Posts

Showing posts from June, 2009

படித்தது / பிடித்தது - 50

தீர்மானம் இரவெல்லாம் விழித்திருந்து உனக்கு எழுதிய காதல் கடிதம் காணாமல் போய்விட்டது மேஜையின் இழுப்பறை, புத்தக அலமாரி என எல்லா இடங்களிலும் தேடித் தேடிக் களைத்தேன்! பிறிதொரு கடிதம் எழுத நினைத்தால் முன்னெழுதிய கடித வரிகள் இடையிடையே புகுந்து என்னை ஏளனம் செய்கிறது! பத்து பதினொன்று இருபது ஐம்பது என ஏறிக்கொண்டேயிருக்கிறது எழுத இயலாத தாள்களின் எண்ணிக்கைகள்! காகிதங்கள் யாவையும் கிழித்துப் போட்டுவிட்டு புறப்பட்டுவிட்டேன் ஒரே ஒரு முத்தத்துடன்! - உமாஷக்தி நன்றி : இவள் என்பது பெயர்ச்சொல்

பசங்க இயக்குநருக்கு கடிதம்

Image
அன்புள்ள இயக்குநர் பாண்டிராஜ் அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் எழுதி ஆக்கம் செய்திருக்கும் பசங்க திரைப்படத்தில் வரும் முக்கிய திருப்பு முனைக் காட்சியில், அந்த ஆண்டு தங்களுக்கு பிடித்த / பிடிக்காத நபர்கள் / நிகழ்ச்சிகள் பற்றி மாணவர்களை ஒரு கடிதம் எழுதச் சொல்லுவார் வகுப்பாசிரியர். அதனால் நானும் தங்கள் படத்தில் எனக்கு பிடித்தது / பிடிக்காதது பற்றிப் பேச அதே வடிவத்தை தேர்ந்தெடுத்திருப்பது பொருத்த‌மாயிருக்கும் என நினைக்கிறேன். சாரு முதல் ஞாநி வரை சிந்தனைத் தளத்திலிருக்கும் அனைத்துத் தரப்பினரும், இன்றைக்கு சாத்தியமாகியிருக்கும் அத்தனை ஊடகங்கள் வழியாகவும், பல்வேறு காரணங்களைப் பின்புலமாகக் கொண்டு உங்கள் படத்தைப் சிலாகித்துத் தள்ளி விட்டார்கள். பசங்க என்கிற உங்கள் கன்னி முயற்சிக்கு பெரும்பாலும் பாராட்டுக்களையே உள்வாங்கிக் களைத்திருக்கும் உங்களிடம் முதலில் ஒன்றை உடைத்துச் சொல்லி விடுகிறேன். உங்களுடைய‌ பசங்க திரைப்படம் எனக்குப் பிடிக்க‌வில்லை. யோசித்துப் பாருங்கள். நீங்கள் எடுத்திருப்பது ஒரு மசாலாப் படத்தினின்று எவ்வாறு மேலானதென்று. என்னைப் பொறுத்தவரை பசங்க யதார்த்த முலாம் பூசப்பட்ட ஒரு சாதாரண

சகா : சில குறிப்புகள்

சகா வை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதுவும் நீங்கள் அலைபாயும் மனதுடைய ஓர் இளம் யுவதியென்றால் நிச்சயம் தெரிந்திருக்கக்கூடும் (இதைப் படித்தால், " அலைபாயாத மனசிருக்கிற பொண்ணு யாருப்பா உலகத்தில இருக்கா? " என்று கூவுவான்). பெங்களூர்=பெண்+கள்+ஊர் பதிவில் சொல்லப்பட்ட " இவளுங்களை எல்லாம் வரிசையாய் நிறுத்தி வெச்சு ஒவ்வொருத்தரா ...க்கனும் மச்சி " என்கிற புகழ் பெற்ற வச‌னம் அவனுடையது தான்.. ********************** சகாவுக்குப் பேச்சு தான் அப்படி இப்படி இருக்குமே தவிர ஒரு நேரத்தில் ஒரே கேர்ள் ஃப்ரெண்ட் என்கிற கொள்கையில் தவறாதவனாய் இருப்பவன். அவனுக்கும் அவனது தற்போதைய கேர்ள் ஃப்ரெண்டுக்கும் இடையேயான சிறு ஊடலின் முடிவில் அவள் அவ‌னுக்கு அனுப்பிய மின்னஞ்சலின் தணிக்கைகுப் பிந்தைய வரிகள் இவை: " போடா புலி..... பன்னி குட்டி it was just a conversation... My next question about that was, Do ....? U stupid boy... I Love U da.... " ********************** சகாவுக்கு மது, புகை என்று எந்தப் பழக்கமும் கிடையாது (இந்த வரிசையில் மாது என்பதைத் தவிர்த்து விட்டேன் என்பதைக் கவனிக்கவும். அது

அன்பே சிவம் - சில கருத்துக்கள்

அன்பே சிவம் பற்றி குறை கூறி எழுதும் போதே அதை யாரும் ஒத்துக் கொள்ளவே மாட்டார்கள் என்று தெரிந்தே எழுதினேன் (கமலையே துளியும் பிடிக்காத என் நண்பர்கள் சிலருக்குக்கூட‌ அன்பே சிவம் படம் மட்டும் பிடிக்கும்). நான் எதிர்பார்த்தது போலவே, நான் ப‌திவிட்ட சில வினாடிகளில் (ஆம்! சில வினாடிகளில்), மணியரசன் gtalkல் " i won't accept " என்று சொல்லி விட்டார். பின் என் கல்லூரி சினேகிதனான கீர்த்தி பரத் இன்று இட்ட பின்னூட்டம். மேலும் மேலும் தவறான புரிதல்களை தவிர்க்கும் பொருட்டு இதற்கு பதிலளித்து விடுவது எனத் தீர்மானித்து விட்டேன். அன்பே சிவம் படம் பற்றி பேசும் முன் திரைப்படம் என்பது பற்றிய என் எதிர்பார்ப்புகளை, வரையரைகளைக் கோடி காட்டி விடுவது உத்தமம் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை திரைப்படம் என்பது ஒலி ஒளி இலக்கியம். நல்ல இலக்கியம் எப்படி காலத்தின் கண்னாடியாக நிற்கிறதோ அது போல் நல்ல திரைப்படமும் இருக்கும். ஒரு திரைப்படத்திடமிருந்து நான் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறேன். முதலாவது சுவாரசியம்; இரண்டாவது நிஜத்தன்மை; மூன்றாவது உருவாக்கம். கவனியுங்கள் - திரைப்படத்தின் கருத்து என்பது எனக்கு

கமலின் பதினேழு

" The Tamil films below are not to be compared with the above list of international films unless you like self flagellation. These films dared to go against the pundits opinion of how films should be. They fought the market to create new trends. Some were made in a shoestring budget and some at great financial risk. Mumbai Express was made with a 3CCD camera and Pushpak with Rs.30 lakhs " ராஜ்கமல் ஃபில்ம்ஸ் இண்டர்னேஷனல் சார்பில் சென்னை ஐ.ஐ.டி. யில் ஆங்கில வழியில் நடத்தப்பட்ட ச‌ர்வதேச திரைக்கதை பயிற்சிப் பட்டறை யின் official site ல் மேற்கண்ட குறிப்புடன் கமல்ஹாசன் தந்திருக்கும் பதினேழு தமிழ் படங்களின் பட்டியல் இது: என்ன தான் முடிவு - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சாது மிரண்டால் - திருமலை / மகாலிங்கம் காவல் தெய்வம் - ஜெயகாந்தன் / கே.விஜயன் யாருக்காக அழுதான் - ஜெயகாந்தன் அவர்கள் - கே. பாலசந்தர் மன்மத லீலை - கே. பாலசந்தர் அவள் அப்படித்தான் - அனந்து / ருத்ரையா நாயகன் - மணிரத்னம் கல்லுக்குள் ஈரம் - செல்வராஜ் / பாரதிராஜா தேவர் மகன் - கமல்ஹாசன் / பரதன் மகாநதி - கமல்ஹாசன் / சந்தான பாரதி அலைப

இரண்டு திரைப்படங்கள்

சிவா மனசுல சக்தி : " அந்தக் கால காதலிக்க நேரமில்லை மாதிரி இருக்கிறது " என்று இயக்குநர் மிஷ்கினால் குறிப்பிடப்பட்டதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இப்படத்தைப் பார்த்தேன். ம்ஹூம். எனக்கொன்றும் உறைக்கவில்லை. காட்சி வாரியாக இயக்குநர் கதை சொன்ன போது விகடன் நிறுவனத்தில் வாய் பிளந்து கதை கேட்டுத் தலையாட்டிய புண்ணியாத்மா யாரென்று தெரியவில்லை. அவ்வளவு செயற்கைத்தனமான கதாபாத்திரங்கள். முக்கியமாய் கதாநாயகி அனுயாவின் பாத்திரம். ஜீரணிக்கவே முடியவில்லை. உவ்வே. ஜீவா மட்டும் ஸோலோவாய் தன் பெர்ஃபாமென்ஸ் காரணமாய்ப் பிழைக்கிறார். மற்றபடி படத்தில் ஒரே ஆறுதல் சந்தானம் வரும் பகுதிகளின் வசனங்கள் (" பச்சத்தண்ணி குடிச்சுட்டு பாயாசம் சாப்பிட்ட மாதிரி பில்டப் பண்றே! ")‌. மிஷ்கினுக்கு ' காதலிக்க நேரமில்லை ' படம் பிடிக்காது போலிருக்கிற‌து. நியூட்டனின் மூன்றாம் விதி : எஸ்.ஜே. சூர்யா என்கிற இளைஞன் காதலிப்பதாய்க் கழுத்தறுக்கும் ஆரம்பக் காட்சிகளையும், படத்துக்கு தேவையே இல்லாமல் ஆங்காங்கே சொருகப்பட்டுள்ள பாடல்களையும் மட்டும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இப்படம் ஒரு மிகச் சுவாரசியமான த்ரில்லர்.

இசை ஞானி ஆயிரம் - 8

நிற்பதுவே நடப்பதுவே - பாரதி மயில் போல - பாரதி கேளடா மானிடா - பாரதி நாடு பார்த்ததுண்டா - காமராஜ் வானவில்லே - ரமணா மஸ்தானா மஸ்தானா - ராசையா காதல் வானிலே - ராசையா தென்றல் வரும் - ப்ரண்ட்ஸ் குயிலுக்கு கூக்கூ - ப்ரண்ட்ஸ் மஞ்சள் பூசும் - ப்ரண்ட்ஸ்

படித்தது / பிடித்தது - 49

முக்கோண விளையாட்டு நெரிசலான பேருந்தில் யாரோ ஒருவன் யாரோ ஒரு அம்மாவின் பின்புறத்தில் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான் பிறகு அவ்வம்மாவின் மகளிடம் அரைகுறையாக அம்மாவைப் புணர்ந்தது மகளுக்குத் தெரியாது மகளைப் புணர்ந்தது அம்மாவுக்குத் தெரியாது என்று அம்மூவரும் நம்பியிருக்கக் கூடும் அல்லது நடித்திருக்கக் கூடும். - ச.முத்துவேல் நன்றி : தூறல் கவிதை

படித்தது / பிடித்தது - 48

Cheer leaders லிப்டிலோ டிரெயினிலோ சினிமா தியேட்டரிலோ பாப்கார்ன் வாங்கும்போதோ கோவில் கூட்டத்திலோ ஷேர் ஆட்டோவிலோ பெற்றோர் ஆசிரியர் மீட்டிங்போதோ கல்யாண ஊர்வலத்திலோ வீட்டிலோ தூக்கத்திலோ முன் பக்கமோ பின் பக்கமோ உரசித்தான் போகிறது திரும்பிப் பார்க்கவும் செய்கிறார்கள் வெட்கத்துடன் - கே.ரவிஷங்கர் நன்றி : நவீன விருட்சம்

கடிதம்: No Blog on Ilayaraja's B'day??

Hi SARKAR, Well and wish the same from you. Hope this mail finds u and ur family in Good Health. Being a regular reader of ur blogs, I expected you would write a blog today (On the Maestro's B'day). Atleast u wud have posted "Isaignani 1000" as a dedication to our Music God. Hope u might be too busy wid ur work to post a blog. Anyways keep writing. Take care. Friendly Urs., A.Kaarthik, Mumbai ############ கார்த்திக், அடிப்படையிலேயே மிகத் தவறானது, உங்கள் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கை. என் ஆதர்சமான சுஜாதாவின் பிறந்த நாளுக்கே நான் பிரத்யேகமாய் எதுவும் எழுதியதில்லை - அப்போதும் நீங்கள் இதே கேள்வியைக் கேட்டிருந்ததாக ஞாபகம். அதனால் இதைத் தெளிவுபடுத்தி விடுவது நல்லது என நினைக்கிறேன். எனது மற்றும் என் மனைவியின் பிறந்த நாள் (வேறு வழியில்லை!) தவிர நண்பர்கள், சுற்றத்தார், பிடித்தவர்கள், பிரபலங்கள் என்று வேறு எவ‌ருடைய பிறந்த நாளையும் பொதுவாய் நான் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை. அது சரியா, தவறா என்கிற வாதம் ஒரு புறமிருக்க, பலருடைய பிறந்த நாட்கள் ஊடகங்கள் வாயிலாகவோ, வேறு யாராவத

படித்தது / பிடித்தது - 47

Image
நன்றி : தினத்தந்தி , பெங்களூர் பதிப்பு [01-ஜூன்-2009]