Posts

Showing posts from March, 2011

காதல் புராணம் : வலைச்சரம்

காதல் புராணம் கவிதைத்தொடர் குறித்தும் என்னைப் பற்றியும் வலைச்சரம் தளத்தில் சென்ற வாரம் அதன் ஆசிரியராய் இருந்த‌ பதிவர் ராஜா ஜெய்சிங் குறிப்பிட்டிருந்தார்: ******* http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_24.html ******* கவிதைப்பூக்கள்... Posted by அகல்விளக்கு at 4:48 AM Thursday, March 24, 2011 சி.சரவணகார்த்திகேயன் (WriterCSK) - இவர் ஒரு பிரபல எழுத்தாளர். அதைவிட ட்விட்டரில் இவரது கீச்சுக்கள் மிகப்பிரபலம். யாரோ ஒருவர் எழுதியது போல இவர் தமிழ்பேப்பர் தளத்திற்கு எழுதிய காதல்புராணம் இவருக்கு மிக நல்ல வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அக்கவிதைத் தொடரை அனானியாக இவர் எழுதிய நேரத்தில், இவர் யாராக இருக்கும் என்ற அனுமானத்தில் ட்விட்டரில் பெரிய சலசலப்பே ஏற்பட்டது. இதோ அவரது காதல் புராணத்தின் தொகுப்பு... காதல் புராணம் ******* ராஜாவின் தந்தை கடந்த வாரம் காலமானதாக அறிகிறேன். துக்கம் பகிர்கிறேன்.

பம்பாய் ஐஐடி : கமல்ஹாசன் உரை

Image
பம்பாய் ஐஐடியில் இருக்கும் சைலேஷ் ஜே. மேத்தா மேலாண்மைப் பள்ளியில் (SJMSoM) கடந்த அக்டோபரில் நடந்த AVENUES - 2010 என்ற கல்லூரி விழாவில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்த்திய ஆங்கில உரையின் நிகழ்படங்கள் இவை. கிட்டதட்ட ஒன்றரை மணி நேரம் நீடிக்கும் இந்த அற்புதத்தை வெறும் பேச்சு என்பதை விட ஒருவித‌ manifesto என்பேன். நன்றி : இந்த வீடியோக்கள் தொடர்பான ஆரம்பச்சுட்டியளித்த கார்த்திக் சுப்ரமணியனுக்கு .

பரத்தை கூற்று : செல்வேந்திரன் - 1

பரத்தை கூற்று தொகுதி பற்றி செல்வேந்திரன் சுமார் ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு மின்னரட்டையில் பகிர்ந்து கொண்ட‌ வாசக‌ அபிப்பிராயங்களின் கட்டுரை வடிவம் இது: ******* தொகுப்பை வாசித்தேன். விமர்சனமாக இல்லாமல் அபிப்ராயமாக அத்தொகுப்பின் போதாமைகளைப் பற்றி எழுதுவதே உங்களுக்குச் செய்யும் உபகாரமெனக் கருதுகிறேன் நான். அல்லது நாமே கூட விவாதிக்கலாம். உங்கள் தொகுப்பில் சிறந்த கவிதைகள் இருக்கின்றன. அதைப் பற்றி பிறகு பேசலாம். முதலில் போதாமைகளைப் பற்றி. பரத்தை என்கிற, பொது பாடுபொருளில் இருந்து மாறுபட்ட, கொஞ்சம் அதிர்ச்சிகள் கலந்த ஒன்றைப் பாடத்துணிபவனுக்கு இன்னும் கொஞ்சம் துணிச்சல் தேவை. உங்களது முன்னுரையில் இவையெல்லாம் என் அனுபவங்களா என்று கேட்காதீர்கள் என்ற கோரிக்கை த்வனிக்கிறது இல்லையா? அவை உங்கள் அனுபவம் என்றே வாசகன் கருதினால் அதனால் நமக்கு என்ன நஷ்டம்? மிகத் துணிச்சலான கவிப்பொருளுக்கு அந்த முன்னுடை ஒரு முரண். [இதற்கு, " அது பயம் அல்லது பலவீனம். சொந்த வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைக் காத்துக் கொள்ளச் செய்யும் சிறு உபாயம். அதற்கு இச்சமூகத்தின் முதிர்ச்சிக்குறையும் ஒரு வகையில் பொறுப்பாகிறது &q

பரத்தை கூற்று : செல்வேந்திரன் - 2

பரத்தை கூற்று பற்றி செல்வேந்திரன் எழுதியிருக்கும் விமர்சனப்பதிவு இங்கே: ******* http://selventhiran.blogspot.com/2011/03/blog-post_1612.html ******* பரத்தையர் கூற்று - வாசக அபிப்ராயம் Posted by SELVENTHIRAN at 10:37 PM Friday, March 18, 2011 வாசக உழைப்பை அதிகம் கோராத, ஒரு மணி நேரத்திற்குள் படித்து முடித்து விடுகிற தொகுப்புதான் பரத்தையர் கூற்று. கவிதைகள் குறித்த அபிப்ராயங்களை அவ்வப்போது அதன் ஆசிரியருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். எழுதுங்களேன் என்றார். நவகவிதை இன்று வந்தடைந்திருக்கும் இடம்; கவிதையின் அழகியல் குறித்துத் திறனாய்வாளர்கள் கடைப்பிடிக்கும் கறார் அணுகுமுறை; கவிதைகள் குறித்து நான் உருவாக்கி வைத்திருக்கும் சொந்த அளவுகோல் - இவற்றின் துணையின்றியே இந்நூலை நிராகரிக்க போதிய காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக, பரத்தையர் குறித்த சொல்லாடல்கள் ‘அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது’ என்ற த்வனியிலேயே இருக்கக் கண்டிருக்கிறேன். முயங்கிக் கிடப்பவனை முற்றிலும் நிராயுதபாணியாக்கி வெளித்தள்ளும் தாசியரைப் பற்றியோ, ஒளித்து வைத்த காமிராவில் படம் பிடித்து வீட்டிற்கு சிடி வருமென மிர

பரத்தை கூற்று : உயிர்மை

Image
பரத்தை கூற்று கவிதைத் தொகுதி பற்றிய விமர்சனம் உயிர்மை இதழில் வெளியாகி இருக்கிறது (மார்ச் 2011 - பக்கங்கள் 68 - 70). ந.முருகேச பாண்டியன் எழுதியிருக்கிறார். இது குறிப்பிடத்தக்க‌ ஓர் அங்கீகாரமாகவே தோன்றுகிறது.

பரத்தை கூற்று : அதீதம்.காம்

அதீதம் இணைய இதழின் [இதழ் ‍ 5 : 16.03.2011 - 31.03.2011] புத்தக அறிமுகம் பகுதியில் பரத்தை கூற்று கவிதைத்தொகுதி இடம் பெற்றுள்ளது. லதாமகன் எழுதியிருக்கிறார். அவர் ஏற்கனவே தனது வலைப்பதிவில் வெளியிட்டிருந்த‌ அதே விமர்சனம் தான் இது: http://atheetham.com/mar2/book.htm *******

பரத்தை கூற்று : பெண்ணியம்.காம்

பெண்ணியம் இணைய இதழில் பரத்தை கூற்று கவிதைத்தொகுதி பற்றிய விமர்சனம் இடம் பெற்றுள்ளது. தோழர் மாதவராஜ் தம் பதிவிலிட்ட‌ இடுகை யின் மீள்பதிவு இது: http://www.penniyam.com/2010/10/blog-post_19.html *******

பரத்தை கூற்று : இணையத்தில்...

Hi, I recently gone through the reviews of your book "Paraththai Kootru" I am unable to find this book in udumalai or ezeebook. do you know the search key word for udumalai.com for this book? Thanks, Karthi ******* அன்பு நண்பர்களுக்கு, மேற்கண்ட கடிதம் போல் நூற்றுக்கணக்கான கடிதங்கள் / மின்னஞ்சல்கள் தினமும் குவிந்து கொண்டிருக்கின்றன என்று பொய் சொல்ல விரும்பவில்லை. கார்த்திக் மற்றும் இதே கேள்வியைக் கேட்ட மேலும் சிலருக்கும் உதவும் என்பதற்காக இந்த பதில்: என்னுடைய ' பரத்தை கூற்று ' கவிதைத்தொகுதியினை தற்போது இணையத்திலும் கீழ்காணும் சுட்டியின் மூலம் சுலபமாக வாங்கலாம். இதனைச் சாத்தியமாக்கிய பத்ரி சேஷாத்ரி, ஹரன் பிரசன்னா மற்றும் பொன்.வாசுதேவன் ஆகியோர்க்கு நன்றிகள். New Horizon Media :: Shop - https://www.nhm.in/shop/100-00-0000-081-7.html பின்குறிப்பு : என்னூல் மட்டுமின்றி அகநாழிகையின் அனைத்து நன்னூல்களும் இவ்விடம் விற்பனைக்குக் கிடைக்கின்றன - https://www.nhm.in/shop/Aganazhigai/ - CSK

காதல் புராணம் : கனாக்காதலன்

காதல் புராணம் கவிதைத்தொடர் குறித்து பதிவர் கனாக்காதலன் இங்கே பகிர்கிறார்: ******* http://kanakkadalan.blogspot.com/2011/03/6.html ******* ஜன்னல் பக்கங்கள் 6 Posted by கனாக்காதலன் on Wednesday, March 09, 2011 காதலர் தினத்திலிருந்து தமிழ் பேப்பர் டாட் நெட்டில் காதல் புராணம் என்ற குறுங்கவிதைத் தொடர் வெளி வந்து கொண்டிருந்தது. மூன்று நான்கு வரிகளில் ஒரு பெண்ணின் பல்வேறு பருவநிலைக் காதலை அழகாய் அடைத்து வைத்திருந்தார் கவிஞர். அதை எழுதுபவரின் பெயர் வேண்டுமென்றே வெளிப்படுத்தப்படாமல் விடப்பட்டிருந்தது. அக்கவிதைகளின் நடைக்கு நான் ஏற்கனவே பழக்கப் பட்டிருந்தாலும் என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அக்கவிதை தொடரை எழுதியவர் எழுத்தாளர் சரவணக்கார்த்திகேயன் அவர்கள். எனக்குப் பிடித்த சில கவிதைகள் : உன்னைக்கண்டாலே இடம்வலமாகிற‌தென் ம்ச‌ஞ்ப‌ர‌பி. துல்லியமாய் இக்கணம் வரை நீ தொலைபேசிக்கம்பிவழி தந்த‌ மொத்த முத்த எண்ணிக்கை – லட்சத்து முப்பத்தாறாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தாறு தொள்ளாயிரத்து இருபத்தேழு தொள்ளாயிரத்து இருபத்தெட்டு... பதினெட்டாம் முறையாக‌ நான் வேண்டாமென முனகிய போது என்

எல்லாம் ஒரு 'விளம்பரம்' தான்

' விளம்பரம் ' கனடாவின் டொராண்டோ நகரிலிருந்து கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து இலவசமாக வெளிவரும் சமூக முன்னேற்றப் பத்திரிக்கை. அடியேனின் ' நடுநிசி நாய்கள் ' திரைப்பட விமர்சனக்கட்டுரை இதன் மார்ச் 01, 2011 தேதியிட்ட இதழில் வந்திருக்கிறது. எனது‌ வலைப்பதிவில் முன்பு வெளியான விமர்சன இடுகை யின் விரிந்த‌‌ வடிவம் இது. விளம்பரம் பத்திரிக்கையை அன்பர்கள் ஆன்லைனிலேயே படிக்கலாம்: http://vlambaram.com/archives/March 01, 11.pdf (பக்கங்கள் 21 மற்றும் 39) ஸ்தூல வடிவத்தைத் தொட்டு வாசிக்க நேரும் கனடா நண்பர்கள் பின்னூட்டமிடலாம்!