Posts

Showing posts from September, 2018

கலைஞர்: நவீனத் தமிழகத்தின் சிற்பி

Image
பண்டித ஜவஹர்லால் நேரு நவீன இந்தியாவின் சிற்பியாகக் கருதப்படுகிறார். 1947ல் சுதந்திரம் கிடைத்த போது சிதிலமடைந்து கிடந்த ஒரு பிரம்மாண்ட தேசத்தை அவர் தன் தொலைநோக்குப் பார்வையின் மூலம் - விவசாயம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு துறைகளிலும் மேம்பாட்டை ஏற்படுத்தி - புத்துயிர்ப்புடன் நிர்மாணித்தார். அதன் மூலம் சமூக, பொருளாதார வளர்ச்சியை நாடெங்கிலும் சாத்தியப்படுத்தினார். அவர் மறைந்த போது ஒரு நவீன தேசத்தை உருவாக்குவதற்கான மிக வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துப் போயிருந்தார். நிதானமாய் யோசித்தால் நேரு அவர்கள் இந்திய நாட்டிற்கு எதைச் செய்தாரோ அதையே தமிழ் நாட்டிற்கு கலைஞர் செய்தார். ஆனால் கலைஞரின் நவீனச் சிந்தனை கொஞ்சம் வேறுபட்டது. அது சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை (Inclusive Growth) உத்தேசித்தது. இன்றைய நவீன ஆட்சி என்பதில் இரண்டு விஷயங்களை நோக்கி இருப்பதாகக் கருதுகிறேன். 1) வளர்ச்சி 2) சமத்துவம். அதாவது முரட்டுத்தனமாய் நாடு வளர்கிறது எனப் பொருளாதாரக் குறியீடுகள் மூலம் காட்டுவதோ, குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பெருவளர்ச்சி காண்பதோ, சமூகத்தில் சில பிரிவினர் மட்டும் செல்வச் ச

நவஅரசியல் நடனம்

Image
சிறுஅசம்பாவிதத்தின் பலனாய் இன்று முழுக்க‌ கணிணி தொடாது வீட்டிலிருக்க நேர்ந்ததால் கனமற்ற‌தொரு வாசிப்புக்கு ஏதேனும் வேண்டுமென ஷான் எழுதிய‌ 'வெட்டாட்டம்' நாவலைத் தேர்ந்தெடுத்து ஓரமர்வில் வாசித்து முடித்த கையோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். மிகச் சுவாரஸ்யமான நாவல். நாவல் என்று சொல்வதை விட ஷான் இதை ஒரு சினிமாவாகவே எழுதி இருக்கிறார் என்பேன். பெரும்பாலும் காட்சிரூபம் மற்றும் வசன வடிவம் தான். (ஓபனிங்கில் - அதாவது முதல் அத்தியாயத்தில் - உயரக் கட்டிடத்தின் மாடி மதில் மேல் குடித்து விட்டு வருண் மேலேறி நிற்பது முதல் க்ளைமேக்ஸில் - அதாவது இறுதி அத்தியாயத்தில் - வருண் தலைமைச்செயலக வாசலில் அமர்ந்திருப்பது வரை ஏராள உதாரணங்கள்.) சினிமாவாக்கும் ப்ரக்ஞையுடன் நாவலாக எழுதியிருந்தார் என்றால் அதில் பெருவெற்றி கண்டிருக்கிறார். தெளிவாக இது ஒரு வெகுஜன நாவல் என்பதால் அந்த அடிப்படையிலேயே நாவல் பற்றிய என் மதிப்பீட்டை முன்வைக்க விரும்புகிறேன். பனாமாலீக்ஸ் சம்பவத்தை ஒட்டி எழுதப்பட்டிருக்கும் நவஅரசியல் நாவல் 'வெட்டாட்டம்'. தமிழில் ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை போன்றோர் ஏராள அரசியல் சார்ந்த த்

வானவில் (மின்னூல்)

Image
வாசிக்க‌ / தரவிறக்க: https://drive.google.com/file/d/1nS2o0CPr0aPiEjLtouv3jBGGztYlSSJd/view

சோஃபியா எனும் வனயட்சி

Image
A voice so thrilling ne'er was heard In spring-time from the Cuckoo-bird, Breaking the silence of the seas Among the farthest Hebrides. - William Wordsworth (The Solitary Reaper) இவ்விஷயத்தில் எதிரணி பாஜக என்பதை நீக்கி விட்டு, நிதானமாக யோசித்தாலுமே கூட சோஃபியா செய்தது தவறு இல்லை என்றே தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால் அது கொண்டாடப்பட வேண்டியது. எனக்குத் தெரிந்து சோஃபியா என்ற இளம் பெண் விமானத்திலும், விமான நிலையத்திலும் "ஃபாசிஸ பாஜக - ஆர்எஸ்எஸ் அரசு ஒழிக" என்று தமிழிசையைப் பார்த்துக் கோஷம் போட்டிருக்கிறார். மற்றபடி, அவர் மீது உடல்ரீதியான தாக்குதல் ஏதும் தொடுக்கவில்லை. அதற்கான முஸ்தீபுகளிலும் இறங்கவில்லை. அவரை மிரட்டவில்லை. கண்ணியமற்ற சொற்கள் ஏதும் பிரயோகிக்கவில்லை. தான் நம்பும் ஒரு கருத்தை - அதாவது இந்தியாவின் ஃபாசிஸ ஆட்சி நடக்கிறது என்பதை - அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரைப் பார்க்கும் போது பொதுவெளியில் பகிர்கிறார். அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(a) பிரிவின் படி இதற்கு அவருக்கு முழு உரிமை உண்டு ("All citizens shall have the right to freedom of speech and

இரண்டாம் எமர்ஜென்ஸி

Image
ஹாலிவுட்டில் சமீப எதிர்காலம் பற்றிப் பல படங்கள் எடுத்திருப்பார்கள். ஆனால் இந்தியாவைப் பற்றி அப்படியான‌ படம் - அதுவும் Dystopian சமூகமாக வர்ணித்து - ஒன்றை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என எதிர்பார்க்கவே இல்லை. Ghoul ( Season1) மிகச் சிறப்பான படம். வெப்சீரிஸை ஏன் படம் என்று சொல்கிறேன் என்றால் இந்த சீஸன், 3 எபிஸோட்கள் (Out of the Smokeless Fire, The Nightmares Will Begin மற்றும் Reveal Their Guilt, Eat Their Flesh) மட்டுமே. இறுதி டைட்டில் கார்ட் கழித்தால் இரண்டு மணி நேரத்துக்கு சற்று கூடுதல் நேரம் தான் ஓடுகிறது. இந்தியாவின் இரண்டாம் எமெர்ஜென்ஸி பற்றிய படம் Ghoul. அதாவது இன்றைய மதச் சகிப்பின்மையற்ற, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான ஆட்சி நீட்டித்தால் என்ன ஆகும் எனச் சிந்தித்திருக்கிறார்கள். குழந்தைகளின் புத்தகங்களைக் கூடத் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி அவற்றை பிடுங்கி எரிக்கும் ஓர் அரசு. மக்கள் சிந்திப்பதை, எதிர்த்துக் கேள்வி கேட்பதை விரும்பாத அராஜக அரசு. மாட்டுக்கறியை வெறுக்கும் அரசு. ஒரு மதத்தையே எதிரியாகக் கருதும் அரசு. அதை விட முக்கியமாய் அதை எதிர்ப்போர் அனைவரும் தேச