இளம் விமர்சகர்
காவல் கோட்டம் பற்றிய ஒரு கடிதத்துக்கு பதிலெழுதுகையில் எனது விமர்சனத்தைக் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன். காவல்கோட்டமும் தோழர்களும் - http://www.jeyamohan.in/?p=25268 ******* நாவலைப்பற்றி நான் விரிவாக எழுத இரு காரணங்கள். ஒன்று, அதில் இருந்த மார்க்ஸிய முரணியக்கவியல் அணுகுமுறை. அது எனக்கு எப்போதுமே உவப்பானது. ஒவ்வொரு வரலாற்றுச் சக்தியும் நேர் எதிரான இன்னொரு வரலாற்றுச் சக்தியினால் முரண்பட்டு இயக்கப்படுகிறது என்ற மார்க்ஸிய வாய்ப்பாட்டுக்கு மிக விசுவாசமான நாவல் காவல்கோட்டம். மார்க்ஸிய அணுகுமுறையைத்தான் நானும் வரலாற்றில் போட்டுப்பார்ப்பேன், ஆனால் வெங்கடேசன் போல அதை சொல்மாறாத சூத்திரமாகக் கொள்ளமாட்டேன். எனக்கு அது வரலாற்றின் புற விசைகளை மட்டும் அறிய உதவும் ஒரு கருவி மட்டுமே. ஆனாலும் வெறுமே கதைசொல்லுவதற்கு அப்பால் சென்று வரலாறு செயல்படும் விதத்தை எழுத முயன்ற முதல்நாவல் காவல்கோட்டம் என்பது எனக்கு முக்கியமாகப் பட்டது – எப்படி அதைச்செய்திருக்கிறார் என விரிவாக எழுதியிருக்கிறேன். இந்தக் காரணத்தால்தான் மார்க்ஸிய விமர்சகரான ஞானியும் காவல்கோட்டத்தைத் தமிழின் தலைசிறந்த வரலாற்றுநாவல் ...