Posts

Showing posts from June, 2014

பிஜேபி ஆட்சி - A RECAP

Image
ஆழம் ‍ - ஜூன் 2014 இதழில் மத்தியில் இதுவரையிலான பிஜேபி ஆட்சிக் காலங்களின் போதான சாதனைகள் / சோதனைகள் குறித்த என் கட்டுரை வெளியாகியுள்ளது: * தனிப்பெரும்பான்மையுடன் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றிருக்கிறார். நல்ல நிர்வாகம் மற்றும் மாநில வளர்ச்சியை முன்வைத்துப் பேசி பதவிக்கு வந்தவர் என்பதால் அவரது அடுத்த அறுபது மாதச் செயல்பாடுகள் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே இருக்கிறது. இது பிஜேபி ஆட்சி என்பதால் பொதுவாய் இதற்கு முன் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இது இருக்கும் என்பது மேலோட்டமான எண்ணம். குறைந்தபட்சம் அவ்வாட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களுக்கு புத்துயிர் அளிக்கப்படும் என நம்பலாம். இதற்கு முன் ஆட்சிபீடத்தில் இருந்து பிஜேபி நிர்வாக, அரசியல், பொருளாதார, சமூக, கலாசார தளங்களில் செய்தது என்ன என்பதை இக்கட்டுரை பேசுகிறது. பிஜேபி இது வரை மூன்று முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. முதல் முறை 1996ல் 161 எம்பிக்கள் பெற்று அதிக இடங்கள் கொண்ட கட்சியாக இருந்ததால் ஜனாதிபதி ஆட்சியமைக்க அழைத்

பெண் எழுத்தாளர்கள் - ஒரு விவாதம்

Image
நாஞ்சில் நாடன் ஆனந்த விகடனின் கேள்வி பதில் பகுதியில் குறிப்பிட்ட நம்பிக்கையூட்டும் இளம் எழுத்தாளர்கள் பட்டியல் பற்றி ஜெயமோகன் சொன்ன கருத்துக்களை ( http://www.jeyamohan.in/?p=56339 ) எழுத்தாளர் சந்திரா ஃபேஸ்புக்கில் கண்டித்திருந்தார் ( https://www.facebook.com/chandra.thangaraj.5/posts/10201976355401591 ). நான் இவ்விஷயத்தில் ஜெயமோகம் பக்கம் தான். அது குறித்து சந்திராவுடன் அந்தப் பதிவில் நிகழ்த்திய விவாதத்தை இங்கே பதிகிறேன். Chandra Thangaraj : பெண்களை பொதுவிலும் தனியிலும் அவமதிக்கும் செயல் மிகக்கொடூரமானது. பெண் எழுத்தாளர்கள் குறித்து ஜெயமோகன் எழுதிய விசயங்கள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியவை. அவரது பட்டியலில் என் பெயர் இடம்பெற்றிருந்தாலும் பெண் எழுத்தாளர்கள் குறித்த அவரது நிலைப்பாட்டால் அதை நான் மறுத்தலிக்கிறேன்.தார்மீக ரீதியாக என் எதிர்ப்பை பதிவுசெய்கிறேன். Saravanakarthikeyan Chinnadurai : ஜெமோ சொல்வது அவமானப்படுத்ததும் நோக்கில் அல்ல என்பதே என் புரிதல். அது ஒரு ஃபேக்ட். குறைந்தபட்சம் அவரது நேர்மையான அவதானிப்பு. பெண் என்ற காரணத்தால் நிறையப் பேருக்கு ஊடகங்களில் சுலபமாய் ஸ்பேஸ் கிட