Posts

Showing posts from August, 2012

மயிரு [சிறுகதை]

குமுதம் இதழில் ' ஹேர் ஸ்டைல்! ' என்ற தலைப்பில் வெளியான சிறுகதையின் எடிட் செய்யப்படாத முழு வடிவம் இது . ****** விழிப்புத் தட்டியவுடன் சுடலை தன் தலையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். நேற்றுப் பெய்த முதல் மழையில் துளிர் விட்ட பச்சைப் பசும்புல்வெளி கணக்காய் வழுக்கை மண்டையில் ஆங்காங்கே சிறுசிறு மயிரிழைகள் முளை விட்டிருந்தன. எழுந்து போய் சுவற்றிலிருந்த பாதரசம் போன பெல்ஜியம் கண்ணாடி முன் நின்று தலையைப் பார்க்கும் ஆவலை சோம்பேறித்தனத்தினால் ஒத்திப் போட்டான் சுடலை. கார்த்திகைக் குளிர் மாசிக் கடைசி வரையிலும் வீசி விட்டுத் தான் ஓய்கிறது. அது மனிதர்களின் மனதிலும் உடலிலும் சோம்பலின் சொகுசை விதைத்துப் போகிறது. கண்களில் இன்னமும் தூக்கம் மிச்சமிருந்தது. வெளிச்சம் பார்த்தால் காலை ஏழு மணி ஆயிருக்கும் எனத் தோன்றியது. அம்மா சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள். இரண்டு ஆளுக்கு சமைக்க அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து என்ன தான் செய்வாளோ தெரியாது. அப்பா காலத்திலிருந்தே அதே பழக்கம். இப்போது அவளுக்கு பிரஷர் இருக்கிறது, அடிக்கடி தலை வலிக்கிறது என்கிறாள். மெதுவாக எழுந்து வேலை செய்தால்

யதார்த்தத்தின் அடர்கசிவு

Image
அம்ருதா - ஜூன் இதழில் வெளியான 2011 இலக்கியத்துக்கான‌ நொபேல் குறித்த‌ எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்:

குமுதம் - சிறுகதை

Image
குமுதம் 15.8.2012 இதழில் எனது சிறுகதை வெளியாகி உள்ளது. வலைதளங்களில் என் இரு சிறுகதைகள் வெளியாகி இருந்தாலும் அச்சுக் காணும் என் முதல் சிறுகதை இது. " ஹேர் ஸ்டைல்! " என்ற பெயரில் கதை வெளியாகி இருக்கிறது (கதைக்கு நான் வைத்திருந்த‌ தலைப்பு " மயிரு "!). இன்னும் நானே பார்க்கவில்லை - இங்கே பெங்களூரு கடைகளில் குமுதம் நாளைக்குத் தான் கிடைக்கும். வாழ்த்திய / வாழ்த்தும் / வாழ்த்தவிருக்கும் அனைவருக்கும் என் ப்ரியங்கள். 46 லக்ஷம் வாசகர்களை என் எழுத்து சென்றடைய வழிவகுத்த குமுதம் ஆசிரியர் குழுவுக்கு நன்றிகளைப் பதிகிறேன்.

ஆழம் - ஆகஸ்ட் 2012 இதழில்

Image
ஆழம் ‍‍ - ஆகஸ்ட் 2012 இதழில் ஹிக்ஸ் போஸான் துகள் கண்டுபிடிப்பு பற்றி தமிழ்பேப்பர் தளத்தில் நான் எழுதிய ' கிட்டதட்ட கடவுள் ' கட்டுரையின் விரிவான செறிவூட்டப்பட்ட வடிவம் (4 பக்கங்கள்) வெளியாகி இருக்கிறது:

அம்ருதா - ஆகஸ்ட் 2012 இதழில்

Image
அம்ருதா ஆகஸ்ட் 2012 இதழில் சென்ற வருட பொருளாதாரத் துறையில் வழங்கப்பட்ட‌ நொபேல் பரிசு குறித்து நானெழுதிய‌ விரிவான 5 பக்க கட்டுரை ' அசைவுகளும் அதிர்வுகளும் ' என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.