Posts

Showing posts from December, 2023

காலோஸ்மி [சிறுகதை]

Image
இக்கதை எழுதப்படும் நாளிலிருந்து * ஓராண்டு, ஒரு மாதம், 25 நாட்கள் எதிர்காலத்தில்… தீஸ் ஜனவரி மார்க்கிலிருந்த ‘காந்தி ஸ்மிருதி’ மாலை ஐந்து மணியின் குளிர்ச்சியில் சிலிர்த்திருந்தது. மஹாத்மா நினைவு நாள் என்பதையும் கடந்து ஜ‌னம் அதிகமில்லை. மரணத்தை நோக்கி காந்தி இறுதியாக நடந்து சென்ற பாதையை அடையாளப்படுத்த‌ அவரது பாத ரட்சைகளின் வடிவை சிமெண்ட்டில் புல்வெளி நடுவே பதித்திருந்தனர். அங்கே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் அருகருகே முகம் பார்த்துக் கைப் பிடித்தவாக்கில் நின்றிருக்க, மற்றொரு பெண்மணி சற்று விலகி நின்று அவர்களைப் பார்த்திருந்தார். த‌ன் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஐஸ்க்ரீமைக் கண்ட குழந்தை கணக்காக தாராவின் கண்களில் வழியும் காதல் ஈஸ்வரனுக்குப் பிடித்தமானது, பெருமிதமானது. தனது அத்தனை வெற்றிகளையும் பிடித்த‌ பெண்ணின் பாதத்தில் சமர்ப்பித்து அவளது காதலை வென்றெடுப்பதையே ஓர் ஆண் ஆகச் சிறந்த பெருமையாகக் கருதுகிறான்! முலைகள் அழுந்தும் கூச்சமின்றி ஈஸ்வரனைக் கட்டி அணைத்துக் கொண்டாள் தாரா. அவன் பக்கல் கொழுப்பு செழித்த அவளது கன்னத்தில் மென்முத்தமிட்டுச் சொன்னான் - “பயப்படாதே! பத்திரமாப் போயிட்டு வா.” தாரா த...

பெருங்களிறு [குறுநாவல்] - 4

Image
பெருங்களிறு - பாகம் 1: தலை   பெருங்களிறு - பாகம் 2: உடல்   பெருங்களிறு - பாகம் 3: கால் *   பாகம் 4: வால் மனதால் தனித்து விடப்படும்போதுதான் கொடூரமான தனிமையை அனுபவிக்கிறோம். ஒரு நாள் இரவு தம்மா யோசித்தபடி படுத்திருந்தாள். இப்படி வீம்பில் எல்லோரையும் ஒதுக்கி எதை அடையப் போகிறேன்? சந்தா இத்தனை ஆண்டுகளும் தினம் புணர்ச்சி கண்டவள், காலைக் கடன் போல் கலவியும் தினசரிகளில் அங்கமாகி விட்ட ஒன்று. திடீரென ஒற்றை ராத்திரியில் இனி உடற்சுகம் கிடையாது என்று சொன்னால் என்ன செய்வாள்? அதுதான் தடுமாறி விட்டாள். மின்சாவும் இத்தனை நாளும் என் காலைக் கட்டிக் கொண்டு கிடந்தவன். எத்தனையோ முறை கெஞ்சி இருக்கிறான், நான்தான் கறாராகப் பிடிவாதமாக இருந்து விட்டேன். அப்படிப் பட்டினி போட்டதன் விளைவாக சந்தா அழைத்ததும் சலனப்பட்டு விட்டான். தனக்கு உரிமை இல்லாத பெண் கலவிக்கு அழைக்கும் போது பெரும்பாலும் ஆண் மறுப்பதே இல்லை. அது அவனுக்கு வாய்ப்பு, அது அவனுக்கான‌ அங்கீகாரம். தவிர‌, அப்போது மறுத்தால் அது அவனது இயலாமை என்றும் தூற்றப்படும். அதைத் தவிர்க்க ஆண் இயல்பாகவே இணங்கிப் போகிறான். அது மனமோ உடலோ, எப்போதும் உறவைத் தே...

பெருங்களிறு [குறுநாவல்] - 3

Image
பெருங்களிறு - பாகம் 1: தலை   பெருங்களிறு - பாகம் 2: உடல் *   பாகம் 3: கால் அமாவாசை இரவு நரதுவுக்கு நன்கு மதுவை ஊற்றிக் கொடுத்தாள் சந்தா. அன்று மிக உற்சாகமாகக் குடித்தான். வழக்க‌த்தை விட இரண்டு மடங்கு. வயிறு நிரம்பி விட்டது என்று சொல்லி உணவை மறுத்து விட்டுக் கலவிக்குத் தயாரானான். இடையிலேயே போதையில் மயங்கிச் சரிந்தான். அவனைத் தள்ளி விட்டு ஆடைகளைச் சரி செய்து அடுத்த அறைக்குப் போனாள் சந்தா. தம்மா உறங்கிக் கொண்டிருந்தாள். நீண்ட பயணம் இருக்கும் என்பதால் அவளைக் கொஞ்சம் தூங்கச் சொல்லி இருந்தாள். நள்ளிரவு கடந்திருந்தது. அவளை உலுக்கி எழுப்பினாள். தம்மா ஆழ்நித்திரைக்குள் செல்லாமல் புரண்டு கொண்டிருந்ததால் உடனே எழுந்து கொண்டாள். ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த மூட்டையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டாள். நிலவின் துணையற்ற அவ்விரவின் கைப் பற்றிப் பிரயாணத்துக்கு ஆயத்தமானாள். சந்தா கைகளில் விளக்கை எடுத்துக் கொண்டாள். குடிலில் இருந்து சப்தம் காட்டாமல் இருவரும் வெளியே வந்தார்கள். ரத்த நந்தகாவின் கொட்டகைக்கு வந்தார்கள். அங்கே மின்சாவும் மூட்டையுடன் தயாராக இருந்தான். அவனுக்கு அந்த‌ப் பயணமே ஒரு சா...