Posts

Showing posts from May, 2020

கன்னித்தீவு - விமர்சனப் போட்டி முடிவுகள்

கன்னித்தீவு விமர்சனக் கட்டுரைப் போட்டி மார்ச் தொடக்கம் முதல் ஏப்ரல் இறுதி வரை நடந்தது. போட்டிக்கு மொத்தம் 35 கட்டுரைகள் வந்தன (முழுப்பட்டியலை இங்கே காணலாம்). அதிலிரண்டு விதிமுறைகள் காரணமாகத் தகுதியிழந்ததால் 33 மட்டும் போட்டியில் இருந்தன. அவற்றிலிருந்து நானும் நண்பரும் 20 கட்டுரைகளை மட்டும் நடுவர் குழுவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம். கன்னித்தீவு நாவலை வாசித்து நல்லபிப்பிராயம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பா. ராகவனும், நவீனாவும் நடுவர்களாக இருக்கச் சம்மதித்தனர். அவர்கள் இருவரும் ஒவ்வொரு கட்டுரைக்கும் அளித்த மதிப்பெண்களின் கூட்டுத் தொகை அடிப்படையில் இறுதி வெற்றியாளர்கள் பட்டியல் இது. முதல் பரிசு (ரூ. 5,000) - சம்பத் குமார் கணேஷ் இரண்டாம் பரிசு ரூ. 3,000) - ரஞ்சனி பாசு மூன்றாம் பரிசு (ரூ. 2,000) - பிரியதர்ஷிணி கோபால் சிறப்புப் பரிசு (ரூ. 1,000) - N.R. பிரபாகரன் போட்டி அறிவிப்பில் மூன்று பரிசுகள் மட்டும் சொல்லியிருந்தேன். இப்போது கூடுதலாய் ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்படுகிறது - கூட்டு மதிப்பெண்ணில் நான்காவதாய் வந்த கட்டுரைக்கு. அது மூன்றாவதிலிருந்து ஒரே மதிப்பெண் தான்