Posts

Showing posts from April, 2010

இசையோடியைந்த அழைப்பு

காலர் ட்யூன் என்றழைக்கப்படும் Ring-back toneகளை வைத்துக் கொள்வதில் எனக்கு பொதுவாய் உடன்பாடு இருந்ததில்லை. அதன் அசந்தர்ப்பங்கள் (இழவு செய்தியைத் தொலைபேச‌ முற்படும் ஒருவருக்கு " நேத்து ராத்திரி யம்மா " பாடல் கேட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்) மட்டுமல்ல, அது தேவையற்றதொரு‌ வ‌ர்த்தக‌ இடைச்செருகலாகவும் தோன்றுவ‌தே காரணம். ஆனால் விதி யாரை விட்டது. ஏர்டெல்லின் " Press * to copy this song " என்கிற (வ)ச‌தியைப் பயன்படுத்தி என் சினேகிதன் ஒருவன் அவனது காலர் ட்யூனான சுப்ரமணியபுரம் படத்தில் வரும் " கண்கள் இரண்டால் " பாடலை எனக்கும் ஒட்ட வைத்து விட்டான். இது நடந்தது சுமார் இரு வருடம் முன்பு. அகஸ்மாத்தாக வந்து சேர்ந்த அந்த ரொமான்டிக் பாடலுக்குப் பதிலாக வேறு ஏதேனும் வைப்பதே நன்று என்று கருதி சிலபல வரையரைகளுடன் தேடித் தேடி, பின் இளையாராஜா இசையில் ராம் கோபால் வர்மாவின் உதயம் 2006 படத்தில் வரும் " எழுந்து வா எழுந்து வா " என்பதை வைத்துக் கொண்டேன். பின்னர் அவ்வப்போது அதைத் தூற்றிக் கொண்டே மாற்றியும் வந்துள்ளேன். வரலாறு மிக‌ முக்கியம் என்கிற காரணத்

ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சமேனும் அறிவீரோ?

தலைப்பிலிருப்பது (புதிய) ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் " தாய் தின்ற மண்ணே " பாடலில் சோழராஜனிடம் (பார்த்திபன்), பாண்டிய வாரிசு (ரீமா சென்) அவனது தமிழறிவைக் கேலி செய்யும் பொருட்டு கேட்பதாய் வரும். ஈறு கெட்ட எதிர்ம‌றைப் பெயரெச்சம் பற்றி அப்பொழுதே எழுத நினைத்து டிராஃப்ட் செய்து வைத்தது, கூறு கெட்ட ஞாபக மறதியால் இவ்வளவு கால(ம்) தாமதமாகி விட்டது: ******* ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்பது அடிப்படையில் ஓர் எதிர்மறை வினைச்சொல் அதாவது negative verb. உதாரணத்துக்கு 'செல்லாக் காசு' என்பதில் 'செல்லா' என்பது ஈ.கெ.எ.பெ. இதைப் புரிந்து கொள்வதற்கு முன் எச்சவினை, பெயரெச்சம் போன்ற வஸ்துக்கள் என்னவென்று புரிந்து கொள்ள முயல்வோம். ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் ('செல்லுதல்' என்பது வினைச்சொல்). எச்சவினை என்பது ஒரு வினைச்சொல் முடியாது எச்சமாய் நிற்பது ('செல்லும்' என்பது 'செல்லுதல்' என்ற‌ வினைச்சொல்லின் எச்சவினை. அதுவே 'செல்லாத' என்பது இதன் எதிர்மறை எச்சவினை). அந்த‌ எச்சவினை பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் ('செல்லும்‌

AFTER A SHORT-BREAK...

ஐந்தாம் படை என்றொரு ப‌டத்தை பெங்களூர் - ஈரோடு பேருந்து பயணத்தின் ஐந்தரை மணி நேர இடைவெளியில் பார்க்க வாய்த்தது (உபயம் : கேபிஎன்). ச‌ற்றே சுவாரசியமாய்த் தான் இருந்தது. பேரரசு, சுந்தர் சி., ஏ. வெங்கடேஷ் பாணியிலான ‌லோ க்ரேட் மசாலா. வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு போன்ற அசம்பாவிதங்களை நிகழ்த்திய பத்ரி தான் இயக்கம். ஏலேய், டோண்ட் வொர்ரி, பீ ஹேப்பி. ******* காலச்சுவடு, உயிர்மை அக்கப்போர்களிடையே அகநாழிகை ஒரு மாற்றுத்தளம். புதியவர்களுக்கு நிறைய வாய்ப்புத் தருகிறது என்பது தான் இதன் தற்போதைய தனித்துவம் (ஆனால் புதியவர்கள் அனைவரும் பதிவர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை என்பது எனது அபிப்பிராயம்). சிற்றிதழ் நடத்தும் போது குழு சேராமல் பார்த்துக் கொள்வது சிரமம் தான். பொன்.வாசுதேவன் தனி மனிதனாக இதை இழுத்துச் செல்லும் வரையில் பிரச்சனையில்லை எனத் தோன்றுகிறது. மேலதிக விவரங்களுக்கு - http://www.aganazhigai.com/p/blog-page.html ******* நித்யானந்தர், ஐபிஎல் பற்றியெல்லாம் பேச நிறைய விஷயமிருக்கிற‌து. நேரம் கிடைக்கும் போது முயற்சிக்கலாம். தற்போதைக்கு நித்யானந்தர், லலித் மோடி இருவரின் மேலாண்மைத்திறன் குறி

பையா அல்ல பைத்தியகாரன்

Image
டிரைவிங் லைசென்ஸ் மாதிரி தான். ஒரு முறை எட்டு போட்டுக் காட்டினால் அடுத்த இருபது வருடங்களுக்கு இந்த தேசத்தின் எந்த சாலையிலும் வாகனம் ஓட்டுவதற்கு நம்பி அனுமதிக்கிறார்கள். அதே முறைமையைத் தான் இங்கு சில தமிழ் திரைப்பட இயக்குநர்களும் பின்பற்றுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர் லிங்குசாமி. ஆம். எப்போதோ எட்டு பத்து வருடங்களுக்கு முன்பு ரன் என்றொரு சுவாரசியமான படத்தை தெரியாத்தனமாகத் தந்து விட்டார் என்பதற்காக இன்று வரையிலும் விடாமல் படமெடுத்து மக்களை இம்சித்து வருகிறார். அவர் இயக்கத்தில் பின் வந்த ஜி, சண்டக்கோழி, பீமா எல்லாமே சுமாருக்கும் கீழான படங்கள். விதிவிலக்கின்றி தொடர்ந்த பட்டியலில் லேட்டஸ்ட் இணைப்பு பையா . எந்தவித சுவாரசியமுமற்ற திரைக்கதை தான் Primary Culprit - ஏற்ற இறக்கங்கள், வளைவு நெளிவுகளே இல்லாத பெண்ணுடம்பு மாதிரி (24-24-24 அளவுடைய ஒரு ஃபிகரை கற்பனை செய்து பாருங்கள்). டோல்கேட்டில் குடை பிடித்துத் தப்பிக்கும் காட்சி மட்டும் நன்று. தில், தூள், கில்லி, ரன் , அயன் போன்ற successful commercial entertainerகளில் படம் நெடுக இத்தகைய காட்சிகள் இருக்கும் என்பது தான் வித்தியாசம். ஃபைவ் ஸ

பேரின்பத்தின் பெருங்கவிஞன்

Image
சமகால நவீன தமிழ்க் கவிஞர்களில் நான் முக்கியமானவர்களாகக் கருதும் இருவரில் ஒருவர் மகுடேசுவரன் (மற்றவர் மனுஷ்ய புத்திரன்). 90களின் மத்தியில் எழுத ஆரம்பித்து, இதுவரை ஆறு கவிதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானது என நான் கருதுவது ' காமக்கடும்புனல் '. காமத்தைப் பாடுபொருளாகக் கொண்ட நானூறு கவிதைகளின் தொகுப்பு இது. ' பூக்கள் சொல்லும் தகவல்கள் ', ' அண்மை ', ' யாரோ ஒருத்தியின் நடனம் ', ' மண்ணே மலர்ந்து மணக்கிறது ', ' இன்னும் தொலையாத தனிமை ' ஆகியவை இன்ன பிற கவிதைத் தொகுப்புகள். ஏற்கனவே நான் பல இடங்களில் குறிப்பிட்டதைப் போல, எனது உரைநடையில் சுஜாதா மற்றும் சாரு நிவேதிதாவின் தாக்கம் இருப்பதைப் போல், என் கவிதைகளில் வைரமுத்து மற்றும் மகுடேசுவரனின் பாதிப்பு இருப்பதைக் காண்கிறேன். அவ்வகையில் என் மனதிற்கு மிகுந்த நெருக்கத்திற்குரிய சரளமுடைய கவிமொழி அவருடையது. தற்போது, புதுமுக இயக்குநர் சார்லஸ் இயக்கும் ' நஞ்சுபுரம் ' என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுதுகிறார். அவருடைய வலைப்பதிவு http://kavimagudeswaran.blogspot.com/ - சமீபமாக கவ

கடிதம் : ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய செய்தி

முகுந்தன் என்பவரிடமிருந்து இன்று வந்த மின்னஞ்சல் இது. என்னைத் தவிர வேறு சில தமிழ்ப் பதிவர்களுக்கும் அனுப்பப் ப‌ட்டிருப்பதாகத் தெரிகிறது. அதன் உள்ளடக்கத்தின் முக்கியத்துவம் கருதி இங்கே வெளியிடுகிறேன். இறுதிப் பகுதியை மட்டும் கொஞ்சம் எடிட் செய்திருக்கிறேன். ############### சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர். ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற மொழியை பேசத் தெரிந்த உலகின் கடைசி மனிதராக அவர் மட்டும்தன் இருந்தார்

ட்விட்டர் தாட்ஸ் - 9 (நவம்பர் '09 : பார்ட் 4)

2009-11-11 10:32:30 i love priyanka chopra.. 2009-11-11 10:12:20 250th tweet.. nothing more than that.. 2009-11-11 05:55:19 whenever i tweet more, there comes few new followers.. wat's the logic? 2009-11-11 05:40:25 "good morning" is not a proper tweet.. but this could be.. 2009-11-11 05:34:50 re-tweets are coming as RT only (as before) for me.. am not a part of the so-called beta group? 2009-11-10 11:02:00 i think even, tamil computer magazine tried it.. 2009-11-10 11:01:00 tat's how all the leading software / technical magazines work.. 2009-11-10 10:59:00 due to variety of reasons i didn't do it. 2009-11-10 10:58:16 i thought of going in lungi to office when we celebrated traditional costumes day. 2009-11-10 10:37:30 i am not convinced about their dream girl status.. its still looks like an alien stuff to me.. 2009-11-10 10:28:00 and the caption is "FROM DANIEL RASAIYYA TO MUSIC MESSIAH" 2009-11-10 10:27:49 if i write a book on ilayaraaja, the title wo

(நானும்) கடவுளைக் கண்டேன் - ஜெயமோகன்

ஒன்று ஏப்ரல் முதல் தேதிக்கான முட்டாளாக்கும் முயற்சியாயிருக்க வேண்டும் அல்லது ஜெயமோகனின் வலைதளத்தை சாரு நிவேதிதா hack செய்திருக்க வேண்டும். மனிதராகி வந்த பரம்பொருள்!! - ஜெயமோகன் ஓம் சிவானந்தலகரியே நமஹ!