கூற்றை வெல்லும் அறம்
முதலில் திரையுலகின் சுரண்டல்களையும் முதுகு குத்தல்களையும் தாண்டி காலம் தாழ்ந்தேனும் மேலேறி வரும் இயக்குநர் கோபி நயினாருக்கு வாழ்த்துக்கள்; மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது என்ற முக்கியப் பிரச்சனையில் அரசை விமர்சிக்கும் ஒரு படத்தைத் தயாரிக்க முன்வந்த நயன்தாராவுக்குப் பாராட்டுக்கள். இதை மசாலா படமாக அல்லாமல் யதார்த்தப் படமாகவே அணுகினேன். அந்த அடிப்படையிலேயே என் பார்வையை எழுதுகிறேன். நல்ல ப்ளாட் என்றாலும் படம் ஒட்டுமொத்தமாய் எபவ் ஆவரேஜ் தான். காரணம் திரைக்கதை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. முதல் இருபது நிமிடங்கள் நம்பிக்கையே இன்றித்தான் நகர்ந்தன. பின் குழந்தை குழியில் விழுந்தது முதல் இடைவேளை வரை படம் பெரும்பாலும் அசத்தல். இரண்டாம் பாதியில் பேரிடர் மீட்புக் குழு வந்து முயன்று தோற்பது வரையிலும் கூடத் தொய்வில்லை. இறுதி அரை மணியில் மாவட்ட ஆட்சியர் செய்யும் முயற்சிகள் முழுக்க உணர்ச்சிகரமாகவே மாறி விடுவதால் ஒரு நல்ல த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம் தடுமாறுகிறது. பையன் நீச்சலில் சூரன் என்பது போக மற்ற யாவும் திணிக்கப்பட்டது அல்லவா! அந்தக் கிராமத்துக்குத் தண்ணீர் பஞ