Posts

Showing posts from May, 2017

வெற்றி - வெற்றி

Image
ஒரு சிறுகதையை முன்வைத்து மட்டும் ஒரு கட்டுரை எழுதுவேன் என்று எண்ணியதில்லை. ஆனால் இப்போது அதைத் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதையான வெற்றி தான் அது. பெண்களை மலினப்படுத்தும் கதை என்றும் பிற்போக்குத்தனமான கருத்தாக்கத்தை முன்வைக்கிறது என்றும் சமூக வலைதளைங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி பேசுபொருளாகும் நோக்கம் என்றும் சிலபல வசைகளை இடைப்பட்ட தினங்களில் கண்ட பின் சற்று முன் தான் கதையை வாசித்தேன். வெற்றிச் சிறுகதையா எனப் பார்க்கும் முன் வெற்றி சிறுகதையா? தலைப்பு சேர்க்காமல் துல்லியமாய் 7,458 சொற்கள் வருகின்றன. (சொற்களை எண்ணுவது என்பது உண்மையில் அவற்றுக்கிடையேயான இடைவெளியை எண்ணுவது தானே!) பொதுவாய் தமிழில் இன்று 1,000 முதல் 3,000 சொற்களில் இலக்கியச் சிறுகதைகள் எழுதப்படுகின்றன என்ற அவதானிப்பை வைத்துப் பார்க்கும் போது இது மிக மிக நீளம் தான். ஆனந்த விகடன் பத்தாண்டுகள் முன் சுஜாதாவின் நீளமான‌ சிறுகதைகளை 'சற்றே பெரிய சிறுகதை' என வெளியிட்டது. அவற்றை விடவும் இது மூன்று மடங்கு நீளம். ஆங்கிலத்தில் சிறுகதையின் நீளம் குறித்துப் பேசும் போது எட்கர் ஆலன் போவின்

கோடி விழிகள்

Image
லென்ஸ் . இன்றைய சூழலில் முக்கியமான + அவசியமான‌ படம். 1 மணி 50 நிமிடப் பரபரப்பான‌ திரைக்கதையினூடாக‌ சவாலான‌ ஒரு விஷயத்தை முடிந்தளவு சரியாகப் பேசி இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். முதலில் இப்படம் எந்தச் சட்டகத்துக்குள் நின்று பேசுகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ந‌ம் உடம்பு - குறிப்பாய்ப் பெண்ணுடல் - என்பது மானத்துடன் தொடர்புடையது; உடையோர் (கணவன் / மனைவி / காதலன் / காதலி / இன்ன பிற‌ நெருக்கமானோர்) தவிர்த்த பிறர் அதைப் பார்த்தல் உயிர் விடுமளவு மாபெரும் அவமானம். இந்தக் க‌ருத்தை எந்த விமர்சனமும் இன்றி எடுத்துக் கொள்கிறது படம் (ஏற்றுக் கொள்கிறது என்றும் சொல்வேன்). அதற்குள் இருந்தபடி ஒரு கதையைச் சொல்லி இருக்கிறது. எவன் பார்த்தால் என்ன, வக்கிரத்துடன் பார்ப்பவன் தானே அவமானப்பட வேண்டும் என்று படம் கேட்கவில்லை. இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை. படத்தின் தரப்பு என்ன என்பதைச் சொல்லி விட்டால் மேற்கொண்டு பேச ஏதுவாக இருக்கும் என்பதே அது. இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் 99.99 விழுக்காடு இந்த மனநிலையுடன் இருப்பவர்கள் தாம். அதனால் படம் அவர்களை நோக்கிப் பேசுவது என்பது அ

நெஞ்சிலேற்றிப் போற்றுகின்றேன்

Image
நேற்றைய நாமக்கல் தமிழிசைக் கச்சேரியில் பெருமாள்முருகன் இயற்றிய பஞ்சபூதக் கீர்த்தனைகள் புத்தகமும், தமிழ் மின்னிதழின் இளவேனில் 2017 டீஸரும் வெளியிடப்பட்டன. பஞ்சபூதக் கீர்த்தனைகள் 20 பக்கம் கொண்ட சிறுநூல். விலை ரூ.10. காலச்சுவடு வெளியீடு. பெருமாள்முருகன் எழுதிய 10 கீர்த்தனைகளையும் 4 விருத்தங்களையும் உள்ளடக்கியது. அதிலிருந்து ஏழெட்டு கீர்த்தனைகளையும் இரண்டு விருத்தங்களையும் டிஎம் கிருஷ்ணா நேற்று மேடையில் பாடினார். நிகழ்ச்சியில் நான் கவனித்த பகுதிகள் பற்றி மட்டும் என் அபிப்பிராயத்தை எழுத வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் இன்று ஷ்ருதி டிவி நிகழ்ச்சியின் மொத்த வீடியோவையும் யூட்யூபில் ஏற்றி விட்டார்கள். அதனால் ரசிகர்கள் நேரடியாய் தமக்கான இசைய‌னுபவத்தைப் பெறலாம். கர்நாடக சங்கீதம் பற்றிய என் பாமரக் கருத்து அவசியமில்லை. பொதுவான சில விஷயங்கள் பற்றி மட்டும் சொல்கிறேன். பக்தி தாண்டிய, வட்டார மொழி தாங்கிய கீர்த்தனைகளும் தியாகராஜ கீர்த்தனைகளோடு ஒரே மேடையில் பாடப் பெற வேண்டும் என்பதே தன் கருத்து என டிஎம் கிருஷ்ணா தன் உரையில் குறிப்பிட்டார். அவர் பாரம்பரியத்தை விலக்கவில்லை; புதுமை மட்டும்

தமிழ்: இளவேனில் 2017 - TEASER

Image
மகசேசே விருது பெற்ற பெருமதிப்பிற்குரிய‌ கர்நாடக இசைப் பாடகரும் சமூகச் செயற்பாட்டாளருமான‌ டிஎம் கிருஷ்ணா அவர்கள் தமிழ் மின்னிதழின் இளவேனில் 2017 டீஸரை சற்று முன் வெளியிட்டார். நாமக்கல் நகரில் பெருமாள்முருகன் எழுதிய பஞ்சபூதக் கீர்த்தனைகளைப் பாடும் தமிழிசைக் கச்சேரியில் இது நடந்தேறியது. கூடிய விரைவில் இதழ் வெளியீடு. இதழ் Teaser வாசிக்க‌ / தரவிறக்க: https://drive.google.com/file/d/0BwdaEHEd7U78dmdQQ040eEVnTXc/view

பெருவிரல்

Image
First things first. வெறுப்பும் பொறாமையும் முயங்கி விமர்சனமாய், வசையாய்ப் பொழிவதற்கு மத்தியில் விடாப்பிடியாய் ஒன்பதாண்டுகளாய் சுஜாதா விருதுகளை வழங்கி வரும் மனுஷ்ய புத்திரனுக்கு என் மரியாதை. இந்தாண்டு இணையப் பிரிவுக்கான தேர்வுக்குழுவில் இருந்த இரா. முருகன், பாஸ்கர் சக்தி மற்றும் கேஎன் சிவராமன் ஆகியோருக்கு என் நன்றி. நேர மேலாண்மை தவிர்த்து இந்த‌ விருது விழாவை சிறப்பாய் நடத்திக் காட்டிய‌ உயிர்மை குழுவினருக்கு பாராட்டுக்கள். இம்முறை சுஜாதா விருது பெற்றுள்ள‌ பெரும் படைப்பாளிகளுக்கு வணக்கமும் இளம் படைப்பாளிகளுக்கு வாழ்த்தும். அரங்கில் பெருந்திரளாய்க் குழுமி நிகழ்ச்சியைச் சிறப்பித்த வாசகர்கள், நண்பர்கள், உறவினர்களுக்கு என் பிரியங்கள். நேற்றைய மாலையில் இணையப் பிரிவுக்கான சுஜாதா விருதினை சுஜாதா ரங்கராஜன் மற்றும் இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் கைகளிலிருந்து பெற்றுக் கொண்டேன். உயிர்மை போன்ற ஓர் ஆதென்டிக் இலக்கிய இயக்கம் அளிக்கும் அங்கீகாரம் என்பதன் முக்கியத்துவம் தாண்டி தனிப்பட்டு இது எனக்கு மனதுக்கு மிக நெருக்கமானதொரு நிகழ்வு. காரணம் சுஜாதா! அவரது பெயரிலான விருது இது என்பது எனக்கு உவகையூட்ட

சுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்

Image
டியர் ஜெயமோகன், நலம் தானே? சுஜாதா விருது பற்றிய - குறிப்பாய் இணைய விருது குறித்த‌ - உங்கள் கருத்து கண்டேன் ( http://www.jeyamohan.in/98187 ): " இணைய விருதுகள் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஷான்கருப்பசாமி, சரவணக்கார்த்திகேயன் ஆகியோர் இணையதளங்களை நடத்துகிறார்களா, தொடர்ந்து எழுதுகிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. சமூக வலைத்தளப் பங்களிப்புக்காக இருக்கலாம். அது என் இடமல்ல என நினைக்கிறேன். " அது பற்றிய சில விளக்கங்கள் தர விழைகிறேன். 1) " சமூக வலைத்தளப் பங்களிப்புக்காக இருக்கலாம் "   எனக்கு அளிக்கப்பட்ட விருது எனது வலைதளத்துக்காகவே; சமூக வலைதளங்களில் எழுதியதற்காக அல்ல. நீங்கள் பகிர்ந்திருக்கும் விருது விழா அழைப்பிலிருக்கும் பட்டியலிலேயே வலைதளச் சுட்டி சுட்டப்பட்டிருப்பதைக் காணலாம். 2) " இணையதளங்களை நடத்துகிறார்களா " 2007ல் தொடங்கிய வலைதளத்தை இன்று வரை தொடர்ந்து நடத்துகிறேன். தொடர்ந்து எழுதவும் செய்கிறேன். 2010க்குப் பிறகு ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூக வலைதளங்களின் வருகையினால் பொதுவாய் வலைதளங்கள், வலைப்பூக்கள் போன்றவற்றில் எழுதுவதில் உலக அ

சுஜாதா விருதுகள் - 2017

Image