துரோகத்தின் வீச்சம்
" இதய வயிற்றுள் துக்கம் ஜெரித்துப் பிறந்தது வேதனை அமிர்தம். " இது தான் சுப்ரமணியபுரம் . பிரமிளின் "ரஸவாதம் " என்ற கவிதையின் இறுதி வரிகள் இவை. 1978ம் ஆண்டு கொல்லிப்பாவை இதழில் வெளியானது. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் என்கிற கிராமத்தில் நிகழும் குற்றங்களின் குருதி நதியில் ஒளிரும் துரோகமும் அதனால் அடியோடு திசை மாறும் ஐந்து நண்பர்களின் வாழ்க்கையும் தான் இத்திரைப்ப டத்தின் அடிநாதம். துரோகத்தின் வீச்சத்தை இத்தனை வீரியமாய் இதுவரை யாரும் தமிழ் திரைப்படத்தில் பதிவு செய்ததில்லை. ரத்தம் வழியும் காட்சிகள் அனைத்திலும் துரோகத்தின் குரூரம் கலையின் கலவையாய் பீறிட்டுப் பளபளக்கிறது. பாலாஜி சக்திவேலின் " காதல் " அமீரின் " பருத்திவீரன் " வசந்தபாலனின் " வெயில் " ஆகிய படங்களுடன் தயக்கமின்றி சசி குமாரின் " சுப்ரமணியபுரம் " படத்த்தையும் இணை வைக்கலாம். கதை? முன்னாள் கவுன்சிலர் சோமு என்கிற பணக்கார அரசியல்வாதியின் மகளான துளசியை (ஸ்வாதி), தன் நண்பன் பரமனுடன் (சசிகுமார்) சேர்ந்து வட்டார அடிதடி செய்து கொண்டிருக்கும் அ