இந்திய ஜனாதிபதி ரப்பர்ஸ்டாம்ப்பா?
மாதச் சம்பளம் ரூபாய் ஒன்றரை லகரம் (7வது சம்பளக் கமிஷன் அமல்படுத்தப்பட்ட பிறகு கேபினெட் செக்கரட்டரியின் சம்பளம் இதை விட அதிகமாகிவிட்டது என்பதால் இதை 5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு தீர்மானித்து பாராளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பி இருக்கிறது). சம்பளம் போக செலவுக்காக ஆண்டுக்கு 22.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வசிக்க தில்லியில் உலகிலேயே மிகப் பெரிய ஜனாதிபதி மாளிகை. தவிர ஹைதராபாத்திலும் சிம்லாவிலும் ஓய்வெடுக்கும் மாளிகைகள். பயணம் செய்ய மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார். இத்தனையும் இந்திய ஜனாதிபதிக்கு மக்கள் வரிப்பணத்தில் அளிக்கப்படுகிறது. ஒரு ரப்பர் ஸ்டாம்ப்புக்கா இத்தனையும்? எப்போதும் நாம் இந்திய ஜனாதிபதி என்பவரை ஒரு பொம்மையாக அல்லது ஒரு கோமாளியாகவே பார்த்துப் பழகி விட்டோம். கடந்த கால் நூற்றாண்டாக கேஆர் நாராயணன் போன்ற வலுவான ஆளுமை கொண்டோரும், அப்துல் கலாம் போன்ற துறைசார் பிரபலங்களும் வந்த போது மட்டும் அப்பதவியை லேசாய்க் கவனிப்போம். மற்றபடி அதை ஒரு ரப்பர்ஸ்டாம்ப் வேலை என்றே பாவிக்கிறோம். நம் மனதில் இருக்கும் பிம்பம் போல் அது நிஜமாகவே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி தானா? உண்மையில் புதையல் காக்