Children of War - ஓர் உரையாடல்
ஒரு வரலாறு உண்டு. கொடூர வரலாறு. வரலாறு என்பதே கொடூரங்களின் தோரணம் தானே. யோசித்துப் பார்த்தால், உண்மையில் கொடூரங்கள் மட்டுமே வரலாற்றில் அழுத்தம் திருத்தமாய் தவறாமல் பதிவுறுகின்றன! ஹிட்லர், முஸோலினி, ஸ்டாலின், போல்பாட், ராஜபக்ஷேவை மறப்போமா? அவ்வளவு ஏன்... சரி, விடுங்கள்! 1971ல் ஒன்பது மாதங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக நிகழ்ந்தது பங்களாதேஷ் சுதந்திரப் போர். தங்கள் உரிமைகள் சரிவர கவனிக்கப்படவில்லை என்பதால் மேற்கு பாகிஸ்தானிலிருந்து தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது பங்களாதேஷ் எனும் கிழக்கு பாகிஸ்தான். அதனால் பாகிஸ்தானிய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானில் குவிக்கப்பட்டு மக்கள் ஒடுக்கப்பட்டனர். கொலைகளும், கொள்ளைகளும், சித்ரவதைகளும் சகஜமாய் இருந்தன. உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. யுத்தங்களின் போது பெண்கள் வல்கலவி செய்யப்படுவது தொன்று தொட்டு வழக்கில் வருந்து வரும் மானுடக் கலாச்சாரம் தான் என்றாலும் இங்கே கொஞ்சம் வேறு மாதிரியானது. இளம் பெண்களை முகாம்களில் அடைத்து வைத்து தொடர்ச்சியான கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, திட்டமிட்டு அவர்களைக் கர்ப்பம் ஆக்கினர். அதாவது "பாகிஸ்தாலினிருந்து