முதல் நரை
மழிக்காத மீசையில் சிரைக்காத தாடியில் வரலாம் மிகக் கச்சிதமாய்ச் செதுக்கிய கிருதாவில் வரலாம் மார்பில் அடர்ந்திருக்கும் மயிர்க்கொத்தில் வரலாம் லக்ஷம் தலைமுடிகளில் எதாவதொன்றில் வரலாம் ரகசிய ப்ரியத்துடன் மறைப்பின் சௌகரியத்துடன் ஆண் குறியில் அல்லது ஆசன வாயில் வரலாம் - ஓரிரு எச்சரிக்கைகளை சிற்சில அறிவிப்புக்களை மௌனமாய்ப் பகிர்கிறது அந்த ஆதிரோம வெள்ளி மனைவியிடம் சிரித்துப் பேச ஞாபகப்படுத்துகிறது குழந்தைகளுடன் விளையாடக் கூவியழைக்கிறது பெற்றோர்களை கவனித்துக் கொள்ளச் சொல்கிறது பால்ய நண்பர்களை ஆசிரியர்களை தேடச்செய்கிறது புதைந்த காதல்களை துரோகங்களை அவமானங்களை முட்டாள்தனங்களை வக்கிரங்களைத் தோண்டுகிறது பொய்பேசுதலை புறங்கூறுதலை நிறுத்தக் கோருகிறது பயங்கொள்தலை சினங்கொள்தலை குறைக்கக் கேட்கிறது படிக்காத புத்தகங்களை பார்க்காத திரைப்படங்களை புசிக்காத புலாலுண்டிகளை ருசிக்காத மதுப்புட்டிகளை முடிக்காத பயணங்களை புணர்ந்திராத பெண்களை செய்யாத பாவங்களை மனதில் ஓங்கி அறைகிறது கூழாங்கற்கள் சகிதம் கதை பேசும் ஒரு ஜென் குரு போல் மரணத்தின் இளஞ்சுகந்தத்தை மானசீகமாய் முகரத் தந்து என்றோ த