Posts

Showing posts from April, 2014

பரத்தை கூற்று : முனைவர் ஆய்வு

சுகன்யா தேவி ஒரு கல்லூரி மாணவி. கோவை பாரதியார் பல்கலைக்கழத்தில் தமிழில் முனைவர் பட்ட ஆய்வு. சென்ற மாதம் கவர்னர் ரோஸய்யா கையால் டாக்ட்ரேட் பட்டம் பெற்றார். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு ' சமகாலக் கவிதைகளில் சமூகக் கருத்துக்கள் '. அதற்கு அவர் தேர்வு செய்த பல கவிதை நூல்களுள் எனது பரத்தை கூற்று ம் ஒன்று (தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரின் புத்தகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன). அதன் நிமித்தம் சுமார் ஓராண்டு முன் அவர் பெங்களூரில் என்னைச் சந்தித்து ஒரு சிறிய நேர்காணல் செய்தார். அவரது முனைவர் ஆய்வேட்டில் இது இடம் பெற்றுள்ளது. அவருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் பதிகிறேன். * 1. பரத்தை தொழில் மேற்கொண்டிருக்கும் பெண்களின் சிக்கல்களை மட்டும் மையமாக வைத்துக் கவிதை எழுதியிருப்பதேன்? முன்னுரையிலேயே சொல்லி இருப்பதைப் போல் பரத்தை கூற்று நூலாக வெளியானது 2010ம் ஆண்டின் இறுதியில் தான் என்றாலும் இக்கவிதைகளை நான் எழுதியது 2006ன் தொடக்கத்தில். அப்போது கல்லூரி மாணவனாக சென்னை என்ற பெருநகரில் வசித்ததால் எந்த பிரயத்தனங்களுமின்றி பரத்தமை குறித்து தானாகவே அறிய வாய்த்தது. இது தவிர‌என் நண

2002 குஜராத் - தெகல்கா புலனாய்வு

Image
நான் குஜராத் 2002 கலவரம் நூல் எழுதுகையில் பயன்படுத்திய முக்கியத் தரவுகளில் ஒன்று தெகல்கா இதழ் இது தொடர்பாய் மேற்கொண்ட ரகசிய விசாரணைகளின் தொகுப்பாய் அவ்விதழின் தலைமை ஆசிரியரான தருண் தேஜ்பால் நவம்பர் 2007ல் தொகுத்து வெளியிட்ட வெளியிட்ட GUJARAT 2002 - THE TRUTH என்ற சிறப்பிதழ். உடனடியாக இதை குஜராத் 2002 : தெஹல்கா அம்பலம் என்ற பெயரில் அ. மார்க்ஸ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் (பயணி வெளியீட்டகம் - 2007). பிறகு குஜராத் 2002 இனப்படுகொலை என்ற தலைப்பில் அ.முத்துக்கிருஷ்ணன் இதை மறுபடி தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார் (வாசல் & தலித் முரசு – 2008). இப்போது தன் நூலை இலவசமாகத் தரவிறக்கிட குஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன? என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் அ.முத்துக்கிருஷ்ணன் (ஏற்கனவே இருந்த உள்ளடக்கத்துடன் இதில் ரத்தக்கறையை மறைக்கும் வளர்ச்சி என்ற குஜராத் வளர்ச்சி குறித்த தனது கட்டுரை ஒன்றையும் இணைத்திருக்கிறார்). சரியான நேரத்தில் இது மக்களை அடையும் வகையில் இலவசமாகத் தர முன்வந்திருக்கும் மொழிபெயர்ப்பாளரையும், பதிப்பகங்களையும் பாராட்டியே ஆக வேண்டும். htt

NOTA – ஓர் எளிய அறிமுகம்

யாருக்கும் ஓட்டு இல்லை என்று உரக்கச் சொல்லும் NOTA - None Of The Above வசதி (பழைய 49-ஓ விதி) குறித்த ஒரு விரிவான அறிமுகப்பதிவை எழுதி இருக்கிறேன். NOTA – ஓர் எளிய அறிமுகம் - http://www.tamilpaper.net/?p=8756 தமிழ் பேப்பர் - வட்ட மேஜை மாநாடு பகுதியில் இத்துடன் என் பங்களிப்பு நிறைவடைகிறது. இத்தொடரில் நான் எழுதிய 4 நீள்கட்டுரைகளும் மிகுந்த திருப்தியளித்தன. *

மோடி எதிர்ப்பு : ஒரு கடிதம்

எனது மோடி எதிர்ப்புக் கட்டுரைகளுக்கு எதிர்வினையாய் ட்விட்டர் வழி அறிமுகமான நண்பர் இந்திரஜித் ஃபேஸ்புக் தனிப்பேச்சில் சில கேள்விகளை எழுப்பி இருந்தார். இந்த விஷயத்தில் என்னைத் தொடர்ந்து வாசிக்கும் பலருக்கும் அதையொட்டிய கேள்விகள் மனதில் இருக்கும் என்று தோன்றுவதால் அவற்றை இங்கே பகிர்கிறேன் : *** அன்பான குருநாதருக்கு,  நீங்கள் சமீப காலங்களில் எழுதிய கட்டுரைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற கொள்கையேற்று அதை உங்களால் முடிந்த அளவு பிசிறில்லாமல் செவ்வனே செய்கிறீர்கள். ஆனால் என் போன்ற பார்ப்பனர் அல்லாத, ஜாதிக் கொடுமையால் பாதிக்கப்படாத இதுவே உன் ஜாதி, உன் மதம் என அடையாளம் காட்டப்பட்டு வளர்க்கப்பட்ட சிலரின் பொது எண்ணமாக சில கருத்துக்களை வைக்கலாம் என்ற பிரயாசம் எனக்குள் வெகுநாட்களாக உண்டு.  இங்கு வரும்வரை அரசியல் என்றால் என் பார்வையில், அதிமுகவுக்கு ஓட்டுப் போடுவது என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது (தந்தை தீவிர அதிமுக அனுதாபி). ஆனால் இப்போது உங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் தொடர் முயற்சியால் மோடிக்கு ஓட்டுப் போட்டால் என்ன என்ற

+1 4 -1

Image
ஒரு கவிதை வார்த்தைகள் தானியங்கி தாலாட்டு பாடும் எந்திரத் தொட்டிலில் மிதந்தபடி கனவில் எழுதப்படும் கவிதையில் இவன் வேண்டிக்கொள்கிறான் விடாமல் தலைகோதும் எந்திரக் கை வேண்டும் என. - நந்தாகுமாரன் * நந்தாகுமாரனை எனக்கு அவரது வலைப்பூவின் வழி தெரியும். பெரும்பாலும் கவிதைகள். ஐந்தாண்டுகளுக்கு முன் எனக்குப் பிடித்த வலைப்பூக்களின் ஒரு நீட்டிக்கப்பட்ட பட்டியலை இட்ட போது அதில் அவரது தளமும் இருந்தது. விஞ்ஞானத்தைக் குழைத்துக் கவிதை சமைப்பவர் என்ற எளிமையான புரிதல் அப்போது இருந்த நினைவு. உயிர்மை வெளியிட்டிருக்கும் நந்தாகுமாரனின் முதல் கவிதைத் தொகுதி மைனஸ் ஒன் . சென்ற ஆண்டு கிட்டத்தட்ட இதே காலத்தில் அவர் தன் நூலை எனக்கு அனுப்பி வைக்க விலாசம் கேட்டிருந்தார். நான் அதை வாங்கி விட்டு, பின் வீடு, அலுவலகம், எழுத்து என முத்தரப்பு பணிப்பளு மிகுதியால் அந்த நூலைப் படித்தும் விமர்சனம் ஏதும் எழுதவியலாது போனது. அது சங்கடமாகவே இருந்தது. இன்று மீண்டும் கண்ணில் பட்ட அந்நூலை விடாப்பிடியாய் மறுவாசிப்பு செய்து இதோ எழுதிக்கொண்டிருக்கிறேன். முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். இத்தொகுப்பில் இருக்கு

இந்துத்துவ ஜிகாத்

Image
48 பக்கங்களே கொண்ட சிறுநூல் நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் . The Believer என்ற தலைப்பில் ஃபிப்ரவரி 2014 Caravan இதழில் லீனா கீதா ரெங்கநாத் என்பவர் புலனாய்வு செய்து ஆங்கிலத்தில் எழுதிய அட்டைப்பட நீள்கட்டுரை (Reportage என்கிறார்கள்) தான் தற்போது நரேன் ராஜகோபாலன் முயற்சியில் முறையான அனுமதி பெற்று, எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளர் ஞாநியின் மொழிபெயர்ப்பில் தமிழில் புத்தகமாக வெளியாகி இருக்கிறது. ஓரிரு மணி நேரத்தில் படித்து முடித்து விடக்கூடிய சுவாரஸ்ய நடையில் த்ரில்லர் போல் பரபரவென தடதடக்கிறது இந்நூல். தலைப்பில் மோடி என்பது பிரதானமாய்க் காட்டப் பட்டாலும் உண்மையில் மோடி இந்தப் புத்தகத்தில் மிகச் சில இடங்களில் மட்டுமே வருகிறார். இவை எல்லாம் குஜராத்தில் திட்டமிடப்படுகிறது என்பது தான் லிங்க். இறுதியில் மோடி பிரதமர் ஆனால் இந்துத்துவ தீவிரவாதம் வலுப்பெறும் என்று சம்மந்தப்பட்டவர்களே நம்பிக்கையுடன் சொல்லும் வாக்குமூலத்துடன் முடிகிறது. அடிப்படையில் இந்தப் புத்தகம் அசீமானந்த் என்ற தனி மனிதரின் வாழ்க்கை தான். ஆனால் அதனூடாக இந்துத்துவ தீவிரவாதத்தின் முக

போலி சூழ் உலகு

Image
ஜோ டி க்ரூஸ் உழைக்கும் வர்க்கமான மீனவர்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டு தான் ஆழி சூழ் உலகு நாவலை எழுதி இருக்கிறார் (நான் இன்னும் நாவலைப் படிக்கவில்லை. நூல் மதிப்புரைகளின் வழி இதைச் சொல்கிறேன்). அதை ஒரு பதிப்பகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட விரும்புகிறது. அந்தப் பதிப்பகமும் மொழிபெயர்ப்பாளரும் அடிப்படையில் இடதுசாரி சந்தனை கொண்டவர்கள் அல்லது குறைந்தபட்சம் இந்துத்துவம் போன்ற விஷயங்களுக்கு எதிரானவர்கள். அவர்கள் அந்த நாவலின் இலக்கியத் தரத்தை விட, அது முன்வைக்கும் அரசியலுக்குத் தான் முக்கியத்துவம் தந்து அதை ஆங்கிலத்தில் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இப்போது  ஜோ டி க்ரூஸ் முழுக்க முழுக்க வலதுசாரிப் பின்னணி கொண்ட ஒரு கட்சியை நேரடியாய் ஆதரித்து அறிக்கை விட்டிருப்பதால் புத்தக வெளியீடை நிறுத்தி வைத்திருப்பது நிச்சயம் நியாயமானது தான். இதை அந்த பதிப்பகமும் மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரின் எழுத்துக்கும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் எதிராக முன்வைக்கும் அடையாள எதிர்ப்பாகவே நான் பார்க்கிறேன். என்வரையில் இதில் எந்த துரோகமோ ஏதேச்சதிகார போக்கோ தென்படவில்லை. நான் மோடி எதிர்ப்பாளன் என்பத

யாருக்கு ஓட்டுப் போடுவது?

மோடியை எதிர்க்க வேண்டும் என்று சொன்னதற்கு நான் அடிக்கடி எதிர்கொண்ட கேள்வி வேறு யாருக்கு ஓட்டுப் போடுவது? என்பது தான். அதற்கு தர்க்கப்பூர்வமாக பதிலளிக்க முயன்றிருக்கிறேன். குறிப்பாய் தமிழகம் மற்றும் புதுவையில் கட்சி அடிப்படியில் 40 தொகுதிகளிலும் யாருக்கு வாக்களிக்கலாம் என ஆராய்ந்திருக்கிறேன். யாருக்கு ஓட்டுப் போடுவது? - http://www.tamilpaper.net/?p=8742 தமிழ் பேப்பர் இதழில் தேர்தலை ஒட்டி வெளிவரும் வட்ட மேஜை மாநாடு பகுதியில் நான் இதுவரை எழுதிய கட்டுரைகள் எல்லாமே எனக்கு திருப்தி அளித்தவை. வாய்ப்பளித்த மருதன் அவர்களுக்கு நன்றி. இன்னும் அதில் ஒரு கட்டுரை எழுத வேண்டி இருக்கிறது - நோட்டா பற்றி. சந்தர்ப்பம் அமைகிறதா பார்க்கலாம். *

நான் ஏன் நரேந்திர மோடியை எதிர்க்கிறேன்?

2014 நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரே ஒருவரை மட்டுமே நம்மால் எதிர்க்க முடியும் எனில் அது நரேந்திர மோடியாகவே இருக்க வேண்டும் என்பது என் நிலைப்பாடு. ஏன் அவ்வளவு stubborn-ஆகச் சொல்கிறேன் என்று அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து விரிவாக அலசி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். அது இரு பகுதிகளாக நேற்றும் இன்றும் தமிழ் பேப்பர் தளத்தின் வட்ட மேஜை மாநாடு பகுதியில் வெளியாகி இருக்கிறது. என் முக்கியமான கட்டுரைகளில் ஒன்று இது என நினைக்கிறேன். நான் ஏன் நரேந்திர மோடியை எதிர்க்கிறேன்? – 1 : http://www.tamilpaper.net/?p=8702 நான் ஏன் நரேந்திர மோடியை எதிர்க்கிறேன்? – 2 : http://www.tamilpaper.net/?p=8705 பொதுவாக நான் எழுதும் கட்டுரைகளை "must read" என்று நானே சொல்லிக் கொள்வதில்லை. ஆனால் இந்த வட்ட மேஜை மாநாடு கட்டுரைகள் எல்லாம் அப்படித் தான்.