Posts

Showing posts from November, 2016

500, 1000, அப்புறம் ஜெயமோகன்

Image
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு மற்றும் அதன் விளைவுகள், எதிர்பார்ப்புகள் குறித்து ஜெயமோகன் எழுதியுள்ள நெடுங்கட்டுரையில் ( http://www.jeyamohan.in/92500 ) சொல்லி இருப்பனவற்றில் சில‌ அடிப்படை விஷயங்களிலேயே வேறுபடுவதால் நல்ல உழைப்பும் சிந்தையும் கொண்ட அக்கட்டுரையைக் கடக்க வேண்டியவனாக இருக்கிறேன். 1) ஜெயமோகன் கட்டுரையின் ஆதார நம்பிக்கை கறுப்புப்பணமானது இந்தியாவில் நோட்டுக்களாகவே மிகப்பெருமளவில் தேங்கி இருக்கிறது என்பது. அவர் சில தொழிலதிபர்கள் மற்றும் பொருளியல் அறிஞர்களுடன் பேசியதன் அடிப்படையில் இதை முன் வைக்கிறார். புள்ளி விபரத்துடன் இது சரி தான் என அவரும் நிரூபிக்கவில்லை; அது தவறென நாங்களும். ஆனால் பொதுவான தர்க்கத்தின் அடிப்படையில் பெரும்பாலான கள்ளப் பணம் நோட்டுக்களாக இருக்க வாய்ப்பில்லை என்பது என் புரிதல். நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் என் இயல்பான‌ மோடி எதிர்ப்பு நிலைப்பாடு தாண்டி தேசாபிமான‌ அடிப்படையில் அதை ஆதரித்து எழுதிய போதும் கூட‌ ( https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10154024889982108 ) இதைக் குறிப்பிட்ட

துப்பறியும் சுதா

Image
ஒரு நெடுங்கதையும் இரு சிறுகதைகளும் அடங்கிய அம்பையின் தொகைநூல் அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு . எனக்குப் பிடித்த ஒரே பெண் புனைவெழுத்தாளர் என்று அம்பையைத் தான் சொல்ல முடிகிறது. (கடந்த பத்தாண்டுகளில் எழுதத் தொடங்கி இருப்பவர்களின் கதைகளை அங்கொன்றும் இங்கொன்றும் தவிர அவ்வளவாய்ப் படித்ததில்லை.)   அவரின் வழமை போல் இக்கதைகளும் பெண்களின் பிரச்சனைகளைத் தான் பேசுகின்றன. (கவனிக்கவும். பெண்ணியம் அல்ல; பெண்களின் பிரச்சனைகள்.) அவரது மற்ற சிறுகதைத் தொகுதிகள் போல் அல்லாமல் இந்நூலின் கதைகள் ஒரே கதாபாத்திரங்களைக் கொண்டவை. சுதா குப்தா என்ற மும்பையில் வசிக்கும் ஒரு தமிழ் துப்பறியும் பெண் கையாளும் சில‌ வழக்குகளே இக்கதைகள். இவற்றில் நெடுங்கதையான மைமல் பொழுது மட்டும் அசலான துப்பறியும் கதையின் ஒழுக்கில் அமைந்துள்ளது. மற்றவை நகர்ப்புற சமூகக் கதையில் நடமாடும் துப்பறியும் கதாபாத்திரம் மட்டும் என்பேன். மைமல் பொழுது கதை மிகச் சிறப்பாக இருந்தது (மைமல் என்றால் மாலை). நல்ல த்ரில்லர் கதை. ஆனால் திகில் கதைகளுக்குரிய‌ மேலோட்டமான கதை சொல்லலாக அல்லாமல் இலக்கியப் பிரதியாக எளிதில் உயர்ந்து விடுகிறது. ஆனால் ஒரு

நெருப்பின் குரல்

Image
அருண்ராஜா காமராஜ் - பெயர் சொன்னால் தெரியுமளவு இன்னும் பிரபலமாகவில்லை. கபாலியில் 'நெருப்புடா' பாடலைப் பாடியவர் என்றால் எல்லோருக்கும் தெரியும். சந்தோஷ் நாராயணன் இசையில் அருண்ராஜா காமராஜ் எழுதிப் பாடிய பாடல்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை எனக் குற்றம் சொல்ல இடமுண்டு என்றாலும் அவை தனித்துவமானவை; நல்ல ரசிப்புக்குரியவை; எனக்குப் பிடித்தமானவை. சொல்லப் போனால் அவர் குரலே ஒரு மெய்நிகர் நெருப்பு தான். (இதே போல் சந்தோஷ் நாராயணன் அறிமுகம் செய்த பாடகர்களுள் இன்னொரு முக்கியமானவர் ப்ரதீப் குமார்.) இப்பாடல்களை பொதுவாய் ஹீரோயிசப் பாடல்கள் என வகைப்படுத்தலாம். ஆனால் பாடல் இடம்பெறும் சூழல் தாண்டி அதற்குப் பயன்படுத்திய இசை, வரி மற்றும் குரலையொட்டி தனி genre-ஆகவே பிரிக்கலாம். ஒரு மாதிரி raw-ஆன பாடல்கள். இதற்கு முன்னோடி என்றால் சிவாஜி படத்தில் நரேஷ் ஐயர், ப்ளாசே உள்ளிட்டோர் பாடிய வாடா வாடா பாடலைச் சொல்லலாம். அதற்கும் முன்பு இதைத் தொடங்கி வைத்தது கமல்ஹாசனும் இளையராஜாவும். தேவர் மகனின் சாந்துப் பொட்டு பாடலின் மூலம். ஆனால் சந்தோஷ் நாராயணனும் அருண்ராஜா காமராஜாவும் அதற்கு வேறொரு பரிணாமம் தந்திருக்கிறார்

500 / 1000 நோட்டு: சாதாரணர்கள் என்ன செய்யலாம்?

Image
நேற்றைய நள்ளிரவு முதலாக‌ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினெட் முடிவு செய்திருக்கும் நிலையில், இதனால் கறுப்புப் பணம் வெளியே வருமா, கள்ளப் பணம் ஒழிக்கப் படுமா என்றெல்லாம் பொருளாதார வல்லுநர்கள் விவாதித்துக் கொள்ளட்டும். ந‌ம் போன்ற சாதாரணர்கள் இச்சிக்கலைக் கடப்பதைப் பற்றிப் பேச விரும்புகிறேன். சாதாரணர்கள் என்றால் ஏழையோ, பணக்காரரோ, மத்யமரோ கறுப்புப் பணம் பற்றிய கவலையற்ற எளியோர். இந்திய ஜனத்தொகையில் உத்தேசமாய் 90 விழுக்காடு இவ்வகைமையில் தான் வரும். 1. நாளை முதல் வங்கிகளில், தபால் அலுவலகங்களில் பழைய 500 அல்லது 1000 நோட்டுக்களைக் கொடுத்து விட்டு புதிய நோட்டுக்களை வாங்கிக் கொள்ளலாம். (நவம்பர் 24 வரை தலைக்கு ரூ. 4,000 உச்ச வரம்பு. பிற்பாடு இது உயர்த்தப்படும்.) 2. மேற்கண்ட‌ எல்லா இடங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்கேனும் கூட்டம் பெரிய அளவில் இருக்கும். பணியிடத்தில் விடுப்பு / அனுமதி பெற்றே இதைச் செயல்படுத்த வேண்டி இருக்கலாம். அதற்குத் தயார் செய்து கொள்ளுங்கள். 3. அத்தியாவசியங்கள் தவிர்த்து முடிந்த அளவு உங்கள் மற்ற‌ செலவுகளை ஒரு வாரத்திற்கு

பூக்குழி : காதலை எரிக்கும் சாதியம்

Image
தற்காலிகமாய் நின்று போயிருக்கும் 'தமிழ்' மின் சஞ்சிகையின் கடைசி இதழ் பெருமாள் முருகன் சிறப்பிதழாக க் கடந்த ஆண்டு வெளியானது. அதில் அவரது பெரும்பாலான புத்தகங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. இதழின் ஆசிரியரான‌ நான் தலையங்கம் தவிர ஏதும் எழுதக்கூடாது, ஒரே இதழில் ஒருவரது ஒரு படைப்புக்கு மேல் இடம்பெறலாகாது என்பன மின்னிதழுக்கு நான் பின்பற்றி வந்த முக்கிய விதிகள். ஆனால் அவ்விதழில் இரண்டையும் உடைத்திருந்தேன். நான் மாதொருபாகன், ஆலவாயன் & அர்த்தநாரி நாவல்களை முன்வைத்து விரிவானதொரு கட்டுரை எழுதியிருந்தேன். வந்து சேர வேண்டிய‌ கட்டுரை ஒன்று கடைசி நேரத்தில் கிட்டாமல் போக, வேறு வழியின்றி இருந்த அவகாசத்தில் பூக்குழி நாவல் குறித்து சுருக்கமாய் நானே ஒரு கட்டுரை எழுதினேன் - என் மனைவியின் பெயரில். இதுகாறும் புனைப்பெயரில் வெளியான என் ஒரே படைப்பு இது தான். அதை இப்போது இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஓராண்டு கழித்து இதைத் தற்போது வெளியிடக் காரணம் 2016 தினகரன் தீபாவளி மலரில் வெளியாகி இருக்கும் சாரு நிவேதிதாவின் நேர்காணல் தான். அதில் அவர் பூக்குழி நாவல் பற்றி இவ்வாறு குற