இலக்கியமும் மினி ஸ்கர்ட்களும்
கடந்த வாரம் ஜனவரி 24 - 26 தேதிகளில் The Times of India நாளேடு நடத்திய Literary Carnival என்ற மூன்று நாள் இலக்கியக் கொண்டாட்டம் பெங்களூரின் ஜெயாமஹால் பேலஸ் ஹோட்டலில் நடந்தது. ஒரு வளரும் எழுத்தாளனாய் அந்நிகழ்வு அளித்த அனுபவம் வசீகரமானதாய் இருந்தது என்பதால் தவறாமல் மூன்று நாட்களும் அதில் கலந்து கொண்டேன். இது ஆங்கில இலக்கியத்தையே அதிலும் வெகுஜன படைப்புகளையே பெரும்பாலும் முன்வைப்பதாக இருந்தது. அப்புறம் பிராந்திய இட ஒதுக்கீட்டில் கொஞ்சமாய் கன்னட இலக்கியம். மேலோட்டமாய் இலக்கிய விழா போல் தோற்றம் தரினும் பாதிக்குப் பாதி அமர்வுகள் புதிதாக வெளியாகி இருக்கும் ஆங்கில நூல்களை promote செய்யும் முகமாகவே அமைந்தன. யூஆர் அனந்த மூர்த்தி, கிரிஷ் கர்னாட், கிரிஷ் காசரவள்ளி, சஷி தேஷ்பாண்டே, நந்தன் நிலகானி, சுதா மூர்த்தி, மதூர் பண்டார்கர், நீரஜ் பாண்டே, மன்சூர் கான், கேஎம் சைதன்யா, கேப்டன் கோபிநாத், பல்லவி ஐயர், ராஷ்மி பன்சால் எனப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நிறையப்பேரை அங்கு தான் அறிந்து கொண்டேன். எல்லோரும் இளைஞர்கள். * மொத்தம் நடந்த 55 அமர்வுகளில் நான் தேந்தெடுத்து சிலவற்றில் (சுமார் 23) ம