ஒன்பதரை விமர்சனங்கள்
தனிப்பேச்சில் / சாட்டில் பேசியவற்றைக் கழித்து பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளதை மட்டும் கணக்கில் கொண்டால் 'ஆப்பிளுக்கு முன்' நாவலுக்கு இது வரை ஒன்பதரை விமர்சனங்கள் வந்துள்ளன. தமிழ்ச் சூழலில் இதுவே அதிகபட்சம் என்று திருப்திப்பட முகாந்திரம் உண்டு தான் என்றாலும் இந்நாவல் இன்னும் கொஞ்சம் கூடுதல் வாசக உரையாடலுக்குத் தகுதி பெற்றது என நம்புகிறேன். அதனால் இதைப் பரப்ப விரும்புகிறேன். வேறு எவரும் செய்ய மாட்டார்கள் என்பதால் என் நாவலை நானே சந்தைப்படுத்துவதற்குத் துணிந்து விட்டேன். அது தான் இந்த விமர்சனக் கட்டுரைப் போட்டி அறிவிப்பு. செல்வத்தை வாரி இரைத்துத் தன்னைப் புகழ்ந்து பாடச் சொல்லும் புரவலன் பிம்பம் வந்து விடக்கூடாது என்ற தயக்கம் இருந்தது. நான் புரவலனும் அல்லன்; என்னிடம் அத்தனை செல்வமும் இல்லை; நான் புகழக் கோரவும் இல்லை. நாவல் பரவலாய் வாசிக்கப்பட்டு அதற்குரிய இடத்தை - அது கீழோ மேலோ - பெற வேண்டும் என்பது தான் என் எளிய அவா. நண்பரிடம் தயக்கத்தைச் சொன்ன போது தமிழ் எழுத்துச்சூழலில் சுயசந்தைப்படுத்தலுக்கு இது தொடக்கமாக இருக்கலாம் என்றார். பிறகு, இதைச் செய்வதால் இழக்கப் பெரிதாய் ஒன்றுமில்ல