இன்னா ஒன்று இன்னா இரண்டு இன்னா மூன்று இளையராஜாவின் இசை, மணிரத்னத்தின் படம், ஐஸ்வர்யா ராயின் அழகு போன்ற obvious உச்சங்களையே நிராகரிக்கும் ஒரு விசித்திர தேசத்தில் என் போன்ற ஒரு non-conformist எழுத்தாளனுக்கு இப்படியொரு வரவேற்பு(?!) கிடைப்பதில் ஆச்சரியமில்லை. ஒறுத்து அலுத்து விட்டது. மன்னிக்கவும்! பார்க்க வேறு உருப்படியான ஜோலிகள் காத்திருக்கின்றன. இந்த இடுகைகள் சொல்லும் செய்தியென்ன? பயம், குழப்பம், குரோதம், விரோதம், யாசகம், இழப்பு, சோகம், ஆயாசம், அசட்டுத்தனம், அற்பத்தனம், முட்டாள்தனம், பேடித்தனம், தோல்வி, விரக்தி, வேதனை, பொறாமை, பொச்சரிப்பு, இயலாமை, தாழ்வுமனப்பான்மை, குற்றவுணர்ச்சி, முதிர்ச்சியின்மை, உறக்கமின்மை, வயிற்றெரிச்சல், வாயுத்தொல்லை, அஜீரணக்கோளாறு, etc, etc. இத்தனை எதிர்மறையான நோய்க்கூறுகள் நிறைந்திருந்த போதிலும் ஒரே ஒரு நல்ல விஷயம் இவர்கள் மூவரிடமும் பொதுவாய் இருக்கிறது. இவர்கள் அனைவரும் என் எழுத்தை நீண்ட காலமாக தொடர்ந்து தீவிரமாக வாசித்து வருகிறார்கள் என்பதே அது. பிறகு எப்படி இவ்வளவு நுட்பமாய் என் எழுத்தை விமர்சனமோ, நையாண்டியோ செய்ய இயலும்? இதற்காகக்கூட இவர்கள் ஆத்திரத்தில் என