Posts

Showing posts from November, 2019

Pen to Publish - 2019: சில‌ முக்கியச் செய்திகள்

(1) சில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள‌ படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாக ச் சரிவர ப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும். ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக‌ மிக மிகக் குறைவு. உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்