இருண்ட கண்டம் - மொழிபெயர்ப்பு
தெகல்கா வலைதளத்தில் ஜோஷுவா முயிவா என்ற இந்திய கறுப்பினத்தவர் My Own Dark Continent என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் மொழிபெயர்ப்பு: ######################## என் சொந்த இருண்ட கண்டம் சில நேரங்களில் இனவெறியை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், சொல்கிறார் ஜோஷுவா முயிவா ஒரு மலையாளிக்கும், நேபாள பெண்ணுக்கும் பிறந்தவள் என் தாய். அவள் என் நைஜீரியத் தந்தையை மணக்க, நான் பிறந்தேன். என் வாழ்க்கையின் 23 வருடங்களில் 20ஐ பெங்களூரில் கழித்திருக்கிறேன் - சகித்துக்கொள்ளக்கூடிய இந்தி, கன்னடம், நேபாளி மற்றும் தமிழ் பேச முடியும்; வெந்நீரும், படுக்கையும் கேட்குமளவுக்கு மளையாளமும் தெரியும். ஆனால் ஓர் இந்தியனாக நான் தேறுவதற்கு உதவிய சமூகக் குறியீடுகள் எதுவும், வெளிப்படையாக நிறவேற்றுமைக் கண்ணாடி வழி நான் பார்க்கப்படுவதைத் தடுக்கவில்லை. நான் பொது ஊடக தொடர்பியல் படித்துக் கொண்டிருந்த, 'ஒழுக்கத்துக்கும்', நெறிகாப்புக்கும் பெயர் போன ஒரு மதிப்பு மிக்க கல்லூரியில், ஒவ்வொரு மாணவனுக்கும் வருகைக்கணக்கு, அனுமதிக்கப்பட்ட சிகை அலங்காரம் போன்றவை குறித்த விதிகள் அடங்கிய ஒரு கையேடு வழங்கப்படும். ஒருமு