Posts

Showing posts with the label வரலாறு

எரிநட்சத்திரம்

Image
18ம் நூற்றாண்டின் இறுதியாண்டுகளில் ஃப்ரெஞ்சு ராணுவத் தலைவர் நெப்போலியன் இந்தியாவில் ப்ரிட்டிஷ் பிடித்து வைத்திருக்கும் பகுதிகளைக் கைபற்றும் திட்டத்தை வகுத்தார். ஆங்கில எதிர்ப்பின் காரணமாக தந்தையைப் போலவே திப்பு சுல்தானும் ப்ரெஞ்ச் ஆதரவாளர். இக்கணக்கீடுகள் நான்காம் மைசூர் போருக்கு இட்டுச் சென்றன. உலகின் இரு பெரும் போர் வீரர்களின் தலைவிதி அந்தப் போரில் கிறுக்கப்பட்டது. திப்பு சுல்தானுக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் இடையே நான்காம் மற்றும் கடைசி மைசூர் போர் உச்சமாய் நடந்து கொண்டிருந்த சமயம். ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிடும் நோக்கில் ப்ரிட்டிஷ் துருப்புக்கள் முன்னேறிக் கொண்டிருந்தன. ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டைக்கு 1.6 கிமீ முன்பாக மரங்கள் அடர்ந்த சுல்தான்பேட்டை தோப்பு அமைந்திருந்தது. அங்கே திப்பு சுல்தானின் படை ஒன்று முகாமிட்டிருந்தது. கம்பெனியின் படை ஸ்ரீரங்கப்பட்டினத்தை முற்றுகையிட இவர்களை அப்புறப்படுத்த வேண்டி இருந்தது. கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி தலைமையிலான ஒரு படையை அந்தக் காரியத்தை முடிக்க அனுப்பி வைத்தார்கள். 5 ஏப்ரல் 1799 அன்று இரவு தன் படையினருடன் தோப்புக்குள் நுழைந்...

ஃப்ரெஞ்ச் கிஸ்

Image
“I thought it was my job to give all the boys their first kiss.” -    Jessica Alba, Hollywood Actress ஃப்ரெஞ்ச் கிஸ் என்பது பொதுவாய் ஆணும் பெண்ணும் காதலின் / காமத்தின் நிமித்தம் உதட்டோடு உதடு வைத்து பரிமாறிக் கொள்ளும் ஒரு வகை முத்தம். லிப் லாக், மௌத் கிஸ் எனப் பலவாறாக இது அழைக்கப்ப‌டுகிறது. உதடுகள் கலப்பது என்பதைத் தாண்டி நாக்குகள் பரஸ்பரம் துழாவிக் கொள்வதும் அதன் நீட்சியாய் எச்சில் பரிமாற்றமும் நிகழும். நெற்றி, கன்னம், புறங்கை பகுதிகளில் முத்தமிடுவதை விட அந்தரங்கமானதாக ஆனந்தரகமானதாக கருதப்படுவது இது! செசர் லம்ப்ரோஸோ காதலர்களிடையேயான‌ உதட்டு முத்தம் ஆதிகாலத்தில் தாய்க்கும் சேய்க்கும் இடையேயான வாய்வழி உணவு ஊட்டும் பழக்கத்திலிருந்து உருவானதாகச் சொன்னார். எர்னெஸ்ட் க்ராலி பறவைகள் அலகுகளில் கொஞ்சிக் கொள்வதும், பூச்சிகள் உணர்கொம்புகளில் முட்டி விளையாடுவதும் கூட உதட்டு முத்தத்தின் பரிமாணமே என்றார். மனிதக்குரங்குகளில் உதட்டு முத்தம் சகஜம் - சிம்பன்ஸிக்கள் திறந்த வாயுடனும், போனோபோக்கள் நாக்கு தொடுமளவும். பொதுவாய் முத்தம் என்பதே பிரத்யேகத் தொடுகை. அதிலும் உதட்டு முத்தம் இ...

பெண்மைப் பஞ்சு

Image
“ So what would happen if men could menstruate? Clearly, menstruation would become an enviable, worthy, masculine event: Sanitary supplies would be federally funded and free. Of course, some men would still pay for the prestige of commercial brands ” - Gloria Steinem, American Journalist சானிடரி நாப்கின் என்பது பெண்களின் மாதவிலக்கின் போதான ரத்தப் போக்கை உறிஞ்சி சுகாதாரத்தையும், சௌகர்யத்தையும் தரும் பஞ்சுப் பொருள். இது தவிர யோனியில் அறுவை சிகிச்சை, பிரசவத்துக்குப் பிந்தைய நாட்கள், கருக்கலைப்பு என பெண் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு நிகழ வாய்ப்புள்ள எல்லா சூழல்களிலும் அதைக் கையாளப் பயன்படுகிறது. சானிடரி டவல், சானிடரி பேட் என்று வேறு பெயர்கள் இதற்கு உண்டு - அல்லது பேட் என்று சுருக்கமாய். நம்மூரில் பிரபல ப்ராண்டின் பெயரால் பொதுவாய் இதை விஸ்பர் என்று அழைப்பவரும் உண்டு. சானிடரி நாப்கின் என்பது உடலுக்கு வெளியே, உள்ளாடையுடன் ஒட்டி வைத்துப் பயன்படுத்துவது. இன்னொரு வகையான டாம்பன் என்பது உடலுக்கு உள்ளே உறுப்புக்குள் வைத்துப் பயன்படுத்துவது. அடுத்து மென்ஸ்டுரல் கப் என்பது உடலின் உள்ளே வைத்து ர...

மாநில சுயாட்சி என்பது மாயையா?

Image
“The Federation is a Union because it is indestructible.” - B.R. Ambedkar பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதா தற்கொலை தொடர்பான பேச்சிடையே நீட் தேர்வை முன்வைத்து கல்வி தொடர்பான சட்டங்களை இயற்றும் உரிமை மாநிலங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிட்டார் கமல். மாநில சுயாட்சிக் கோரிக்கை தொடர்பான நெடிய வரலாற்றில் ஒரு சிறுகுரல் தான் அது. சொல்லப் போனால் கமல் கேட்ட உரிமை ஏற்கனவே மாநில அரசுகளுக்கு உண்டு - ஆனால் ஏட்டளவில் மட்டும். அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என வர்ணிக்கிறது (“India, that is Bharat, shall be a Union of States.” - பிரிவு 1) என்றாலும் அதில் நம் நாட்டின் அரசமைப்பைச் சுட்ட கூட்டாட்சி (Federal), கூட்டமைப்பு (Federation) போன்ற சொற்கள் எங்குமே நேரடியாய்ப் பயன்படுத்தவில்லை எனினும் இந்திய அரசியலைப்புச் சட்டம் கூட்டாட்சித்தத்துவத்தையே முன்வைப்பதாக நம்பப்படுகிறது. காதல் என்ற சொல்லை எங்குமே பயன்படுத்தாமல் இல்லாமல் திருக்குறள் காதலைச் சொல்லவில்லையா! கூட்டாட்சி என்றால் என்ன? அது கூட்டணி ஆட்சி (Coaliation) அல்ல. மாநிலங்களை ஒன்றிணைத்த ஒரு தேசிய அரசுக்கும் (Central) அந்த மா...

ஆட்சிக் கலைப்பு அரசியல் ஆயுதமா?

Image
“Power tends to corrupt and absolute power corrupts absolutely. Great men are almost always bad men.” - Lord Acton வெகுஜன மக்கள் மத்தியில் கூட இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பிரிவின் எண் பழக்கமாகிப் புழக்கத்தில் இருக்கிறதெனில் அது 356ம் பிரிவு தான். மாநில ஆட்சிக் கலைப்பு. தம் மாநிலத்தை ஆள தாம் தேர்ந்தெடுத்த ஓர் அரசு நியாயமான அல்லது அஃதற்ற காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்படுவதால் அப்பிரிவு அவர்களின் மன உணர்வுகளோடு நேரடித் தொடர்பு ஸ்தானத்தைப் பெற்று விட்டதெனத் தோன்றுகிறது. ஆட்சி கலைக்கப்பட்டதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்து விடும் என்றாலும் எழுத்துப்பூர்வமாக இந்திய ஜனாதிபதியே அம்மாநில ஆட்சிக்கான பொறுப்பாளர் என்பதால் ஆட்சிக் கலைப்பை ஜனாதிபதி ஆட்சி என்றும் அழைப்பர். (ஜம்மு & காஷ்மீர் மாநிலம் மட்டும் சாசனத்தின் 370ம் பிரிவின் காரணமாக வேறு விதமாகப் பாவிக்கப்படுகிறது என்பதால் அங்கே அதற்குப் பெயர் ஆளுநர் ஆட்சி!) இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த 68 ஆண்டுகளில் இதுவரை 115 முறைகள் இப்பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்பட்டிருக்கின்றன (தமிழகத்தில் மட்டும் 4 ...

இந்திய ஜனாதிபதி ரப்பர்ஸ்டாம்ப்பா?

Image
மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லகரம் (7வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு கேபினெட் செக்கரட்டரியின் சம்பளம் இதை விட அதிகமாகிவிட்டது என்பதால் இதை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது). சம்பளம் போக செலவுக்காக ஆண்டுக்கு 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வசிக்க தில்லியில் உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை. தவிர ஹைதராபாத்திலும் சிம்லாவிலும் ஓய்வெடுக்கும் மாளிகைகள். பயணம் செய்ய மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார். இத்தனையும் இந்திய ஜனாதிபதிக்கு மக்கள் வரிப்பணத்தில் அளிக்கப்படுகிறது. ஒரு ரப்பர் ஸ்டாம்ப்புக்கா இத்தனையும்? எப்போதும் நாம் இந்திய ஜனாதிபதி என்பவரை ஒரு பொம்மையாக அல்லது ஒரு கோமாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கடந்த கால் நூற்றாண்டாக கேஆர் நாராயணன் போன்ற வலுவான ஆளுமை கொண்டோரும், அப்துல் கலாம் போன்ற துறைசார் பிரபலங்களும் வந்த போது மட்டும் அப்பதவியை லேசாய்க் கவனிப்போம். மற்றபடி அதை ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேலை என்றே பாவிக்கிறோம். நம் மனதில் இருக்கும் பிம்பம் போல் அது நிஜமாகவே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி தானா? உண்மையில் புதையல் காக்...