Posts

Showing posts from December, 2010

10 வருடங்கள் : 10 படங்கள்

2001 முதல் 2010 வரை வெளியானவற்றுள் மிகச்சிறந்த திரைப்படங்கள் இவை: நந்தலாலா - மிஷ்கின் விருமாண்டி - கமல்ஹாசன் தசாவதாரம் - கே.எஸ்.ரவிகுமார் / கமல்ஹாசன் பாய்ஸ் - ஷங்கர் / சுஜாதா பருத்தி வீரன் - அமீர் சுப்ரமணியபுரம் - சசிகுமார் கன்னத்தில் முத்தமிட்டால் - மணிரத்னம் / சுஜாதா ரமணா - ஏ.ஆர்.முருகதாஸ் ஆட்டோகிராஃப் - சேரன் தவமாய்த் தவமிருந்து - சேரன் பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் WORTH-MENTION திரைப்படங்கள் இவை: அழகி - தங்கர்பச்சான் காதல் - பாலாஜி சக்திவேல் வெயில் - வ‌சந்தபாலன் கற்றது தமிழ் - ராம் பூ - சசி  வெண்ணிலா கபடி குழு - சுசீந்திரன் சென்னை 600028 - வெங்கட் பிரபு வ குவாட்டர் கட்டிங் - புஷ்கர் / காயத்ரி   பொய் சொல்லப் போறோம் - விஜய் இம்சை அரசன் 23ம் புலிகேசி - சிம்புத்தேவன்

360 DEGREE of 365 DAYS (2010)

2010 : உல‌கைப் பாதித்த நிகழ்வுகள் : விக்கிலீக்ஸ் ஆவணங்கள் ஹைதி நிலநடுக்க பலிகள் உலகக்கோப்பை கால்பந்து வளைகுடா எண்ணெய்க்கசிவு ஐரோப்பிய‌ பொருளாதார சரிவு ஒபாமா மந்திர அலை ஓய்வு ஆங் - சான் - சூ - கீ விடுதலை செயற்கை ஜீன் உருவாக்கம் சிலி சுரங்கப்பணியாளர் மீட்பு ஐபேட், ஐஃபோன் 4 அறிமுகம் 2010 : இந்தியாவைப் பாதித்த நிகழ்வுகள் : 2G ஸ்பெக்ட்ரம் பேரூழல் தெலுங்கானா போராட்டம் நீரா ராடியா டேப் பேச்சுகள் அயோத்தி நீதிமன்ற‌ தீர்ப்பு ம‌ங்களூர் விமான விபத்து ஜிஎஸ்எல்வி தோல்விகள் மாவோயிஸ்ட் தாக்குதல் போபால் விஷவாயு தீர்ப்பு Commonwealth, சாய்னா, சச்சின் ரூபாய்க்கு புதிய குறியீடு 2010 : தமிழகத்தைப் பாதித்த நிகழ்வுகள் : நித்யானந்தா மட விவகாரம் தமிழ்ச் செம்மொழி மாநாடு இலங்கை தேர்தல் முடிவுகள் பள்ளிக் கல்விக்கட்டண முடிவு பென்னாகரம் இடைத்தேர்தல் தஞ்சை கோயில் 1000 ஆண்டு அதிமுகவின் மதுரை மாநாடு எந்திரன் திரைப்பட‌ வியாபாரம் புதிய சட்டசபை, புதிய நூலகம் பிரபுதேவா, நயன்தாரா, ரம்லத் 2010 : என்னைப் பாதித்த நிகழ்வுகள் : அப்பாவின் மரணம் என் குழந்தை ஞானி பரத்தை கூற்று நூல் பெங்களூரில் ஃப

10 ஆண்டுகள் : 10 ஆல்பங்கள்

இன்றைய தேதியோடு ஒரு தசம ஆண்டு முடிகிறது. 2001 தொடங்கி 2010 வரையிலான பத்தாண்டுகளில் வெளியான சிற‌ந்த‌ பாடல் இசை கொண்ட 10 திரைப்படங்கள் இவை: பிதாமகன் - இளையராஜா புதுப்பேட்டை - யுவன்ஷங்கர்ராஜா விருமாண்டி - இளையராஜா காதல் கொண்டேன் - யுவன்ஷங்கர்ராஜா பாய்ஸ் - ஏ.ஆர்.ரஹ்மான் மின்னலே - ஹாரிஸ் ஜெயராஜ்   கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ.ஆர்.ரஹ்மான் வாரணம் ஆயிரம் - ஹாரிஸ் ஜெயராஜ் ரன் - வித்யாசாகர் ஆட்டோகிராஃப் - பரத்வாஜ் மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம்பெறாவிட்டாலும் WORTH-MENTION வகையறா இவை: காதல் - ஜோஸ்வா ஸ்ரீதர் ஃபைவ்ஸ்டார் - பரசுராம் / அனுராதா அஞ்சாதே - சுந்தர் சி. பாபு   ஆயிரத்தில் ஒருவன் - ஜி.வி.பிரகாஷ்குமார்   டிஷ்யூம் - விஜய் ஆண்டனி  சுப்ரமணியபுரம் - ஜேம்ஸ் வசந்தன் டும்டும்டும் - கார்த்திக் ராஜா ஆளவந்தான் - ஷங்கர் / எசான் / லாய் தசாவதாரம் - ஹிமேஷ் ரேஸ்மையா உன்னைப்போல் ஒருவன் - ஸ்ருதிஹாசன்

தப்பு விகடன்

Image
நெடுநாள் கழித்து ஆ.வி.யில் (05.01.2011) எனது பெயரில் ஒரு ட்வீட் இடம் பெற்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாய் அது நான் எழுதியதல்ல; ரீட்வீட்டியது. Thinks Why Not (@thinkynt) ட்வீட் செய்து, அதை மண்குதிரை (@mankuthirai) மறுபதிப்பு செய்ததன் வாயிலாக என் கண்ணில் பட்டு ரீட்வீட் செய்தேன். எல்லாமே டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) அன்று நடந்தேறியவை. கடைசியில் விகடன் வலைபாயுதே வில் அந்த‌ ட்வீட் என் பெயரில் வெளியாகி விட்டது. தகவல் + படம் உதவி : பேங்காக் மாயவரத்தான் மற்றும் துபாய் கணேசுகுமார் - ந‌ன்றி!

பரத்தை கூற்று : பாண்டியன்ஜி

பரத்தை கூற்று வெளியீட்டு நிகழ்வு குறித்த பதிவு இது (எழுதியவர் - பாண்டியன்ஜி ): ******* http://verhal.blogspot.com/2010/10/blog-post_29.html ******* வெள்ளி, 29 அக்டோபர், 2010 இசை ஞாநியும் இசை முட்டாளும் (எழுத்தாளர் சாருநிவேதாவின் உரையும் எனது குறையும்) பாண்டியன்ஜி இந்த மாதம் 16 ஆம் தேதி. சனிக்கிழமை மாலைப் பொழுது. சென்னை நகரின் பெரும் பகுதிகளில் ஆயுதபூசைக் கொண்டாட்டங்கள் பெருமளவில் முடிவுக்கு வந்திருந்த சமயம். கே.கே நகர் முனுசாமி சாலையிலிருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகநாழிகை பதிப்பகத்தின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். இலக்கிய ஆர்வலர்களும் இணையதள வலைப்பூ சொற்சிற்பிகளும் பெருமளவில் புத்தக அரங்கில் குழுமியிருந்தனர். சி.சரவணகார்த்திகேயன் அவ்வப்போது எழுதிய புதுக்கவிதைகளை தொகுத்து அகநாழிகை பதிப்பகம் நேர்த்தியாக அச்சிட்டு விற்பனைக்கு வெளியிட காத்திருந்தது. பரத்தைக் கூற்று என்ற கவிதை நூலை சமகால எழுத்தாளர் சாருநிவேதா வெளியிட்டு உரையாற்றினார். சமீப காலங்களில் ஊடகங்களிலும் தமிழ் பத்திரிக்கைகளிலும

தமிழ் திரைப்பட விருதுகள் : 2010

CSK ACADEMY OF MOTION PICTURE ARTS & SCIENCES (TAMIL) AWARDS FOR THE CALENDER YEAR 2010 ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த திரைப்படம் - நந்தலாலா ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த இயக்குநர் - ஷங்கர் [ எந்திரன் ] சிறந்த திரைக்கதை - மிஷ்கின் [ நந்தலாலா ] சிறந்த வசனம் - புஷ்கர் / காயத்ரி [ வ‌ - குவாட்டர் கட்டிங் ] சிறந்த கதை - செல்வராகவன் [ ஆயிரத்தில் ஒருவன் ] ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த பின்னணி இசை - இளையராஜா [ நந்தலாலா ] சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன் / மணிகண்டன் [ ராவணன் ] சிறந்த படத்தொகுப்பு - ஆன்டணி [ வ - குவாட்டர் கட்டிங் ] ---------------------------------------------------------------------------------- ---------- --------- சிறந்த கலை இயக்கம் - V.செல்வகுமார் [ மதராசப்பட்டின‌ம் ] சிறந்த ஆடை வடிவமைப்பு - தீபாளி நூர் [ மதராசப்

மன்மதன் அம்பு - A VERY SHORT INTRODUCTION

மன்மதன் அம்பு - மை.ம.கா.ராஜன், காதலாSquare, அ.சண்முKey, தெனாLee, 5தந்திரம் போல் கிரேஸி மோகன் flavoured full length comedy flick எதிர்பார்த்துப் போனீர்கள் என்றால், u 'll be deceived. இது ஒரு romantic melodrama. கௌதம் மேனன் பிச்சை வாங்க வேண்டும் - அவ்வளவு பீட்டர். ஆனான் எல்லாமே அழகான, அற்புதமான வசன‌ங்கள் (ஒரு சோறு பதம் : " Honesty is a luxury and you inflated it "). கமல் நடிப்பில் புதிதாக எதுவுமே இல்லை. நேற்று " Comeback to Kamal " என ட்வீட்டியதன் காரணம் ' சாம தான பேத தண்டம் ' பாடலில் வரும் கமலின் நடனம் - just loved it. 'நீல வானம் ' பாடலில் Flashback காட்ட உபயோகப் படுத்தியிருக்கும் Reverse Video Play முறை அபாரம். நடிப்பில் சங்கீதா தான் excelling. அது யதார்த்தமான நடிப்பு இல்லை - சற்றே மிகைப்படுத்தப்பட்ட ஆனால் மிக ரம்மியமான நடிப்பு. "த்ரிஷா நன்றாக நடித்திருக்கிறார்" என்று என் ஆயுட்காலத்தில் எழுதுவேன் என ஒருபோதும் நான் கனவு கூடக் கண்டதில்லை - doing it now. மாதவன், ஊர்வசி, ரமேஷ் அரவிந்த எல்லாம் as usual. குட்டீஸ் are cute. குரூப்பாக வரும் ஆச

தமிழ் சினிமா 2010 : தரவரிசை

சிறந்த படங்கள் நந்தலாலா வ - குவாட்டர் கட்டிங் எந்திரன் மதராசப்பட்டினம் ஆயிரத்தில் ஒருவன் நான் மகான் அல்ல‌ மைனா களவாணி தமிழ்ப்படம் பாஸ் (எ) பாஸ்கரன் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மன்மதன் அம்பு ******* சுமாரான‌ படங்கள் சிங்கம் தில்லாலங்கடி தீராத விளையாட்டுப் பிள்ளை நாணயம் அசல் ஈசன் பாணா காத்தாடி மிளகா மாஞ்சா வேலு  கோவா ******* மோசமான‌ படங்கள் விண்ணைத் தாண்டி வருவாயா ராவணன் பையா ரத்த சரித்திரம் அங்காடித்தெரு சிந்துசமவெளி ஜக்குபாய் கனகவேல் காக்க‌ விருதகிரி சுறா ******* தமிழ் திரைப்பட விருதுகள் : 2010 - விரைவில்...

மதியப்பூனை முதல் மயிரு வரை

Image
புத்தகக்காட்சியை மையமிட்டு வழக்கம் போல் இந்த வருட‌க்கடைசியிலும் நிறையப் புத்த‌கங்கள் கௌரவமான‌ நிகழ்வுகள் மூலம் வெளியிடப்படுகின்றன. இந்த‌ ஆண்டு சற்றே பிரத்யேக கவனத்துடன் இந்நிகழ்வுகளை எதிர்பார்க்கிறேன். இவற்றுள் சில பாசத்திற்குரியவர்களுடையவை; இன்னும் சில ப்ரியத்துக்குரியவர்களுடையவை. எனது பதிப்பாளர் அகநாழிகை பொன்.வாசுதேவனின் முதல் கவிதைத்தொகுப்பான ' ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை ', நான் சமீபத்தில் வியந்து வியந்து படித்து வரும் எழுத்துக்குச் சொந்தக்காரராகிய விமலாதித்த மாமல்லனின் கதைகள் முழுத்தொகுதி, இதுகாறும் என் மன‌திற்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே எழுதி வரும் முகுந்த் நாகராஜனின் நான்காவது கவிதைத்தொகுப்பான ' K அலைவரிசை ', ஆரம்பம் முதலே நான் கவனித்துச் சிலாகித்து வரும் கார்த்திகாவின் கன்னிக் கவிதைத்தொகுப்பான‌ ' இவளுக்கு இவள் என்றும் பேர் ', சக பதிவுலக நண்பர்களான‌ நர்சிம், நிலா ரசிகன் ஆகியோரது கவிதைத்தொகுப்புகள் - முறையே ' தீக்கடல் ', ' வெயில் தின்ற மழை ' - ஆகியன வரும் டிசம்பர் 26, 2010 அன்று (மாலை 5.30) உயிர்மை பதிப்பகம் சார்பில் தேவநேய பாவாணர் மாவ

சென்னை புத்தகக் காட்சி - 2011

Image
BAPASI எனப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் ‌ 34வது சென்னை புத்தகக் காட்சி சில தினங்களில் தொடங்கவிருக்கிற‌து. இடம் (வழக்கம் போல்) பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கெதிரே அமைந்துள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி. நேரம் (வழக்கம் போல்) வேலை நாட்களில் மாலை 2 மணி முதல் 8.30 வரை; விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் 8.30 வரை. நாள் (இது மட்டும் வழக்கம் போல் 12 தினங்கள் அல்லாமல் இம்முறை 14 தினங்க‌ள்) ஜனவரி 4, 2011 முதல் ஜனவரி 17, 2011 வரை. அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டாலில் கிடைக்கும். கிழக்கு பதிப்பகம் வழக்கம் போல் மிகப்பிரம்மாண்டமாய் மூன்று ஸ்டால்களை ஆக்ரமித்து நிற்கிறது. கண்காட்சியில் கீழ்கண்ட ஸ்டால்களில் அடியேன் இயற்றியுள்ள இரு நூல்களும் கிடைக்கும். பரத்தை கூற்று (கவிதைகள்) விலை - ரூ.45 (10% கழிவு போக) நிவேதிதா புத்தகப் பூங்கா அரங்கு எண் - 274 சந்திரயான் (விஞ்ஞான நூல்) விலை - ரூ.90 (10% கழிவு போக) நியூ ஹொரைசன் மீடியா அரங்கு எண

தேகம் : A SCAN

' தேகம் ' - சென்னைப் புத்தகச்சந்தையையொட்டி உயிர்மை பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சாரு நிவேதிதாவின் புதிய நாவல். நூல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் இந்த நாவலை ' சரோஜாதேவி புத்தகம் ' என்று சொன்னதன் காரணமாக(வும்) தற்போது தமிழ்ப் பதிவுலகில் மிகுந்த சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் உள்ளாகி வரும் ஒரு படைப்பு. அன்றைய விழா அரங்கிலேயே குறைந்தபட்சம் 200 முதல் 250 பிரதிகள் வரை ' தேகம் ' விற்றிருக்கும் என்பது என் அனுமானம். பின்பு கடந்த இரண்டு நாட்களில் வெளியே கடைகளில் ஒரு 50 பிரதிகள் விற்றது என வைத்துக் கொண்டால் கூட, வெளியான மூன்றே நாட்களில் ஓர் இலக்கியப் புத்தகம் 300 பிரதிகள் வரை விற்பது தமிழ்ச்சூழலில் மிகப்பெரும் வெற்றி என நினைக்கிறேன். ஒரு மாதிரியான நட்சத்திர‌ அந்தஸ்து இது. கிரவுன் 1X8 அளவில் 175 பக்கங்கள் கொண்ட சிறுநாவல் இது. சிறுநாவல் என்றழைப்பது, சமகால‌ இலக்கியத்தில் வெளி வரும் நாவல்களுடனான‌ ஒப்பீட்டளவில் மட்டுமல்ல, சாரு நிவேதிதா இதுவரை எழுதிய நாவல்களிலேயே ' தேகம் ' தான் அளவில் சிறியது.‌ நாவல் மிகச்சிறியது என்பதாலும், ஹைப் தரப்பட்டதன் காரணமாகவும்

பரத்தை கூற்று : TESTIMONIALS

" சுஜாதா இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார். " - சாரு நிவேதிதா , எழுத்தாளர் " It is beautiful and most of it, very bold. Good work! " - Meena Kandasamy , Poet “ பெண்ணுடல் பற்றிய பேச்சுக்களைப் பூச்சுகள் அற்றுக் கவிதையாக்க முயன்றுள்ள கவிஞரின் கவித்துவ வேட்கை, ஆழமான கேள்விகளை எழுப்புகிறது. ” - ந.முருகேச பாண்டியன் , எழுத்தாளர் " அவசியம் படித்து நாம் உரையாட வேண்டிய தொகுப்பு பரத்தை கூற்று. " - மாதவராஜ் , எழுத்தாளர் " ஒரு வாசிப்பிலேயே மனதை பூக்க வைக்கிற பல கவிதைகள் தொகுப்பில் உள்ளன. " - கீதாஞ்சலி பிரியதர்ஷினி , கவிஞர் " ஆழமான அழுத்தமான விஷயங்களை எளிய சொல்லாடல் மூலம் அற்புதமாக பதிவு செய்திருக்கிறது. " - கல்யாண்குமார் , பத்திரிக்கையாளர் " சிஎஸ்கேவினுடைய மொழி சித்தர் மரபின் நீட்சி. " - செல்வேந்திரன் , எழுத்தாளர் " இக்கவிதைகளின் உன்னதக் கேள்விகள் முக்கியமானவையாகப் படுகிறது. " - பொன்.வாசுதேவன் , கவிஞர் " வித்யாசமான முயற்சி. பலபேரின் கவனத்தை நிச்சயம் கவரும். " - விஜய் மகேந்திரன் , எழுத்தாளர்

படித்தது / பிடித்தது - 94

காலம் முற்றத்து கல்குறட்டில் புளி நறுக்கும் அம்மா சொல்கிறாள் 'குளிக்கவே பிடிக்கலை'என்று. வேப்பம்பூ ஆயும் பாட்டி, தீட்டு நின்னவுடன் எனக்கும் அப்படித்தான் இருந்தது 'என. புத்தகத்தில் இருந்து திரும்பி பார்க்கிறேன், 'நான் என்ன ஆக போகிறேன் ?' - இந்திரா பாலசுப்ரமணியன் நன்றி : கீற்று.காம்

அடியேன் அழைக்கிறேன்

சாரு நிவேதிதாதாவின் ஏழு நூல்கள் - உயிர்மை பதிப்பக வெளியீடு நாள் : 13. 12. 2010 (திங்கட்கிழமை), மாலை 6 மணி இடம் : காமராஜர் அரங்கம், 492, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை வெளியிடப்படும் நூல்கள் : 1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை 2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள் 3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர் 4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள் 5. கலையும் காமமும் - விவாதங்கள் 6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள் 7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள் ரூ.600/- விலையுள்ள இந்தப் புத்தகங்கள் அரங்கில் ரூ.500/-க்குக் கிடைக்கும். விழாவில் கலந்து கொள்பவர்கள் : கனிமொழி எம்.பி. மிஷ்கின் எஸ். ராமகிருஷ்ணன் நல்லி குப்புசாமி செட்டியார் ஏ. நடராஜன் ரவிக்குமார் எம்.எல்.ஏ. குஷ்பு மனுஷ்யபுத்திரன் தமிழச்சி தங்கபாண்டியன் மதன் (கார்டூனிஸ்ட்) குறிப்பு :  நிகழ்வில் கலந்து கொள்ள அடியேனும் பெங்களூரிலிருந்து வருகிறேன்.

படித்தது / பிடித்தது - 93

எல்லாம் வாய்க்கிறது.. எதிர்வீட்டுக் குழந்தையுடன் குலாவல்... படி கூட்டும் பெண்ணிடம் விசாரணை.. பேரம் பேசிக் காய்கறி... காக்காய்க்குச் சுடுசோறு.. தொலைபேசியில் தாய்வீட்டில் கொஞ்சல்... தோழிகளிடம் அளவளாவல்.. அலுவலில் இருக்கும் கணவரிடம் குறுந்தகவலில் குறும்பு.. மிச்சம் கிடக்கும் நொறுக்குத்தீனி... பாதி படித்து மறந்த புத்தகம்.. ஆர அமரக் குளியலுடன் ஒரு பாட்டு.. தென்னங் காற்று.. தெருமுக்கு அம்மன் கோயில்.. பூத்துக் கிடக்கும் தோட்டம்.. எல்லாம் வாய்க்கிறது.. கணனியும் ., தொலைக்காட்சியும் சீவனற்று சடமான மின் தடையின் போது.. - தேனம்மை லெக்ஷ்மணன் நன்றி : சும்மா