Posts

Showing posts from July, 2020

நுளம்பு [சிறுகதை]

Image
அபர்ணா சிலை மாதிரி அந்த நெகிழி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். சிலை என்ற சொல் அவளது தோற்றம், அசைவின்மை இரண்டுக்கும் கச்சிதமாய்ப் பொருந்தியது. ‘நம் ரகசியமெல்லாம் யாருக்கும் தெரியாது என்பதை விட நம் எல்லா ரகசியமும் தெரிந்தவர் யார் என்பது எவருக்கும் தெரியக்கூடாது என்பதே மிக முக்கியமானது.’ ஹெச்எஸ்ஆர் லேஅவுட் காவல் நிலையம் புதன்கிழமையின் மந்தத்தன்மைக்குள் ஒளிந்து கொண்டிருந்தது. தவிர, அருகில் ஒரு நகைக்கடையைத் திறந்து வைக்க நடிகை ரச்சிதா ராம் வருவதாக இருந்தது என்பதால் போலீஸ்காரர்களுக்கு அங்கே ஜோலியிருந்தது. நடிகையைப் பார்க்கப் போகிறார்களா பாதுகாக்கப் போகிறார்களா என்பதில் தெளிவில்லை என்றாலும் கடமையுணர்வுடன் திரண்டு போயிருந்ததனர். ஸ்டேஷனில் புகார்களை எடுத்துக் கொள்ள ஒரு ரைட்டர் மட்டும் அமர்ந்திருந்தார். அபர்ணாவுக்கு முன்பாகப் புகாரளிக்க ஒரு கிழவர் காத்திருந்தார். தன் பேத்தியைப் பன்னிரண்டு மணி நேரமாகக் காணவில்லை என நடுங்கியபடி சொன்னார். முந்தின ராத்திரியில் நண்பர்களோடு கிளம்பி பார்ட்டி என்று போனவள் வீடு திரும்பவில்லை; அருகேயுள்ள நேஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பேஷன் டெக்னாலஜியில் படிக்கிறாள்; கடைசியாக அண

யமி [சிறுகதை]

Image
நூதனாவின் பிறவிப் புழையில் மிக உச்ச வலியொன்று விட்டு விட்டுத் தெறித்தது. திறமையான திரைப்பட எடிட்டர் செய்த ஹிப்ஹாப் மான்டேஜ் போல் கலவையான காட்சிகள் தோன்றின: இளஞ்சிவப்புக் கோடுகள், மெரீனா பீச், ராபியா ஆன்ட்டி, ரிக் வேதம், அம்மாவின் பிணம், டார்க் சாக்லேட், டிவி ரிமோட் அப்புறம் நவீனின் முகம்… லோக்கல் அனஸ்தெடிக் செலுத்திக் கொண்டு உடல் மரத்துப் போகக் காத்திருந்தாள். மெல்ல வலது காலைத் தூக்கிப் பார்த்தாள். தூக்க முடிந்தது. அப்புறம் இடது காலை. பாதி வரை முடிந்தது. அப்புறம் இரண்டு கால்களையுமே அசைக்க முடியவில்லை. தட்டுத் தடுமாறித் துருவற்று மின்னிய கத்தியைக் கையிலெடுத்து நடுக்கத்துடன் தனது வயிற்றில் வைத்தாள். மானசீகமாய் நீள அகலம் கணித்து விரிவுற்றிருந்த தொப்புளுக்கு மூன்று அங்குலம் கீழே கீறினாள். புதிய ரத்தம் அவசரமாய் எட்டிப் பார்த்தது. முகத்தைச் சுழித்து, பல்லைக் கடித்து வலியை அடக்கிக் கோடிழுத்தாள். அவள் படுத்திருந்த கட்டிலினருகே குனிந்து நின்று அவள் கைகளைப் பற்றியிருந்த நவீன் கண்களை மூடிக் கொண்டான். விடியல் விழிகளைத் திறக்கத் தொடங்கியது. * மொத்த நட்சத்திரங்களையும் உதிர்த்துப் பூரண ந