எந்திரன் கதை என்னுடையது!
எந்திரன் படத்தின் ஆராதக்கதை மற்றும் காட்சியமைப்புகள் தன்னுடையது என இரண்டு எழுத்தாளர்கள் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் செய்திருக்கின்றனர். கதைத்திருட்டு என்பது தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மிக சகஜமான ஒன்று தான் (கமல்ஹாசனின் தசாவதாரம் படமே அப்படித்தான் என்கிறார்கள்). சினிமாக் கதைகளைப் பதிவு செய்யும் இடத்திலேயே இதை வேவு பார்த்து தேவையானவர்களுக்கு சுடச்சுட சேர்ப்பித்து விடுகிறார்கள் எனப் பிரபல எழுத்தாளர் ஒருவர் சொல்லக் கேள்வியுற்றேன். ஆரூர் தமிழ்நாடன் என்பவர் அமுதா தமிழ்நாடன் என்ற பெயரில் உதயம் (ஏப்ரல் 1996) இதழில் எழுதிய ஜூகிபா.. என்ற சிறுகதையையும், பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் மாலைமதி (ஜூலை 13, 1995) இதழில் எழுதிய ரோபோட் தொழிற்சாலை நாவலையும் முன்வைத்து எந்திரன் மேல் இந்தக் கதைத்திருட்டுப் புகாரினை அளித்திருக்கிறார்கள். இதில் தமிழ்நாடனின் ஜூகிபா.. சிறுகதையை இன்று தான் வலையில் ( 1 , 2 , 3 , 4 ) வாசித்தேன். நாசரின் ரோபோட் தொழிற்சாலை நாவலை அது வெளியான போதே படித்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் - ஆம். இவை இரண்டின் வலுவான பாதிப்பு நிச்சயம் எந்திரனில் இருப்...