Posts

நித்ய தண்டனை

Image
வைரமுத்து இல்லையென்றால் நான் எழுத்தாளன் ஆகியிருக்கவே மாட்டேன். என் வருகையை உலகிற்கு அறிவித்தவர் வைரமுத்து. அந்த நன்றியும் மரியாதையும் எப்போதும் அவர்மீது எனக்கு உண்டு. இறுதி வரையிலும் இருக்கும். ஆனால் அதன் நிமித்தம் அவர் இலக்கிய இடத்தை உயர்த்தியோ, அவரது பாலியல் அத்துமீறல்களை ஆதரித்தோ ஒருபோதும் பேச மாட்டேன். எழுத்தில் வைரமுத்துவின் இடம் என்ன? வைரமுத்து மிகச் சிறந்த திரைப் பாடலாசிரியர். இந்திய அளவில் கூட இதுவரை உருவான சினிமா பாடலாசிரியர்களுள் முதன்மையானவராக இருக்கலாம், ஆனால் எனக்கு பன்மொழிப் பாண்டித்யம் இல்லாததால் அதை உறுதி செய்ய முடியவில்லை. ஆனால் தமிழ் சினிமா அளவில் எடுத்தால் ஆகச் சிறந்த பாடலாசிரியர் அவரே - கண்ணதாசனும், வாலியும் அவருக்குப் பின்தான். வெகுஜனங்களை வாசகர்களாகக் கொண்ட புதுக்கவிதையை எடுத்துக் கொண்டாலும் அவரே தமிழில் முதன்மையானவர். தமிழில் பரப்பியப் புதுக்கவிதை எழுதிய அனேகம் பேரை வாசித்திருக்கிறேன் (குறைந்தது ஒரு நூலேனும்) என்ற தகுதியில் இதை உறுதியாகச் சொல்வேன். போலவே 'வில்லோடு வா நிலவே' குறிப்பிடத்தகுந்த வெகுஜன நாவல். இதைத் தாண்டி நவீன இலக்கியத்தில் வைரமுத்துவுக்கு எந

தடுப்பூசி அனுபவங்கள்

Image
நண்பர்கள் சிலர் நான் தடுப்பூசி போட்டுக் கொண்டதைப் பற்றி தனிப் பேச்சில் விசாரிக்கிறார்கள் என்பதால் பொதுவாய் என் அனுபவத்தை, புரிதல்களை எழுதி விடலாம் என நினைக்கிறேன். என் அம்மாவிலிருந்து தொடங்கலாம். மார்ச் துவக்கத்திலிருந்து 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்திய‌ அரசு தடுப்பூசி போடத் துவங்கினார்கள். எனக்கு அந்த மாதம் முழுக்க அம்மாவுக்குத் தடுப்பூசி போடுவதில் தயக்கங்கள் இருந்தன - இத்தனைக்கும் அவருக்கு எந்த வயோதிக‌ உபாதைகளும் இல்லை. நான் கவலைப்பட்டது தடுப்பூசியின் திறன் குறித்து அல்ல‌; தடுப்பூசியின் உடனடி பக்க விளைவுகள் பற்றியும் அல்ல‌; சில ஆண்டுகள் கழித்து ஏதேனும் பெரிய விளைவுகள் நேருமா என்ற கேள்வியே. அதற்கு அப்போதும் பதில் இல்லை, இப்போதும் இல்லை. இடையில் எங்கள் அடுக்ககத்தில் இருக்கும் முதியோர் அனைவரும் போட்டுக் கொண்டார்கள், ஊரில் என் மாமனார், மாமியாரும் போட்டு விட்டார்கள். இது அம்மாவுக்கு ஒரு peer pressure உண்டாக்கி தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி என்னிடம் கேட்க ஆரம்பித்தார். அதற்கு மேல் நான் தயங்கவில்லை. மறுநாளே நான் அழைத்துப் போய் பெங்களூர் ஓல்ட் ஏர்போர்ட் ரோட் மனிப்பால் மருத்துவமனையில் ப

CSK டயட்: சில சிந்தனைகள்

1) கடந்த ஆண்டு விநாயக சதுர்த்தியன்று ஒரு சின்ன அசம்பாவிதத்துக்குப் பின் உடல் எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்வில் நூறாவது முறையாய் மீண்டும் எழுந்தது. முதலில் நடைப் பயிற்சி மட்டும் மேற்கொண்டேன் - உணவில் எந்தக் கட்டுப்பாடும் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது மிகக் குறைவான பலனே இருந்தது: ஆகஸ்ட் 2020 இறுதி முதல் டிசம்பர் 2020 மத்தி வரை 113 நாட்களில் நடைப்பயிற்சி மட்டும் மேற்கொண்டதில் 4 கிலோ எடை குறைந்தது. பிறகுதான் அதோடு உணவுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்தேன். ஒப்பீட்டளவில் துரித முன்னேற்றம்: டிசம்பர் 2020 மத்தி முதல் ஏப்ரல் 2021 துவக்கம் வரை 112 நாட்களில் நடையோடு டயட்டும் இருந்ததில் 7 கிலோவுக்கு மேல் எடை குறைந்தது. ஆக, மொத்தமாய்ப் பார்த்தால் ஏழரை மாதங்களில் 11 கிலோ எடை குறைந்திருக்கிறது. 2) என்னிடம் எடை எவ்வளவு குறைந்தது என விசாரித்த அனைவரும் அடுத்துச் சொன்னது அந்த உணவு முறையைப் பின்பற்றினால் இன்னும் வேகமாகக் குறையும், இந்த டயட்டை எடுத்தால் இன்னும் சீக்கிரம் குறைக்கலாம் என்கிற யோசனைகளே. ஆம், மிகச் சரி. எனது டயட் முறையைக் காட்டிலும் வீரியமான எடை குறைப்பு உணவு முறைகள் பல உண்டுதான். ஆனால்

சின்ன போட்டி: Entries

போட்டி அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157770881737108 நீட்டிப்பு அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157868518387108 போட்டி நிறைவு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157898830727108 Entries : யாழ் தண்விகா (இறுதி இரவு) - https://www.facebook.com/story.php?story_fbid=2960739200874400&id=100008150463256 Bharathi Narayanan (இறுதி இரவு) - https://www.facebook.com/groups/1444591182255718/permalink/3629485643766250/ Lakshmanan Selvarasu (கன்னித்தீவு) - https://www.facebook.com/groups/1444591182255718/permalink/3515212465193569/ Prabhakaran Namashivayam Rajendran (மியாவ்) - https://www.facebook.com/philosophyprabhakaran/posts/10225906866322708 Bharathi Narayanan (ரதி ரகசியம்) - https://www.facebook.com/groups/1444591182255718/permalink/3606149566099858/ Hema Chandrasekar (96: தனிப்பெருங்காதல்) - https://www.facebook.com/1508788077/posts/10218469770204730 Bharathi Narayanan (பிரியத்தின் துன்பியல்) - ht

CSK Diet

இவை உணவுக் கட்டுப்பாட்டுக்கான என் ஏழு கட்டளைகள். இது எந்தக் குறிப்பிட்ட டயட்டின் பிரதியும் அல்ல. நான் இத்தனை நாள் கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்ட பல விஷயங்களின் அடிப்படையில் நான் வந்தடைந்திருக்கும் ஒரு பட்டியல். (இதில் நான் பால், தயிர், டீ, காஃபி, மது போன்றவற்றைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. ஏனெனில் அவற்றை நான் எடுப்பதில்லை. அதனால் அவை தேவையா, இல்லையா, தேவையெனில் என்ன அளவில் எடுக்கலாம் என்பது பற்றிய அனுபவ அறிவு ஏதும் எனக்குக் கிடையாது. அதனால் அதைப் பேசுவது சரியல்ல.)  Disclaimer: இந்த‌ diet எல்லோருக்கும் பொருத்தமானது எனச் சொல்வதற்கில்லை. ஒவ்வொரு மனித‌ உடலும் தனித்துவமானது. ஆக, ஒவ்வொன்றுக்கும் தனித்தனி உணவு முறையே பொருந்தும். இது என் வழிமுறை மட்டுமே. (நானுமே தொடர்ந்தோ, முழுமையாகவோ, தீவிரமாகவோ இதைப் பின்பற்றியதில்லை. அவ்வப்போது, இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தி இருக்கிறேன்.) ஆக, அதிகபட்சம் இதை ஒரு வழிகாட்டுதலாகக் கொள்ளலாம். இதைப் பின்பற்றிப் பார்ப்பது பற்றி அவரவர் சுயபுத்தியின் அடிப்படையில் தான் தீர்மானிக்க வேண்டும். எதிர்மறை விளைவுகளுக்கு நான் எவ்வகையிலும் பொறுப்பல்ல. நோய்

மீயழகி

Image
கே: உலகின் அழகான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா? ப: ஆம். 1984ம் ஆண்டு. ஒரு நகைக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர வேறு யாரும் கடையில் இல்லை. நல்ல உயரமும் திடகாத்திரமான உடல்வாகும் கொண்ட ஓர் இந்துப் பெண் கடைக்குள் நுழைந்தார். அவரிடம் இலத்தீன் அமெரிக்க சாயல் கொஞ்சம் இருந்தது. ஓர் இளவரசிக்கான தோரணையுடன் நடந்துகொண்டார். யார் கண்டது? உண்மையிலேயே இளவரசியாக இருக்கக்கூடும். அவரது தோலில் ஒருவித மினுமினுப்பு இருந்தது. செம்பு நிறம், நீண்ட கூந்தல், மற்ற அங்கங்கள் அத்தனையும் கச்சிதமாக இருந்தன. எல்லா பருவங்களிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் என நினைத்தேன். ஏதோவொரு அட்டிகையை வாங்கியதாக நினைவு. அதற்கு பில் போடுவதற்கே எனக்கு கூச்சமாக இருந்தது. இளவரசியிடம் பணம் பெறுவதா? அதைப் புரிந்துகொண்டவர் போல புன்னகைத்தார். எனக்குக் கிறக்கமாக இருந்தது. அவரைப் போன்றதொரு அழகியை பிறகெப்போதும் நான் சந்திக்கவில்லை. இப்போது நினைவுகூர்கையில் அவரை மகா காளியின் வடிவுடன் பொருத்திக்கொள்ள முடிகிறது. ஆனால், உக்கிரம் தணிந்தவர். இனிமையானவர். நளினமானவர். (பொலான்யோ Playboy-க்கு அளித்த பேட்டியிலிருந்து. மொழிபெயர்ப்பு:

சிஎஸ்கே அட்டென்ஷன் சீக்கிங் செய்கிறானா?

நான் எழுத ஆரம்பித்தது முதல் கடந்த ஒரு டஜன் ஆண்டுகளாக அவ்வப்போது நான் சந்திக்கும் குற்றச்சாட்டு நான் அட்டென்ஷன் சீக்கிங்கிற்காக சில விஷயங்களை எழுதுகிறேன் என்று. அவர்கள் தங்களைக் கொண்டோ அல்லது இப்படிச் செய்யும் மற்றவர்களைக் கொண்டோ என்னையும் எடை போட முயல்வதால் நிகழும் புரிதற்பிழையே இது. நான் இதுவரை ஒரு பதிவு கூட, ஒரு வாக்கியம் கூட, ஏன் ஒரு சொல் கூட கவன ஈர்ப்புக்காக எழுதியதில்லை. இதை நான் ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன். எனக்கு என்ன இயல்பாக தோன்றுகிறதோ அதை மட்டுமே நான் எழுதுகிறேன். அதைத் தாண்டி வேறில்லை. ஆனால் ஒரு விஷயம், நான் மற்றவர்களை விட ஒப்பீட்டளவில் குறைந்த அளவு தணிக்கை செய்யலாம். அல்லது மற்றவர்களை விட முகத்திலடித்தாற் போல் நேரடியாக எழுதலாம். அது கவன ஈர்ப்புக்காக இல்லை. அது அப்படி இருப்பது தான் சரி என நம்புகிறேன். அப்படி நான் எழுதும் எல்லாமே என் மனதில் தோன்றியவை. எதுவுமே மொண்ணை பிளேட் வைத்துச் சுரண்டுவது போல் யாரையோ ஈர்க்கத் தேடிப் பிடித்ததில்லை. எழுதும் போது இதற்கு இத்தனை லைக் விழும், இந்த சர்ச்சையை உண்டாக்கும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. தனி மனிதத் தாக்குதல் செய்யக்கூடாது, சட

காலத்தின் கலைஞன் - உயிர்மை.காம் தொடர்

Image
நான் சிகப்பு மனிதன் - Memento ஆடு புலி ஆட்டம் - Following ராஜா சின்ன ரோஜா - Short Films தங்க மகன் - Introduction முழுத் தொகுப்பு: https://uyirmmai.com/series/column-on-director-christopher-nolan-by-saravanakarthikeyan-c/

இரண்டாம் காதல் [சிறுகதை]

Image
‘தேவடியா…’ அவளைப் பார்த்ததும் சாவித்ரி மனதில் எழுந்த முதல்ச் சொல் அது தான். முழுக்க ஜீரணிக்காத மாமிசத்துணுக்கு வயிற்றின் அமிலத்தோடு எதுக்களித்து தொண்டைக்குக் காரமாய் ஏறுவது போல் அந்த வார்த்தையை உதடுகளுக்கு இடையே உருட்டினாள். “டோக்கன் நம்பர் 36…” செவிலியின் குரல் சாவித்ரியின் உச்சாடனத்தை அறுத்தது. சாவித்ரி தன் உள்ளங்கை வியர்வையில் பொதித்திருந்த டோக்கனைப் பார்த்தாள். 39. அதற்குள் 36ம் எண்காரி வயிற்றைச் சாய்த்துக் கொண்டு எழுந்து மருத்துவர் அறை நோக்கி மெல்லப் பூனை நடை பயின்றாள். கைகளில் கோப்புடன் அவன் - கணவனாக இருக்க வேண்டும் - அவளை மிகுந்த நாடகீயத்துடன் வழிநடத்தினான். இன்னும் எப்படியும் கால் மணி நேரமாவது ஆகும். பெருமூச்செறிந்து அவளை மீண்டும் கவனிக்கத் துவங்கினாள். அவளுடன் வந்திருந்த ஒருவனுடன் மிகையாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு அவளது குழந்தைப் பருவத்தை வசீகரமாய் நினைவூட்டக்கூடியதாய் இருந்தது. சந்தேகமில்லாமல் பேரழகி. என்னை விடவும். இந்த மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் பதின்மூன்றாவது தளத்தின் Obstetrics and Gynecology Department-ல் அமர்ந்து, நின்று, நடந