வீரனின் பாடல்கள்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEix95D5w08JL1dGTgUL8bNQlq16sCvsl6YflD17XqhkUnqn3mjznhKnTKUNttd-EOoE85qluCuQMeUeHV43TI7YxzY6mnPJArvMdTBYJJPl6AWgcXL9QWBEZC4bUz1Dqprj0avMA-UGWyenu89Ql8gN52yeZrIvu9AVVvPdk-IecSSzQS6kRcyo9D_wSGQ/s320/PerumalMurugan.jpg)
பெருமாள்முருகன் தமிழ் இலக்கியத்தின் சமீபப் பரபரப்பு. அனேகமாக எல்லாத் தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் மீது மெல்லிய பொறாமை உண்டு என்றுதான் சொல்வேன். ஆங்கில மொழிபெயர்ப்பு பெரும்பான்மை எழுத்தாளர்களின் ரகசியச் சொப்பனம். அவை கொணரும் உரிமப் பணமும் பெரும் புகழும் ஒரு பக்கம், அவை திறந்து விடும் பிரம்மாண்ட வாசல்கள் மறுபுறம் என வசீகரமான பக்க விளைவுகள் கொண்டவை. நேரடியாகச் சர்வதேசப் பதிப்பகங்கள் மூலம் நூல் வெளிவருதல் முதல் உலக இலக்கிய விழாக்களுக்கு அழைக்கப்படுதல் வரை இதன் சாத்தியங்கள் அளப்பரியவை. தமிழில் அவ்வேலை செம்மையாக நடந்து கொண்டிருக்கும் எழுத்தாளர் பெருமாள்முருகன். அதன் பலனாக அவரது பெயர் தொடர்ச்சியாகப் பல்வேறு சர்வதேசிய விருதுகளின் இறுதிப் பட்டியல்களிலும் இந்திய அளவிலான பெரும் பரிசுகளிலும் இடம் பெறுகிறது. அதற்கு அவரது எழுத்துக்களின் தரம், தகுதி மட்டுமின்றி பதிப்பிக்கும் காலச்சுவடின் முன்னெடுப்புகளும் முக்கியக் காரணம். சமீப வெற்றி 25 லகரம் இந்திய ரூபாய்கள் பரிசாகக் கொண்ட ஜேசிபி இலக்கிய விருது - அனேகமாக இந்தியப் புத்தகங்களுக்கு அளிக்கப்படுகிற பரிசுகளில் அதிகத் தொகை கொண்டது இதுதான். அவர் எழுத...