என் சாதிக்காரருக்கு ஓட்டு போடுங்கள்!
ஞாநி என்ற எழுத்தாளரை எனக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தெரியும். அதாவது அவரது எழுத்துக்களைத் தான் சொல்கிறேன். என் பதின்மங்களிலிருந்து அவரை வாசிக்கிறேன். அவரது ரசனை சார் நிலைப்பாடுகளிலிருந்து orthogonal-ஆக விலகி இருந்தாலும் சமூகம் மற்றும் அரசியல் விஷயங்களில் அவரது கருத்துக்களோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறவன் (ஜெயமோகன் விஷயத்தில் அப்படியே நேர்எதிர்). அதிகம் பேருடன் அப்படி இருக்க சாத்தியமில்லை என்பதால் எனக்கு முக்கியமாகிறார். அவரது கட்டுரைகள் வழியாக மட்டுமே அவர் பழக்கம். ஆனந்த விகடனில் அவர் 'ஓ பக்கங்கள்' எழுதிக் கொண்டிருந்த வரை தொடர்ந்து வாசித்து வந்தேன். என்வரையில் தமிழின் மிக முக்கியமான 100 நூல்களுள் ஒன்று அது. நேரடியாக அவருடன் உரையாட நேர்ந்த சந்தர்ப்பங்கள் குறைவே. அவர் வலைதளம் தொடங்கிய போது அவரை மனப்பூர்வமாக வரவேற்றிருந்தேன் . 49-ஓ என்ற விஷயம் பற்றி அவர் சொல்லித் தான் எனக்குத் தெரியும். பிற்பாடு அதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அவர் 'கோலம்' என்ற திரைப்பட இயக்கத்தைத் தொடங்கிய போது அதை மிக எதிர்பார்த்திருந்தேன் . பிறகு அது குறித்து சில கேள்விகளை அவருக்கு வ