தர் : அறம் பாடுதல் என்பதைப் பலர் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நிறைய பேர் இந்தக் கதையை ரொம்ப ஓவராகச் சொல்கிறார்களோ எனத் தோன்றுகிறது. எம்விவி என்ற பெயரோடு இணைத்துப் பார்ப்பதால் இப்படி இருக்குமோ என நினைக்கிறேன். அறம் என்பதை எதிக்ஸ் என்று அர்த்தப்படுத்திக் கொண்டால், அந்தப் பதிப்பாளன் எழுத்தாளனிடம் நீ மட்டும் என்ன சுட்டுத்தான எழுதினே என்று சொல்லும் இடத்தில் சிறுகதைக்கான முரண் கிடைத்துவிடுகிறது எனக்கு. அறம் பாடுதல், அதன் தொடர்ச்சியான விஷயங்கள் என்று வலிந்து திணிக்கப்பட்ட மெலோ டிராமாவாகத் தெரியுத

கோணங்கி எனும் புதிர்

நேற்று BUZZல் கோணங்கி எழுத்துக்களின் புரியாமை குறித்த ஒரு நீண்ட விவாதம் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்ட பகுதிகள் மட்டும் இங்கே பகிர்கிறேன். சுவாரசியமான முழு விவாதத்தையும் படிக்க‌ விரும்புபவர்கள் இங்கே செல்லலாம்: http://www.google.com/buzz/ayyanar.v/iaL4QjKmHxg/க-ணங-க-ய-ப-பற-ற-ஜ-ம ******* Ayyanar Viswanathan : கோணங்கியைப் பற்றி ஜெமோ,சாரு & மாமல்லன் எழுதிய இடுகைகளை ஒரு சேர வாசித்துக் கடுப்பானேன். கோணங்கியும் குமாஸ்தா எழுத்தாளர்களும் எனத் தலைப்பிட்டு பொங்கி எழுந்துவிடலாமா என யோசித்துப் பின் சலூன் நாற்காலியை முடித்துவிட்டு விரிவாய் எழுதலாம் என அந்தக் கடுப்பைத் தள்ளி வைத்தேன். கோணங்கியை நண்பனாக, பிரியமானவனாக, பொறாமை கொள்ளும் வாழ்வை வாழ்பவனாக சம கால எழுத்தாளர்களுக்குப் பிடித்திருக்கிறதே தவிர அவரை எழுத்தாளராக யாருக்கும் பிடிக்கவில்லை. ஒரு எழுத்தாளனே இன்னொரு எழுத்தாளன் எழுதுவதை "புரியவில்லை" "தோற்றுவிட்டது" என்றெல்லாம் விமர்சிப்பது எத்தனை மேம்போக்கானது?! கூடவே நாகார்ச்சுனன் மீதும் பழிபோடுவதையும் ஒருமித்த குரலாகப் பார்க்க முடிகிறது. இந்தச் சிக்கல் குறித்து