Posts

Showing posts from April, 2012

ங்கோத்தா

* 'ங்கோத்தா' என்றெழுத‌ இங்கிதம் தடுக்கிறது - என் பாட்டனுக்கு எவனும் எழுதப் பழக்கவில்லை; என் அப்பனுக்கு எவனும் இங்கிதம் பழக்கவில்லை; எனக்கு மட்டும் தான் எல்லா இழவும். *

படித்தது / பிடித்தது - 102

சில நாட்களுக்கு முன் ஆண் பெண் இடையேயான நட்பு மற்றும் காதல் குறித்து அராத்து ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதி இருந்தார். நிதர்சனத்துக்கு மிக அருகில் இருந்து அதே சமயம் அங்கதம் துள்ளி விளையாண்ட அப்பதிவு எனக்கு மிகப் பிடித்திருந்தது. மனுஷ்ய புத்திரனின் ' அதீதத்தின் ருசி ' தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ' சினேகிதிகளின் கணவர்கள் ' கவிதைக்கு இணையான பதிவு என்று அதற்கு கமெண்ட் இட்டிருந்தேன். நெல்முனையளவும் அதில் மிகை  இல்லை. இதில் சொல்லப்பட்டிருக்கும் சில‌பல விஷயங்களில் நான் வாதியாக, பிரதிவாதியாக, சாட்சிக்காரனாக நின்றிருக்கிறேன் என்பதே என் வரையில் இதை மிகவும் அந்தரங்கமானதாக‌ ஆக்குகிறது.  And I promise, for everybody, that will be the case. ******* ஆண் - பெண் : காதல் Vs நட்பு அராத்து ஆண் பெண் நட்பு / ஆண் பெண் காதல் இரண்டிலும் பொதுவான சில செயல்களை பார்த்து நக்கல் அடிக்கும் நயவஞ்ச‌கர்களுக்காக இந்த பதிவு. இரண்டிலும் பொதுவாக சில வினைகள் இருந்தாலும், அவற்றிற்கிடையேயான மெல்லிய வேறுபாடுகளைப் பட்டியலிடுவதே நோக்கம். (1) காதல் : கட்டிப்பிடிக்கலாம், இறுக்கி கட்டிப்பிடிக்கலாம், ம

பெண்ணுரிமை + ஜனநாயகம் = உலக அமைதி

Image
அம்ருதா - மார்ச் 2012 இதழில் வெளியான 2011 அமைதிக்கான‌ நொபேல் குறித்த‌ எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்:

ஆழம் - ஏப்ரல் 2012 இதழில்

Image
ஆழம் ‍- ஏப்ரல் 2012 இதழில் சமீபத்தில் நடந்த உத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலையும், அதன் முடிவுகளையும், அம்மாநிலத்தின் புதிய முதல்வர் அகிலேஷ் யாதவின் தோளின் மீதேறி ஒரு பறவைப் பார்வை பார்த்திருக்கிறேன். இதழ் குறித்து பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி எழுதிய குறிப்பு இது : http://www.badriseshadri.in/2012/04/2012.html ******* பிற்சேர்க்கை : (05 ஏப்ரல் 2012 மாலை 6:18 மணிக்கு சேர்க்கப்பட்ட‌து) ஆழம் முதல் மூன்று இதழ்களையும் pdf-ஆக‌ தரவிறக்கிப் படிக்க: http://www.badriseshadri.in/2012/04/blog-post_05.html   நடப்பு இதழையும் வலையேற்றியது பற்றிக் கேட்டால், "எல்லா மக்களும் பயன் பெறட்டும் என்று தான்" என்கிறார் பத்ரி! *******

மாலத்தீவு : சதியும் விதியும்

Image
ஆழம் ‍ - மார்ச் 2012 இதழில் வெளியான மாலத்தீவில் நடந்த‌ ஆட்சிக்கவிழ்ப்பு குறித்த‌ கட்டுரையை இங்கு பகிர்கிறேன்:

(மீண்டும்) சகா : சில குறிப்புகள் - 15

சுற்றிச் சூழ்ந்திருக்கும் நூறு பெண்டிரில் நன்கு மடியும் பதம் செறிந்துள்ள ஒற்றைச்சிட்டை நச்சென்று முதல் பார்வையில் கண்டுகொள்வான் சகா என்பதே இத்தொடரின் அச்சாணி. கும்ஃபூ போல், திருட்டு போல், சுயஇன்பம் போல், இதை தன் தினசரி சிரமங்களினூடாய் இழையோடும் ஓர் வாழ்க்கைக் கலையாகவே நிகழ்த்தி வந்தான் சகா என்றால் அதில் உயர்வு நவிற்சி ஏதுமில்லை. இந்த phenomenon-ஐ விளக்க விக்ரம் சாராபாயைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறான் சகா. " He who can listen to the music in the midst of noise can achieve great  things. " ******* சகா : சில குறிப்புகள் என்ற இந்தத் தொடரின் பதின்மூன்றாம் அத்தியாயத்தில் ஆரவாரமின்றி அறிமுகமாகி இருக்கிறாள் மதுமிதா எனும் தேவதை. அதை எழுதும் போது இத்தொடரில் அவள் பெறப்போகும் முக்கியத்துவம் பற்றி அணுவளவும் யான் அறிந்திலன். சகாவுக்கே தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது அவள் தான் சகாவின் Spiritual Striptease. சகா தன் இருபத்தாண்டு போக வாழ்வில் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசுகையில் " காதல் " என்ற கெட்ட வார்த்தையைப் பயன்படுத்துகிறான் என்றால் அது நானறிந்து மதுமிதாவுக்கு மட