Posts

Showing posts from September, 2019

Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்

Image
அமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த‌ மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்: 1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்? எத்தனை வேண்டுமானாலும். 2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா? தாரளமாய்க் கலந்து கொள்ளலாம். 3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா? இல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும். 4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா? சில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள‌ தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம். 5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி? தமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043016031 தமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043019031 மும்மொழிகளிலும் இரு

ஜன கண மன இந்தியா?

Image
தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி சொன்னதாக ஒரு வாக்கியம் கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்களில் சுற்றலில் இருக்கிறது. "என்னதான் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் எல்லோரும் தேசிய கீதம் பாடித்தான் ஆகனும்" என்று அவர் விளம்பியதாகச் செய்தி. அவர் அப்படிச் சொன்னது நிஜமா பொய்யா என இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை என்னால் உறுதி செய்ய இயலவில்லை என்றாலும் அவர் இத்தகு விஷயத்தைச் சொல்லும் திராணி பெற்றவர் என்பதை முன்னிட்டு அதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன். தோழர் ஷாலின் மரிய லாரன்ஸ் இந்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தில் தேசிய கீதம் இந்தியே எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தார்: "The National Anthem of India Jana-gana-mana, composed originally in Bengali by Rabindranath Tagore, was adopted in its Hindi version by the Constituent Assembly as the National Anthem of India on 24 January 1950." ( https://www.india.gov.in/india-glance/national-symbols ) அதாவது சாசனச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய‌

உங்களில் யார் அடுத்த சுஜாதா?

வெகுஜன எழுத்து என்பது ஒரு மொழியின் செழுமைக்கும், அதன் மக்களின் மகிழ்ச்சிக்கும் மிக அத்தியாவசியமானது என்பது என் வலுவான நம்பிக்கை. அதனால் ஒருபோதும் அதை நான் கீழ்மையாக எண்ணியதோ கேலி செய்ததோ இல்லை. (என் எழுத்தே இப்போதைக்கு ஒரு மாதிரி வெகுஜன எழுத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் இடைப்பட்டது தான்.) ஆனால் அதே சமயம் வெகுஜன எழுத்து என்பது ஏனோதானோ என்றில்லாமல் தரமாக வர வேண்டும், அதில் புதுமைகள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேற்கே அப்படித்தான். ஆக, வெகுஜனப் படைப்பொன்றை எழுதுவது பாவமோ கேவலமோ அல்ல. அதற்கும் நல்ல உழைப்பும், எழுத்து நுட்பமும் தேவை. எல்லோருக்கும் அது சுலபமாய் வாய்த்து விடாது. அப்படிப் பார்க்கையில் சுஜாதா வெகுஜன எழுத்துக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம். பதின்மத்திலிருந்து விலகும் ஒரு தமிழ் இளைஞனுக்கு வாசிப்பில் சுஜாதா ஒரு மிகச்சிறந்த ஆரம்பப்புள்ளி. சுலபமான அதே சமயம் கவர்ச்சிகரமான துவக்கம். ஆரம்பத்தில் வாசிப்பதற்கான ஒருவித ஊக்கத்தினை / போதையினை சுஜாதாவின் எழுத்துக்களிலிருக்கும் வாசிப்பின்பம் அளிக்கிறது. அது அலுக்கும் போது நிஜமான தேடலை உடையவன் அங்கிருந்து நிச்சயம் அடு

அமேஸான் போட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அமேஸான் Pen to Publish - 2019 போட்டி தொடர்பாய் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சில: 1) நான் முன்பு வலைப்பூவில் எழுதிய சில பதிவுகளை ரத்து செய்து விட்டு கிண்டிலில் வெளியிட்டால் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா? 2) முன்பு என் நாவலின் சில அத்தியாயங்கள் ஓர் அச்சிதழில் சில அத்தியாயங்கள் வெளியாகின. பின் சில காரணங்களால் நின்றது. அதை முடித்து மின்னூலாக்கி போட்டிக்கு அனுப்பலாமா? 3) எனது ஃபேஸ்புக் பதிவுகளைச் சேர்த்துப் புத்தகமாக்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? மூன்றுக்கும் பதில் "கூடாது" என்பதே. போட்டிக்கு அனுப்படும் படைப்பின் எந்தவொரு பகுதியும் அச்சு, மின் என எந்த வடிவிலும் ஏற்கனவே வெளியாகி இருக்கக் கூடாது. அப்படியானவை நிராகரிப்புக்கு உள்ளாகும். இன்றைய தேதியின் தேடல் தொழில்நுட்பத்தில் அதைக் கண்டறிவது சிரமமல்ல. அதனால் பரிசுத்தமான புத்தம் புதிய படைப்புகளை மட்டுமே போட்டிக்கு அனுப்புவீர். * அமேஸான் Pen to Publish 2019 போட்டி பற்றி வரும் இன்னொரு பரவலான கேள்வி: "நான் எழுதி அதை மின்னூலாய்ப் பதிப்பித்து விடுவேன். ஆனால் அது பரவலாக வாசிக்கப்படவும், மதிப்பிடப்படவும் வேண்டும் என்ப

அமேஸான் கிண்டில் Pen to Publish போட்டி - 2019

Image
அமேஸான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்க‌ள் (E-books) வாசிக்க உதவும் கருவி (Device). கருவி வாங்கத் தோதுப்படவில்லை எனில் கிண்டிலின் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன் செயலிகளிலும் (apps), வலைதளத்திலும் (website) கூட கிண்டில் மின்னூல்களை வாசிக்கலாம். இது வாசக தரப்பு. அந்தப் புறம் எழுத்தாளர்கள் சுயமாய்த் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடவும் கிண்டில் உதவுகிறது. அதன் பெயர் KDP. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்! வாசகர்களுக்கு கிண்டிலால் ஏராளச் சகாயங்கள் உண்டு. பணத்தைச் சேமிக்கிறது; குறைந்த இடத்தை அடைக்கிறது. எடுத்துச் செல்வது எளிது; என்ன வாசிக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானிக்க வேண்டியதில்லை என்பதால் பயணத்திற்குத் தோது. பெரும் எண்ணிக்கையில் புத்தகங்கள் கிடைக்கின்றன, அதோடு அவற்றைக் கடன் பெறவும் முடியும். கருவியின் தோற்றம் கவர்ச்சிகரமானது என்பதால் அது உங்கள் பற்றிய ஒரு அந்தஸ்தான எண்ணத்தை ஏற்படுத்தும். இறுதியாக, அது ஓர் அறிவுஜீவி பிம்பத்தை உங்களுக்கு அளித்து கூட்டத்திலிருந்து தனித்துக் காட்டும். பல வாசகர்கள், கிண்டில் மின்னூல்களை வாசிக்க சில ஆயிரம் செலவிட்டு கிண்டில் ஈரீடர் கருவியை