Posts

Showing posts from September, 2010

படித்தது / பிடித்தது - 89

வாசம் பருவத்தில் தோன்றி உதிர்ந்த மலர்களை ஆழத் தோண்டி ஆங்கே புதைத்து வைத்தேன்; நெடுங்காலம் சென்றபின் அன்றொரு நாள் ந‌டுநிசியில் யாரும் காணாமல் அக‌ழ்ந்தெடுத்து நுக‌ர்ந்தேன் ம‌ண்ணுக்குள்ளே க‌னியாகி ம‌துவாகிக் கிட‌ந்த‌து; ஒரு போதும் அருந்திடவே இய‌லாதென்றாலும் மூடுவதிலும் திற‌ப்பதிலுமே போதையேறிப் போகிற‌து. - தீபா நன்றி : சிதறல்கள்

தக்கன பிழைக்கும்

அன்போ அறிவோ அதிரூப‌ அழகோ அகத்தில் காதல் அகழும் எல்லாம் அழிந்தும் எஞ்சும் - அங்குல அல்குல்.

பரத்தை கூற்று : சில TWEETகள்

spinesurgeon : Read few pages of @writercsk பரத்தை கூற்று . Should give credit to him for this athisha : @spinesurgeon ஆமாங்க நானும் கேள்விபட்டேன் @writercsk வின் பரத்தைகூற்று ரொம்ப நல்லாருக்குனு நிறைய பேர் சொன்னாங்க luckykrishna : @spinesurgeon yes, i also heard that @writercsk youthnaveen : @writercsk உங்களின் 'பரத்தை கூற்று' புத்தகம் வெளியாகும் முன்பே அதன் உள்ளடக்கம் எனக்கு அத்துப்படி என்பது நீங்கள் அறிந்ததே 1|3 youthnaveen : @writercsk உங்கள் எழுத்துக்களிலேயே என்னை மிகவும் கவர்ந்தவை அவை தான் என்று நான் பல தருணங்களில் குறிப்பிட்டதுண்டு 2|3 youthnaveen : @writercsk அந்த உண்மை இன்னும் புதிதாகவே உள்ளது. நான் எழுதியுள்ள 'வேசியின் குரல்' பதிவுகள் உங்கள் 'பரத்தை கூற்றின்' தாக்கங்களே 3|3 nagakadhir : @writercsk 'பரத்தை கூற்றை' பிற மாநில மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டிய எல்லா தகுதியும் பெற்ற கவிதைத் தொகுப்பாகவே கருதுகிறேன். nagakadhir : @writercsk #வாசிப்பவர்கள் நெய்தலிலேயை உச்சத்தை அடைந்து விடுகிறார்கள் என்பது உண்மை. vijaymahindran :

பரத்தை கூற்று : என்.விநாயகமுருகன்

பரத்தை கூற்று பற்றி என்.விநாயகமுருகன் எழுதியிருக்கும் விமர்சனப்பதிவு இது: ******* http://nvmonline.blogspot.com/2010/09/blog-post_26.html ******* Sunday, September 26, 2010 Posted by என்.விநாயகமுருகன் at 12:05 AM பரத்தை கூற்று சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தலித் பிரச்சினை பற்றி அந்த வலியை அனுபவித்த ஒரு உண்மையான தலித்தால் மட்டுமே அதை துல்லியமாக எழுத முடியுமென்றார். பெண்களின் வலியை பற்றி பெண் கவிஞர்கள் எழுதும்போது இருக்கும் வலியும்,வீர்யமும்,உக்கிரமும் ஆண் கவிஞர்கள் எழுதும்போது இருப்பதில்லையென்றார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை. காமத்தை பற்றிய நவீனக்கால எழுத்துகளில் ஜி.நாகராஜன், தஞ்சை பிரகாஷ்,வா.மு.கோமு போன்றோரும் (சிறுகதைகள், நாவல்கள்) கவிதைகளில் கலாப்ரியா, விக்கிரமாதித்தியன், மகுடேஸ்வரன் போன்ற சில ஆண் படைப்பாளிகள் மட்டுமே ஆங்காங்கு சில பாய்ச்சல்களை காட்டியுள்ளார்கள். குறிப்பாக பரத்தையர் உலகம் பற்றியும் அவர்களது அக உலகின் சிக்கல்களையும் பற்றி மிகச்சில ஆண் எழுத்தாளர்களே எழுதியுள்ளார்கள். பரத்தையர் என்ற சங்ககால சொல் வேசி, விபச்சாரி என்

பரத்தை கூற்று : FIRST REACTION

எனது பரத்தை கூற்று கவிதைத்தொகுப்புக்கு ஆற்றப்படும் முதல் எதிர்வினை இது: ******* Dear CSK, Just got the book and browsed it. It is beautiful and most of it, very bold. Good work! Cheers Meena (எனக்கு மிகப்பிடித்த சமகால ஆங்கிலக் கவியாளுமைகளுள் ஒருவர் மீனா கந்தசாமி ) ******* முதல் reaction ஒரு பெண்ணினுடையது என்பதும் அது positive-ஆக‌ இருக்கிறது என்பதும் இத்தகையதொரு நூல் வகைமைக்கு கூடுதல் கவன ஈர்ப்பைத் தருவதாகக் கருதுகிறேன்.

படித்தது / பிடித்தது - 88

சாத்தானிடமிருந்து கடவுளுக்கு கால் இடறி விழாமல் குருட்டுப் பிச்சைக்காரனைத் தொட்டு நிறுத்துபவர் பைத்தியக்காரியின் கர்ப்பத்துக்குப் பொறுப்பேற்றுக்கொள்பவர் சைகைகளில் காதலித்த பெண்ணை ‘தங்கை’யென்று சொல்லாதவர் சாலையோர மரணங்களைச் சகியாதவர் சிறுமிகளை மகளாகவும் நடத்தத் தெரிந்தவர் சடலத்தின் முன் குழந்தைக்கான வைத்தியப் பணத்தில் குடித்துவிட்டதாக ஒப்புக்கொள்பவர் ஒரு நொடி பயணிக்கிறார் சாத்தானிடமிருந்து கடவுளுக்கு - சே. பிருந்தா நன்றி : காலச்சுவடு , செப்டெம்பர் 2010 இதழ்

பக்தனின் சந்தோஷ‌ம்

" ரசி‌கர்‌களுக்‌கு எப்போதும் என்‌னுடை‌ய இசை‌ தா‌ன்‌. " - சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்ட பின்னர் நடந்த‌ பத்திரிக்கையாளர் சந்திப்பில் " ரசி‌கர்‌களுக்‌கு என்‌ன சொ‌ல்‌ல நி‌னை‌க்‌கி‌றீ‌ர்கள்? " என்ற கேள்விக்கு பதிலாக 'இசை ஞானி' இளையராஜா சொன்னது (செப்டெம்பர் 15, 2010) ******* ஒரிசாவிலிருக்கும் அக்ஷய மொகந்தி ஃபௌண்டேஷன் என்கின்ற அமைப்பு 2007 முதல் வருடம் தோறும் இசைத்துறையில் சாதனை புரிந்தோர்க்கு வழங்கும் கௌரவம் மிக்க‌ அக்ஷய‌ சம்மான் விருதுக்கு இவ்வாண்டு இளையராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தாதா சாகேப் பால்கே விருது பெற்ற வங்காளப் பின்னணிப் பாடகர் ம‌ன்னா டே (2007), ரஹ்மானுடன் ஆஸ்கர் விருது பெற்ற இந்திப் பாடலாசிரியர் குல்சார் (2008) மற்றும் NOTHING BUT WIND வாசித்த புல்லாங்குழலிசைக் கலைஞர் ஹ‌ரிப்ரசாத் சௌராஸ்யா (2009) ஆகியோர் இதற்கு முன்பு இவ்விருதினைப் பெற்றிருக்கிறார்கள். 2010க்கு இளையராஜா. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. (மிகத்தாமதமெனினும்) ச‌மீபமாக ராஜாவைத் தேடி இது போன்ற அங்கீகாரங்கள் வரிசை கட்ட‌த் தொடங்கியிருக்கின்றன - முதல

படித்தது / பிடித்தது - 87

அரை டிக்கெட் 3 வயது அல்லது 100 செ. மீ. அல்லது அம்மாவின் நேர்மை. - என்.கார்த்தி நன்றி : inflamed !

மீண்டும் ராஜாங்கம்

57வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன‌. முதன் முறையாக தேசிய விருதுகளில் சேர்க்கப்பட்டுள்ள சிறந்த பின்னணி இசை க்கான விருதினை பழசிராஜா படத்துக்காகப் பெற்றிருக்கிறார் இளையராஜா . நான் எனது SARKAR ACADEMY AWARDS ல் சிறந்த பின்னணி இசைக்கான விருதினை இப்படத்திற்கே அளித்திருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது - http://www.writercsk.com/2009/12/2009_31.html அப்புறம் நேரமிருப்பின் விரிவாய்க் கதைப்போம் - இப்போதைக்கு CHEERS WITH R-A-A-J-A!

அகநாழிகை - புதிய இதழ்

Image
சிற்றிதழ் நடத்தி அதன் ஒவ்வொரு இதழையும் வெளிக்கொணர்வது என்பது கிட்டதட்ட ஒரு குட்டிப் பிரசவத்துக்கொப்பு. அவரே குறிப்பிட்டிருப்பதைப் போல் பொருளாதாரச் சிக்கல்கள் தாண்டி அகநாழிகை அடுத்த இதழைக் (அக்டோபர் 2010?) கொண்டு வந்து விட்டார் பொன்.வாசுதேவன் . இதை ஒற்றை அலைவரிசையில் சிந்திக்கும் சின்னக் கூட்டத்தின் அறிவுசார்தேவையைப் பூர்த்தி செய்யும் வேலை எனக்குறுக்குவதை விட‌ மொழிக்கு, அதன் செறிவுக்குச் செய்யும் உபகாரம் என்றே கொள்தல் வேண்டும். ******* குறுநாவல் சோழிகள் – விமலாதித்த மாமல்லன் சிறுகதைகள் நீர்ச்சக்கரம் – விமலன் ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன் சூரியக்குடை – தாரா கணேசன் வித்தை – என்.விநாயகமுருகன் இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதை செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி (தமிழில் : நாகரத்தினம் கிருஷ்ணா ) கட்டுரைகள் சமாதானத்தின் இசை – ரா.கிரிதரன் கவிதையின் ரசவாதம் – வா.மணிகண்டன் தமிழ்ச் சமூக இயல்புகள் – அண்ணா கண்ணன் பின்னிரவுப் புழுக்கங்களும் ஒரு முக்மாஃபியும் – ரௌத்ரன் கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல் – ஆர்.அபிலாஷ் கவிதைகள் சிவரமணி லாவண்யா சு

சகா : சில குறிப்புகள் - 14

நான் என்னைப்பற்றி எழுதுவதாக எல்லோரும் சொல்கிறார்கள் நான் உங்களைப் பற்றி எழுதுகிறேன் என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். - ரமேஷ் பிரேதன் ******* " உன்னைப் பற்றி என் வலைதளத்தில் எழுதுவதால், சகா என்பது நான் தான் என்று பல புத்திஜீவிகள் - என் நெருங்கிய சுற்றமும் நட்பும் கூட‌ - நினைத்துக் கொள்கின்றனர். இதனால் எனது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கப்படுமோ என அஞ்சுகிறேன். அதனால் ' சகா குறிப்புகள் இனி வெளிவராது ' என அறிவிக்கப்போகிறேன் " என சகாவிடம் - அவன் இதற்கெல்லாம் அசந்து விடுகிறவன் இல்லையெனினும் - ஒப்பாரி வைத்தேன். பின் எங்களிடையே நடந்த சம்பாஷணை இது (குறிப்பு: இவற்றில் இந்த மூன்று புள்ளிகளை ["..."] மட்டும் கொண்ட வசனங்கள் எல்லாம் அடியேன் பேசியவை): " அது உன் இஷ்டம். நீயில்லாவிட்டால் நான் வேறு ஆள் பார்த்துக் கொள்கிறேன் ." "..." (" என்னைத் தவிர வேறெந்த இளித்தவாயன் உன் குப்பைக‌ளை எழுத முன்வருவான்? " என்ற கேள்வியை எங்கள் " நண்பேன்டா " நட்பின் பொருட்டு அடக்கிக்கொண்டேன்.) " கூரை மேல் சோற்றைப் போட்டால் ஆயிரம் கா

காமம் காமம் காமம்

ஒன்றுக்கும் / இன்னொன்றுக்கும் / என்ன வித்தியாசம் இல்லறத்தில் / நிகழும் காலம் / நிகழும் இடம் பரத்தைமையில் / நிகழ்த்தும் மனம் / நிகழ்த்தும் உடல்‌ வெளியாகியிருக்கும் என் ' பரத்தை கூற்று ' தொகுப்பின் முளைவிடாத ஆதிவிதை ஒரு வேளை மகுடேசுவரனின் இந்தக்கவிதைக்குள் ஒளிந்திருக்கலாம் என‌ பிற்காலத்தில் என் எழுத்துக்களை ஆராய நேரும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் யாரேனும் கண்டுபிடிக்கக் கூடும். ஆம் - எனது தொகுப்பை ஒன்பதே வரிகளில் சொல்லும் நுட்பமான கவிதை இது. வருடங்கள் முன்பு எழுத்தாளர் சுஜாதாவிடம் மகுடேசுவரன் தனது ' காமக்கடும்புனல் ' தொகுப்பைப் பற்றிப் பேசிய‌ போது அவர் சொன்னது : " உனக்கு இருக்கிறது மகா எதிர்ப்பு ". சுவாரசிய முரண் என்னவென்றால், மாதங்கள் முன்பு மகுடேசுவரன் அவர்களிடம் என் தொகுப்பை பற்றிப் பேசிய போது அவர் எனக்குச் சொன்னதன் சாரமும் அதே தான். தொகுப்பின் உருவாக்கத்தில் அது மிக முக்கியமானதொரு திருப்புமுனை. பின் இரு மாத காலம் உழைத்து மீண்டும் திருத்திச் செப்பனிட்டேன். இவ்வருடம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை '_final.doc' என்ற பெயருடன் குறைந்தபட்சம் பத்து முறையாவத

சில சிந்தனைகள் - 8

கே.பி.என். ட்ராவல்ஸ் ஆன்லைனில் டிக்கெட் புக் பண்ணியிருக்கிறீர்களா? நீங்கள் ஆணாய் இருந்தால் ஏற்கனவே ஒரு பெண் முன்பதிவு செய்திருக்கும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையை நீங்கள் பதிவு செய்ய இயலாது. ஆனால் அதுவே நீங்கள் பெண்ணாய் இருந்தால் ஏற்கனவே ஓர் ஆண் முன்பதிவு செய்திருக்கும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையைத் தாராளமாய் நீங்கள் பதிவு செய்ய முடியும். எ.சொ.வ.? ******* இந்தியாவின் மிகச்சிறந்த ஐந்து நடிகர்கள் என்று முன்பு எப்போதோ பட்டியலிட்டு சேமித்திருக்கிறேன். இப்போது பார்க்கும் போதும் இதில் ஏதும் மாற்றமில்லை : 1. கமல்ஹாசன் 2. மோகன்லால் 3. நஸ்ருதீன் ஷா 4. நானா படேகர் 5. அமிதாப் பச்சன் ******* அதே போல் தமிழ் சினிமாவின் சிறந்த வசனகர்த்தாகள் என முன்பு போட்ட பட்டியலும் இன்னமும் மாற்றம் தேவையில்லாமல் அப்படியே தொடர்கிறது: 1. சுஜாதா 2. கமல் 3. அனந்து 4. மணிரத்னம் 5. கெளதம் 6. பாலகுமாரன் 7. சரண் 8. விஜி 9.பரதன் 10.விசு ******* " Writing is like prostitution. First you do it for love, and then for a few close friends, and then for money. " - விமாலாதித்த மாமல்லன் அவர்களின் எழுத்துக்

வேசியின் கவிதைகள்

பரத்தை கூற்று - இது எழுதப்பட்டது 2006ம் ஆண்டின் தொடக்கத்தில். அப்போது பொறியியல் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன்; கவிஞர் மகுடேசுவரனின் ' காமக்கடும்புனல் ' படித்த போதையில் ஆழ்ந்திருந்தேன் (இப்போதும் அதிலிருந்து முழுமையாய்த் தெளிந்தேனில்லை). அதே போன்றதொரு தொகுப்பை எழுதி விட வேண்டும் என்று கையும், மனமும் பரபரத்துக் கிடந்த / கடந்த‌ நாட்கள் அவை. கிட்டதட்ட அதே காலகட்டத்தில் நண்பர்களுக்கு நேர்ந்த சில சம்பவங்களை பார்த்ததும் கேட்டதுமான பாதிப்பில் எழுதியது ' வேசியின் கவிதைகள் ' என்ற 500 சிறுகவிதைகள் கொண்ட பெருந்தொகுப்பு. அது தான் இப்போது ' பரத்தை கூற்று ' என்ற‌ பெயரில் புத்தகமாகியிருக்கிறது. அதிலிருந்து குறைத்து, திருத்தி, தேர்ந்த‌ 150 கவிதைகள் மட்டும் இதிலிருக்கின்றன. ஆடையோ கவிதையோ குறைக்கக் குறைக்கத் தானே அழகு! ' வேசியின் கவிதைகள் ' அல்லது ' பரத்தை கூற்று ' என்று தலைப்பே சொல்வது போல் ஒரு விபச்சாரி அல்லது பல விபச்சாரிகள் தங்கள் பலதரப்பட்ட மனநிலைகள் மற்றும் சூழ்நிலைகளிலிருந்து சொல்வதாய் எழுதப்பட்ட கவிதைகளே இவையனைத்தும். இதன் நியாயம் மற்றும் தேவை ப

கண்டேன் பரத்தையை

இன்றைய வைகறையில் தான் கைக்குக் கிடைத்தது - என் ' பரத்தை கூற்று ' புத்தகம். மனிதனுக்கு " ஆள் பாதி, ஆடை பாதி " என்பதைப் போல், புத்த‌கத்துக்கும் " உள்ளடக்கம் பாதி, உருவாக்கம் பாதி " என்று சொல்லலாம். தூரத்திலிருந்து பார்ப்பவனை அருகே வர வைப்பதும், பக்கத்திலிருந்து பார்ப்பவனை கையிலெடுக்கச் செய்வதும், எடுத்துப் பார்ப்பவனை வாங்கத் தூண்டுவதுவும் ஒரு புத்தகத்தின் ‌உருவாக்க நேர்த்தியேயன்றி வேறில்லை. அந்த அளவுக்கு புத்தகத்தின் தயாரிப்பு அழகியலை மிக நம்புபவன் நான். என் முதல் புத்தகத்துக்கு அது மிகச்சிறப்பாக அமைந்தது ( கிழக்கு பதிப்பகம் - கேட்கவும் வேண்டுமா?). இப்போது இரண்டாவதும் அப்படியே என்பதில் மிக மகிழ்ச்சி. புத்தகத்தைக் கண்டவுடன் வாசுதேவனுக்கு தட்டிய எஸ்எம்எஸ் : " The making of the book really rocks! ". புத்த‌க ஆக்கத்தின் போது, "வாசு, இதுவரை உங்கள் பதிப்பகத்திலிருந்து வெளி வந்த புத்தகங்களிலேயே மிக அதிக நேர்த்தியுடன் இருப்பது நர்சிம்மின் ' அய்யனார் கம்மா ' தான். எனது புத்தகமும் அதே தரத்தில் உருவாக வேண்டும்" என அவ‌ரே சலித்துப் போகுமள

மதுரை புத்தக திருவிழா

அகநாழிகை பதிப்பகத்திலிருந்து வெளியாகும் எனது முதல் கவிதைத்தொகுதியான‌ ' பரத்தை கூற்று ' நாளை (03-செப்டெம்பர்-2010) முதல் மதுரை  புத்தக திருவிழாவின் உயிர்மை பதிப்பக அரங்கில் கிடைக்கும் எனத் தெரிகிறது (பதிப்பாள‌ர் கூற்று!) மதுரை  புத்தக திருவிழா - 2010  ( செப்டம்பர் 2, 2010 - செப்டம்பர் 12, 2010 ) இடம்: தமுக்கம் மைதானம், மதுரை உயிர்மை பதிப்பகம் அரங்கு எண்: 112-113 மேலதிக‌ விவரங்களுக்கு: http://www.aganazhigai.com/2010/08/blog-post_25.html

படித்தது / பிடித்தது - 86

எப்டியிருக்கீங்க மணவாழ்க்கை எப்டியிருக்கு விஷேஷம் ஏதாவது தம்பதி சமேதரா விருந்துக்கு வரணும் வீட்ல எப்டியிருக்காங்க ஆடிமாசம் கொலபட்னியா புரிதல் எப்டியிருக்கு புதுமாப்ள தொந்தரவு பண்ணாதீங்கப்பா போகட்டும் குடிக்க்கூடாதுன்னு கன்டிஷனா சிகரெட்டாவாது பிடிக்கலாமா என்ன சொல்றாங்க வீட்டுக்காரம்மா வீட்ல எங்க ஊருக்கா பொண்டாட்டி கால் பண்றாங்களா வீட்ல கூட்டிட்டு வரணும் கல்யாணத்துக்கு புதுமாப்ள என்ன பண்றீங்க இந்த நேரத்துல சேட்ல பொண்டாட்டி சமையலா தலைதீபாவளி வாழ்த்துகள் போன்ற இன்னபிற தருணங்களை கேள்விகளை புன்னகையோடு கடந்துவிடுகிறேன் நிலைக்கண்ணாடி சட்டக விளிம்பிலிருக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள் விழுந்த புத்தகமெடுக்க குனிய கட்டிலுக்கடியில் சுவரோரம் சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி ஜன்னல் விளிம்பிலிருக்கும் ஏர்பின்கள் முந்தானை மடிப்பு குத்தப்பட்ட அரைஞான் கயிறிலிருக்கும் சேப்டிபின் பீரோவில் சட்டைகளுக்கிடையில் விடுபட்டுப்போன உள்ளாடை ஆர்எம்கேவியில் எடுத்த பட்டு வேட்டி சட்டை கறை படிந்த உள்ளாடை வேட்டி சுகித்த மெத்தை சீதனங்கள் மோதிரம் அணிந்திருந்த மெட்டி நலங்குமஞ்சள் பூசியிருந்தபடி வரவேற

ஆறாம் விகடன்

Image
இவ்வார ஆ.வி. யிலும் (08.09.2010) எனது ட்வீட் இடம் பெற்றுள்ளது. இது 6ம் முறை. இம்முறை விஷயத்தை முன்பே ஆரூடம் சொன்ன சிகாகோ ஆனந்துக்கு ப்ரியங்கள்.