பாலாவின் COME-BACK
ஆரண்ய காண்டம் படத்திற்குத் தான் விமர்சனப்பதிவு எழுதுவதாய் ஆரம்பத்தில் திட்டம். ஆனால் அவன் இவன் படம் பற்றிய என் ஒற்றை ட்விட் டிற்கு வந்த பரவலான எதிர்வினைகள் திட்டத்தை திசை திருப்பி விட்டது. ஆனால் குறையொன்றுமில்லை. ஆரண்ய காண்டம் பற்றி நான் சொல்ல நினைத்திருந்த கிட்டதட்ட அனைத்து விஷயங்களைப் பற்றியும் பதிவுலகமே ஒன்று கூடிக் கொண்டாடித் தீர்த்து விட்டது. போதாதற்கு சாரு வேறு ஜூலை மாத உயிர்மையில் பாராட்டவிருப்பதாய்த் தெரிகிறது. அதன் வியாபார வெற்றி பற்றித் தெளிவில்லை. ஆனால் அதை விட ஆக முக்கிய சங்கதியொன்று உண்டு - அது தமிழகத்தில் அறிவுஜீவிகளென அறியப்படுபவர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய மதிப்பீடு. இவ்விஷயத்தில் ஆரண்ய காண்டம் எகோகபித்த ஆதரவைப் பெற்று நல்ல போஷாக்கான குழந்தையாகத் தான் வலம் வருகிறது. பாவம், அவன் இவன் தான் கவனிப்பாரற்றுக் கிடக்கும் சவலைப்பிள்ளை. இன்னொரு விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். அவன் இவன் படத்தை நான் எதிர்மறை எதிர்பார்ப்பினோடு தான் அணுகினேன். பத்து வருடங்கள் முன்பு அவர் எடுத்த இரண்டு நல்ல படங்களை மனதில் கொண்டு பாலா படம் பார்ப்பது ஒரு கடமை போல் என்ற அளவிலான மதிப்