மருத்துவமனையில் பின்காலனிய நாட்டின் கவிஞன்
" ஆம், ஒரு கொலைகாரன் புரட்சிக்காரனையும் மகாத்மாவையும் உருவாக்குகிறான் " - ரமேஷ் பிரேதன் ( காந்தியைக் கொன்றது தவறுதான் தொகுப்பிலிருந்து) * ரமேஷ் பிரேதன் தமிழின் முக்கியமான பின்நவீனத்துவப் படைப்பாளியாகக் கருதப்படுபவர். பிரேம் என்பவருடன் சேர்ந்து ரமேஷ் : பிரேம் என்ற பெயரில் ஆரம்பத்தில் எழுதினார். உயிர்மையின் சுஜாதா விருதை முதல் ஆண்டிலேயே காந்தியை கொன்றது தவறுதான் கவிதைத்தொகுதிக்குப் பெற்றார். அவரது எழுத்துக்களை நான் குறைவாகவே வாசித்திருக்கிறேன். அவர் பிரேமுடன் இணைந்து எழுதிய சில படைப்புகளை கல்லூரிக் காலகட்டத்தில் படித்திருக்கிறேன். இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும் என்ற அபுனைவு நூலில் தான் தொடங்கினேன். அப்போதைய என் வாசிப்புப்படியில் சிக்கலான மொழியமைப்பில் இருந்தாலும் அது பிடித்திருந்தது. பிறகு கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள் என்ற குறுநாவல் தொகுப்பு. அதில் கணிசமான பகுதிகள் புரியவில்லை. மீத இடங்களில் காமம் வழிந்தது. அதைத் தொடர்ந்து சொல் என்றொரு சொல் என்ற அவர்களின் நாவலை நூலகத்தில் எடுத்து வாசித்து முடிக்கவியலாமல் திருப்பினேன். முழுக்கப் புரிய