சகல தேசங்களின் கலாசாரப் பின்புலங்களிலிருந்தும் நம் சகாவுக்கு பெண்வழித் தொடர்புகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலொருத்தி சுப்ரியா (பெயரை ஆதி நீடலுக்கு உட்படுத்தி ஆபாசமாக்கி விட வேண்டாம் எனபது சகாவின் தாழ்மையான வேண்டுகோள்!). பன்னிரண்டாம் வகுப்பில் சகாவின் வகுப்புத் தோழியான இவள் பின் இளங்கலை தத்துவ இயல் படிக்க ஜப்பான் சென்று, தொடர்ந்து அங்கேயே அதே துறையில் முதுகலையும் படித்து கடந்த ஆண்டு தான் இந்தியா திரும்பினாள். ஜப்பானிலிருந்த ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து மின் அஞ்சல், மின்னாத அஞ்சல் எல்லாவற்றின் உதவியுடனும் சகவுடனான தனது பரிசுத்த நட்பைப் பேணிப் பாதுகாத்து வந்தவள், இந்தியா திரும்பியதும் செய்த முதல் வேலை சகாவை தன் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தது தான். விருந்து என்றால் நீங்கள் நினைப்பது போல் ஆளுயர வாழையிலை இட்டு, தண்ணீர்த்துளி தெளித்து, பொன்னி அரிசிச்சோறு பொங்கி, சாம்பார், குழம்பு, கூட்டு, அவியல், பொறியல், ரசம், தயிர், மோர், அப்பளம், வடை, பாயாசம் சகிதம் பிரமாதப்படுத்தும் நம்மூர்த் தமிழ்ச்சமையல் அல்ல. ஜப்பானிய பாரம்பரிய முறைப்படியிலான சஷிமி மற்றும் சுஷி என்ற வினிகர் தடவ